தஞ்சாவூர் லெட்சத்தோப்பு ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சாவூர் லெட்சத்தோப்பு ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில்

தஞ்சாவூர் லெட்சத்தோப்பு ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் மருத்துவக்கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது.

தேவஸ்தான கோயில்[தொகு]

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]

மூலவர்[தொகு]

சுமார் நான்கு அடி உயரமுள்ள மூலவரான ஜெயவீர ஆஞ்சநேயர் கம்பீரமாக வடக்கு நோக்கி செல்பவர் போல அமைக்கப்பட்டுள்ளார். அவரின் இரு திருப்பாதங்களில் பாதஜலகாவும், தண்டையும் காணப்படுகின்றன. வரது ஓரத்தில் அழகிய கத்தி உறையுடன் காணப்படுகிறது. இடது கரம் தாமரைத் தண்டை பிடித்த நிலையில் உள்ளது. பரந்த மார்பில் மணி மாலையும் முப்புரி நூலும் காணப்படுகின்றன. காதில் குண்டலம் காணப்படுகிறது. [3] மூலவர் சன்னதிக்கு வலப்புறம் துளசி மாடம் உள்ளது.

குடமுழுக்கு[தொகு]

25 நவம்பர் 1968இலும், அடுத்து 26 சூன் 2013இலும் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 வ.எண்.17
  2. J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur
  3. 3.0 3.1 தஞ்சாவூர் அனுமார் கோயில்கள், வாயுசுதா வெளியீடு, தில்லி 110 092