கருங்கல் (பாறை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கருங்கல் என்பதே இங்கே மீள்வழிப்படுத்தப்படுகிறது. கருங்கல் என்ற ஊரை குறித்த கட்டுரையை பார்ப்பதற்கு, காண்க: கருங்கல் (ஊர்)
கருங்கல், புவிப்பரப்புக்கு மேல் பரவலாகக் காணப்படும் தீப்பாறை வகைகளுள் ஒன்றாகும். இது இடைநிலையான அல்லது கரடுமுரடான மேற்பரப்புத் தன்மை கொண்டது. சிலசமயங்களில் பெரிய, தனியான படிகங்களையும் இது உள்ளடக்கி இருப்பதுண்டு. கருங்கற்கள், அவற்றின் வேதியியல் மற்றும் கனிமவியற் தன்மைகளைப் பொறுத்து, இளஞ்சிவப்பு முதல் கடும் சாம்பல் அல்லது கறுப்பு நிறமாக இருக்கலாம்.
கருங்கல் பெரும்பாலும் அளவிற் பெரிதாகவும், கடினமானதாகவும் இருக்கும். இதனால் கட்டுமானத்துறையில் இது பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றது. சராசரியாக 2.75 கி/சமீ3 அடர்த்தியைக் கொண்ட இது 1.74 கி/சமீ3 தொடக்கம் 2.80 கி/சமீ3 வரையான அடர்த்திகளில் கிடைக்கின்றது.