செபராங் பிறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செபராங் பிறை
அக்கரை
மாநகரம்
City of Seberang Perai
Bandaraya Seberang Perai
Skyline of செபராங் பிறை அக்கரை
Map
செபராங் பிறை (சிவப்பு)
மலேசியத் தீபகற்பம்
ஆள்கூறுகள்: 5°24′N 100°28′E / 5.400°N 100.467°E / 5.400; 100.467
நாடுமலேசியா
மாநிலம்பினாங்கு
பிரித்தானியப் பேரரசு17 ஜூலை1786 - 31 ஆகஸ்ட் 1957
சப்பானியப் பேரரசு19 டிசம்பர் 1941 - 3 செப்டம்பர் 1945
மலேசியா31 ஆகஸ்டு 1957
மாநகரம்16 செப்டம்பர் 2019
செபராங் பிறை மாநகராட்சி1976
தலைநகரம்பட்டர்வொர்த்
அரசு
 • செபராங் பிறை நகராட்சி மேயர்அசார் அர்சாட்
(Azhar Arshad)
பரப்பளவு
 • மொத்தம்751 km2 (290 sq mi)
மக்கள்தொகை (ஜுலை 2018)
 • மொத்தம்946,200
 • அடர்த்தி1,089.5/km2 (2,822/sq mi)
அஞ்சல் குறியீடு12xxx to 14xxx
இணையதளம்http://mpsp.gov.my/
1818-ஆம் ஆண்டு வரைபடத்தில் ஜார்ஜ் டவுன் நகரத்தில் இருந்து ஓர் அடிவானத் தோற்றம்.

செபராங் பிறை; (மலாய்: Bandaraya Seberang Perai; ஆங்கிலம்: City of Seberang Perai; சீனம்: 威省; ஜாவி: سبرڠ ڤراي‎) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாநகரம். பினாங்கு தீவுக்கு எதிரே அக்கரையில் அமைந்துள்ளது. இந்த மாநகரத்திற்கு வடக்கு - கிழக்கு திசைகளில் கெடா மாநிலம்; தெற்கில் பேராக் மாநிலம்; எல்லைகளாகக் கொண்டு உள்ளன.[1]

இந்த மாநகரத்தின் நகர மையம் பட்டர்வொர்த். இதன் உள்ளூர் நிர்வாகத்திற்குப் புக்கிட் மெர்தாஜாம் நகரில் உள்ள செபராங் பிறை மாநகராட்சி பொறுப்பு வகிக்கிறது. முன்பு செபாராங் பிறை ஒரு மாவட்டமாக இருந்தது. ஆனால் 2019 செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி செபராங் பிறைக்கு மாநகரம் என தகுதி உயர்த்தப்பட்டது.[2].

2019-ஆம் ஆண்டு நிலவரப்படி, செபராங் பிறை மக்கள் தொகை 946,200 ஆக இருந்தது. அந்த வகையில் மலேசியாவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநகரமாகவும் மாறியது.

வரலாறு[தொகு]

19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெல்லஸ்லி மாநிலம் (இப்போது செபராங் பிறை) பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் மூலம் படிப்படியாகக் கையகப்படுத்தப்பட்டது. 1850-களில் பட்டர்வொர்த் நகரம் 'பிராவின்ஸ் வெல்லஸ்லி' மாநிலத்திற்குள் ஒரு முக்கிய நகரமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. [3][4]

செபராங் பிறை நிலப்பகுதி[தொகு]

மலாயாவின் 1957-ஆம் ஆண்டுச் சுதந்திரத்திற்குப் பின்னர், பல பத்தாண்டுகளாக செபராங் பிறை நிலப்பகுதி, கணிசமான அளவிற்குப் பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது.[5]

செபராங் பிறையில் பாரிய தொழில்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. 1974-ஆம் ஆண்டில் பினாங்கு துறைமுகத்தின் முக்கிய நடவடிக்கைகளை பட்டர்வொர்த்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதனால் செபராங் பிறை நகரத்தின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.

வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பினாங்கு பாலம்; மற்றும் பினாங்கு இரண்டாவது பாலம் போன்ற பல முக்கிய திட்டங்களால் செபராங் பிறையின் இணைப்புகளும்; போக்குவரத்துகளின் கட்டமைப்புகளும் எளிதாக்கப்பட்டு உள்ளன. அதனால் இன்று, மலேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான பினாங்கின் ஒரு பகுதியாகச் சிறப்பு பெறுகிறது.[6]

சொல் பிறப்பியல்[தொகு]

இன்றைய செபராங் பிறை மாநகரத்தைக் கொண்ட நிலப்பகுதி, முன்னர் காலத்தில் கெடாவின் ஒரு பகுதியாக இருந்தது. 1800-ஆம் ஆண்டில் அந்த நிலப்பகுதி பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரித்தானியர் அந்த நிலப்பகுதியை வெல்லசுலி மாநிலம் (Province Wellesley) என்று பெயரிட்டனர். 1867-ஆம் ஆண்டில் பிரித்தானிய முடியாட்சியின் காலனியாக மாற்றப்பட்டது.

1797-ஆம் ஆண்டில் இருந்து 1805-ஆம் ஆண்டு வரை ரிச்சர்டு வெல்லசுலி (Richard Wellesley) என்பவர் மெட்ராஸ் மாநில ஆளுநராகவும்; வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாகவும் பணியாற்றியவர். அவரின் நினைவாக, செபராங் பிறைக்கு புரோவின்ஸ் வெல்லசுலி என்று பெயரிடப்பட்டது. செபராங் பிறையின் பழைய பெயர் புரோவின்ஸ் வெல்லசுலி.[7][8]

பட தொகுப்பு[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Portal Rasmi Pejabat-Pejabat Daerah Dan Tanah Pulau Pinang - Seberang Perai Tengah". portalpdt.penang.gov.my. பார்க்கப்பட்ட நாள் 29 April 2024.
  2. "From 16th September 2019, the Municipal Council of Seberang Perai (MPSP) has been officially declared as Seberang Perai City Council (MBSP), with all the rights of a city". www.mbsp.gov.my. பார்க்கப்பட்ட நாள் 29 April 2024.
  3. "History". www.mpsp.gov.my (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-29.
  4. "Province Wellesley or Seberang Perai? - anilnetto.com" (in en-GB). anilnetto.com. 2014-11-18. http://anilnetto.com/society/malaysian-history/old-penang/province-wellesley-seberang-perai/. 
  5. Seberang Prai has come a long way from a sleepy cowboy town, it comes across a bustling and developing giant. Many major developments are now focused in Seberang Prai which has been touted as Penang's catalyst for growth in the 21st century.
  6. With a more organized and complete road network, Seberang Perai has the potential to be a growth area and is the future for the state of Penang.
  7. Waite, Arthur Edward (2007). A New Encyclopedia of Freemasonry. Vol. vol. I. Cosimo, Inc. p. 400. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60206-641-0. {{cite book}}: |volume= has extra text (help)
  8. "WELLESLEY, Richard Colley, 2nd Earl of Mornington [I] (1760-1842), of Dangan Castle, co. Meath". History of Parliament. பார்க்கப்பட்ட நாள் 29 Dec 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செபராங்_பிறை&oldid=3942785" இலிருந்து மீள்விக்கப்பட்டது