நையோபியம்(IV) புளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நையோபியம்(IV) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
13842-88-1 | |
பண்புகள் | |
NbF4 | |
வாய்ப்பாட்டு எடை | 168.9 கி/மோல் |
தோற்றம் | கருப்பு நிற திண்மம் |
உருகுநிலை | 350 °C (662 °F; 623 K) (சிதைவடையும்) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நையோபியம்(IV) புளோரைடு (Niobium(IV) fluoride) என்பது NbF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். கருப்பு நிறத்தில் ஆவியாகாத திண்மமாக இது காணப்படுகிறது. ஆவியை வலிமையாக ஈர்க்கும் இது ஈரக்காற்றில் NbO2F ஆக மாறுகிறது. தண்ணீருடன் வினைபுரிந்து பழுப்பு நிறக் கரைசலாகவும் வீழ்படிவாகவும் மாறுகிறது. இதனுடைய பகுதிப்பொருட்கள் அறியப்படவில்லை. வெற்றிடத்தில் 275 °செல்சியசு மற்றும் 375°செல்சியசு வெப்பநிலைக்கு சூடு படுத்தும்போது மட்டும் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. எனினும் 350°செல்சியசு வெப்பநிலையில் விகிதச்சமமாதலின்றி நையோபியம்(V) புளோரைடாகவும், நையோபியம்(III) புளோரைடாகவும் பிரிகையடைகிறது:
(at 350 °C)[1].
கட்டமைப்பு
[தொகு]நையோபியம்(IV) புளோரைடு வெள்ளீயம்(IV) புளோரைடின் கட்டமைப்பை ஒத்ததாக அமைந்துள்ள ஒரு படிக அமைப்பை ஏற்றுள்ளது. இவ்வமைப்பில் ஒவ்வொரு நையோபிய அணுவும் ஆறு புளோரின் அணுக்களால் சூழப்பட்டு எண்முக முக்கோணத்தை உருவாக்குகின்றன. ஒற்றை நையோபிய அணுக்கருவைச் சுற்றியுள்ள ஆறு புளோரின் அணுக்களில், நான்கு புளோரின்கள் அடுத்துள்ள எண்முக முக்கோணத்துடன் பாலம் அமைக்கின்றன. இது அடுக்குகளாக இணைக்கப்பட்ட எண்முகமுக்கோண கட்டமைப்பிற்கு வழிவகுக்கிறது[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 张青莲 (1981). 无机化学丛书. Beijing: Science Press. p. 323. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-03-002238-6.
- ↑ Redetermination of the crystal structure of NbF₄. Jascha Bandemehr, Matthias Conrad, and Florian Kraus. Acta Crystallogr E Crystallogr Commun. 2016 Aug 1; 72(Pt 8): 1211–1213. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4971875/