யானைப் படை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யானைப் படை யானைகளைக் கொண்டு அமைக்கைப்பட்ட படை. போர்களில் பயன்படுத்து இவ்வகைப்படைகள் பழங்காலத்தில் இருந்தன. இப்படையில் உள்ள யானைகள் போர்செய்யத்தக்க வண்ணம் பயிற்சி அளிக்கப்பட்டவையாக இருக்கும். இவை வேலிகள் கூடாரங்கள் போன்ற பெரிய தடைகளை தகர்க்கக்கூடியவை. யானையின் கொம்புகளில் வாள்கள் அல்லது கிம்புரிகள் கட்டப்பட்டிருக்கும். யானையின் முதுகின் மேல் காப்பரண் அமைத்து அதில் இருந்து வீரர்கள் அம்பு எறிவர். போரில் ஈடுபடும் யானைகளுக்கு மதம் ஊட்டி (தேம் அல்லது மத்தம் ஊட்டி), மிகுந்த வெறியுடன் இயக்குவர்.
உசாத்துணைகள் [தொகு]
- ந. சி. கந்தையா பிள்ளை. (2006). தமிழர் பண்பாடு. அப்பர் அச்சகம்: சென்னை.