யூ டெலிகாம்
Appearance
நிறுவுகை | 2008 |
---|---|
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
முதன்மை நபர்கள் | ஈ வி எஸ் சக்கரவர்த்தி (மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி) |
தொழில்துறை | இணையச் சேவை வழங்குனர் |
உற்பத்திகள் | கம்பிவட அகலப்பட்டை, கம்பியில்லா அகலப்பட்டை |
இணையத்தளம் | www |
யூ அகலப்பட்டை & கம்பி வடம் இந்தியா லிமிடெட் (YOU Broadband & Cable India Limited) மும்பையிலிருந்து இயங்கும் ஓர் அகலப்பட்டை இணையச் சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்தியாவில் 13 நகரங்களில் ஒளியிழை-ஓரச்சு கலப்பு (HFC) கம்பி வடம் மூலமாக அகலப்பட்டை இணையச் சேவைகள் வழங்கி வருகிறது. 600,000 வீட்டு/நிறுவன பயனாளர்களுக்குச் சேவை வழங்கி வருகிறது. இதன் மேலாண்மை இயக்குநராக ஈ.வி.எஸ்.சக்கரவர்த்தி பணி புரிகிறார்.[1] இந்நிறுவனம் பிஜி குழுமம் என்ற பிரித்தானிய எரிவளி நிறுவனத்தின் துணை நிறுவனமாக இது இக்காரா டெலிகாம் இந்தியா என அறியப்பட்டிருந்தது. 2006ஆம் ஆண்டு சிட்டி குழுமத்தின் பன்னாட்டு இடர்மிகு புத்தொழில் முதலீடு நிறுவனம் கையகப்படுத்தி[1] இதன் பெயரை யூ டெலிகாம் என மாற்றியது. தற்போது இது யூ அகலப்பட்டை & கம்பி வடம் இந்தியா லிமிடெட் என பெயரிடப்பட்டுள்ளது.
சான்றுகோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Tantis buy 49% in You Telecom arm". Business-standard.com. 9 December 2008. பார்க்கப்பட்ட நாள் 16 July 2010.