அவுரங்கசீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அவுரங்கசீப்
Aurangzeb

அவுரங்கசீப்

இயற்பெயர்: அபு முசாபர் முகையுதீன் முகாமது அவுரங்கசீப் ஆலம்கீர்
குடும்பப் பெயர்: டிமுரிட்
பதவிப்பெயர்: முகலாயப் பேரராசின் மன்னர்
பிறப்பு: நவம்பர் 3, 1618
பிறந்த இடம்: டாஹோட்
இறப்பு: மார்ச்சு 3 1707 (அகவை 88)
இறந்த இடம்: அஹ்மத்நகர்
சமாதி: Valley of Saints
பின் வந்தவர்: பகதூர் ஷா I
திருமணம்:
  • நவாப் பாய் பேகம்
  • தில்ராஸ் பானு பேகம்
  • பேகம் உதயபுரி
பிள்ளைகள்:

அவுரங்கசீப் முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார்.

பொருளடக்கம்

[தொகு] இளமைக்காலம்

[தொகு] தக்காணத்தால் ஏற்பட்டச் சிறப்பு

தென்னிந்தியாவின் நிலப்பகுதிகளை தக்காண பீடபூமி என்பர். வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் பிரிக்கும் விந்திய மலைத்தொடர்களைத் தாண்டி முகலாயப் படை தென்னிந்தியாவை வென்றுக் கொண்டிருந்தார்.1698-பிப்ரவரி 7-இல், அவுரங்கசீப்பின் தளபதி, சூல்பிகார் கான் தமிழகத்தின் செஞ்சியை வென்றார். அகமகிழ்ந்த பேரரசர் அவுரங்கசீப் அத்தளபதியையே, அப்பகுதிக்கு ஆளுநராக(நவாப்) ஆக்கினார். வெற்றிக் கொண்ட தென்னிந்தியப் பகுதிகளுக்கு தலைநகராக ஐதராபாத்தை என அறிவித்தார்.அத்தலைநகரில் இருந்து தென்னிந்தியாவை, தில்லியின் அவுரங்கசீப்பின் கீழ், அதிபராக(நிஜாம்=நிசாம்) இருந்து ஆட்சி செய்தவர்களே, ஐதராபாத் நிசாம்கள் என அழைக்கப் பட்டனர்.செஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், இன்றைய தமிழகம், ஆந்திரம், கன்னட மாநிலங்களின் பகுதிகளும் அதில் இணைந்திருந்தால், ஜீல்பிகார் கான் கர்நாடக நவாபு என்றே அப்போது அழைக்கப்பட்டார்.பின்னர், 1710 ஆம் ஆண்டில், ஆளுநராக (நவாப்) வந்த சதாத்துல்லாகான் (முகம்மது செய்யது) செஞ்சிக்கு பதிலாக, ஆற்காட்டை தலைநகரமாக மாற்றினார். அதனால், கர்நாடக நவாபு, ஆற்காட்டு நவாபு என அழைக்கப்பட்டார்.

இத்தகைய சிறப்பான ஆட்சி மேலாண்மை காரணமாகவே, அவுரங்கசீப் பேரரசரால், இந்தியாவின் பெரும்பகுதியை கட்டி ஆளமுடிந்தது. அதனாலேயே இப்பேரரசர், இந்தியாவை ஒருங்கிணைந்த முதல் பேரரசர் என்ற வரலாற்றுப் புகழை அடைந்தார்.

[தொகு] சகோதரப்போர்

சகோதரர்.jpg

கி.பி 1657 ம் ஆண்டு ஷாஜகான் நோயினால் படுத்த படுக்கையானார். அரசர் தரிசனம் கிடைக்காததால் அரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இந்தசெய்தி அவுரங்கசிப் காதையும் எட்டியது. உடனே ஆக்ராவிற்கு படையெடுத்தார். இந்தசெய்தி அறிந்த தரஷிகோவும் ஷாஜகானும் அவரை எதிர்த்து படையை அனுப்பினார்கள். ஆனால் விதி ஆரங்கசீபுக்கு ஆசி வழங்கியது. மிக மோசமாக தோல்வியை சந்தித்து டெல்லி படை. ஆக்ராவை கைப்பற்றியவுடன் சிறிதும் தாமதிக்காமல் டெல்லி விரைந்தது அவுரங்க்சீபின் படை. டெல்லியில் தாரஷிகோவின் படையை சின்னாப்பின்னப்படுத்தினார் அவுரங்கசீப். தாரஷிகோ படுதோல்வியடைந்து சிந்து பகுதியை நோக்கி பின்வாங்கினார். டெல்லியை கைப்பற்றியவுடனேயே ஷாஜகானை சிறைபிடித்தார். ஷாஜகான் எவ்வளவோ மன்றாடியும் அவரது ஒவ்வொரு வேண்டுதலையும் நிராகரித்தார். தனது மற்ற இரு சகோதரர்களான ஷா ஷுஜாவையும் முராதையும் முழுவதுமாக வெற்றிகொண்டு ஆலம்கீராக முடிசூட்டிக்கொண்டார்.

[தொகு] பேரரசர் ஆலம்கீர்

பேரரசர்.jpg

இவரது ஆட்சிகாலம் வரலாற்று ஆய்வாளர்களால் மிகுந்த விமரிசனத்திற்கு உட்பட்டதாகும். தனது ஆட்சியை கந்தகாரிலிருந்து தெற்கே செஞ்சி வரை விரிவுபடுத்தினார்.

அவுரங்கசீப்


[தொகு] சொந்த வாழ்க்கை

ஆலம்கீரின் வரலாறு

ஆலம்கீரின் சொந்தவாழ்க்கை மிக எளிமையானதாகும். தன்னை எப்பொழுதுமே கடவுளின் அடிமையாக பாவித்துக்கொண்டார். அரசு கஜானாவை தனது சொந்த செலவிற்கு இவர் பயன்படுத்தியது கிடையாது. தனக்காக ஆடம்பர செலவில் மாளிகைகள் கட்டியது இல்லை. தனது மரணத்திற்கு பின் தனது இறுதிசடங்கிற்கு கூட தன் வாழ்நாளில் திருகுரான் எழுதியும், தொப்பி தைத்தும் கிடைத்த சொந்த வருமானத்தை செலவழிக்க ஆணை இட்டதாக வரலாறு.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அவுரங்கசீப்&oldid=1090545" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்