1720கள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1720கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1720ஆம் ஆண்டு துவங்கி 1729-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
1720
- பெப்ரவரி 11 - சுவீடன், புரூசியா ஆகியன ஸ்டாக்கோம் நகரில் பெரும் வடக்குப் போர் தொடர்பாக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தின.
- பெப்ரவரி 17 - தி ஹேக் நகரில் எசுப்பானியா, பிரித்தானியா, பிரான்சு, ஆஸ்திரியா, டச்சுக் குடியரசு ஆகியன நான்முனை போரை முடிவுக்குக் கொண்டு அவர் உடன்பட்டன.[1]
- ஐரோப்பியக் குடியேற்றத்தைத் தொடர்ந்து துஸ்கரோரா மக்கள் வட கரொலைனாவில் இருந்து வெளியேறினர்.
- எட்மண்டு ஏலி இங்கிலாந்துக்கான அரச வானியலாளராக நியமிக்கப்பட்டார்.
- ஜோனதன் ஸ்விப்ட் கலிவரின் பயணங்கள் புதினத்தை எழுத ஆரம்பித்தார்.
1721
- ஏப்ரல் - ரீயூனியனில் கடல் கொள்ளையர்கள் 700-தொன் எடையுள்ள போர்த்துக்கீசியப் போர்க்கப்பலைக் கடத்தினர். கோவாவில் இருந்து வந்த இக்கப்பலில் £100,000 முதல் £875,000 வரையான பெறுமதி மிக்க பொருட்கள் இருந்தன.[2]
- மே 8 - பதின்மூன்றாம் இனசென்ட் 244வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- செப்டம்பர் 10 - பெரும் வடக்குப் போர் முடிவுற்றது.
- நவம்பர் 2 - முதலாம் பீட்டர் அனைத்து உருசியாக்களின் பேரரசராக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் 176-ஆண்டுகால உருசியாவின் சாராட்சி முடிவுக்கு வந்து உருசியப் பேரரசு உருவானது. இப்பேரரசு 1917 இல் கலைந்தது.
1722
- பெப்ரவரி 26 - யாழ்ப்பாணத்தின் தளபதியாக யாக்கோப் டெ யொங் (மூத்தவர்) நியமிக்கப்பட்டார்.
- மார்ச் 8 - ஈரானின் குல்னாபாத் நகரில் ஆப்கானித்தானின் மகுமுது ஒட்டாக் தலைமையில் பஷ்தூனியர்கள் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.
- ஏப்ரல் 5 (உயிர்ப்பு ஞாயிறு) - டச்சு இராணுவத் தலைவர் யாக்கோப் ரொகெவீன் ஈஸ்டர் தீவில் தரையிறங்கினார்.
- சூலை - உருசிய-பாரசீகப் போர் ஆரம்பித்தது.
- ஆகத்து 15 - பென்சில்வேனியாவில் வில்ல்லியம் பாட்டின், 17, கொலைக்குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டான்.
1723
- சூலை - மத்தியூச்கின் தலைமையில் உருசிய இராணுவம் பக்கூ நகரைக் கைப்பற்றியது.
- ஆகத்து - சென் பீட்டர்ஸ்பேர்க் நகருக்கு வெளியே பெத்தர்கோர்ஃப் அரண்மனை அமைக்கப்பட்டது.
- செப்டம்பர் 1 - சென். பீட்டர்ஸ்பேர்க் உடன்படிக்கை எழுதப்பட்டது.
1724
- சனவரி 14 - எசுப்பானியாவின் மன்னர் ஐந்தாம் பிலிப்பு பதவி துறந்தார். அவரது 16-வயது மகன் முதலாம் லூயிசு புதிய அரசனானான்.
- மே 29 - பதின்மூன்றாம் பெனடிக்டு 245வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- சூன் 23 - பாரசீகத்திற்கும், உதுமானியப் பேரரசு, மற்றும் உருசியாவுக்கும் இடையில் கான்ஸ்டன்டீனப்போல் நகரில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- ஆகத்து 31 - 7 மாதங்களே பதவியில் இருந்த எசுப்பானியாவின் முதலாம் லூயிசு மன்னன் தனது 17வது அகவையில் பெரியம்மை நோய் கண்டு இறந்தான். அவனது தந்தை ஐந்தாம் பிலிப்பு மீண்டும் மன்னனாக முடிசூடினார்.
- நவம்பர் 16 - உருசியாவின் முதலாம் கேத்தரீன் அரசியின் காதலன் வில்லெம் மொன்சு தூக்கிலிடப்பட்டான்.
- சீனா வெளிநாட்டு மதப்பரப்புனர்களை வெளியேற்றியது.
- ஆப்கானித்தானின் ஷா மன்னர் மகுமுது ஒட்டாக்கி பித்தரானார்.
- இங்கிலாந்தின் மிகப்பழமை வாய்ந்த லோங்மேன் பதிப்பகம் நிறுவப்பட்டது.
- பாரன்ஃகைட் அலகு அறிமுகப்படுத்தப்பட்டது.
- வெள்ளித் தூளும், சுண்ணத் தூளும் கலந்த கலவை, ஒளி படும்போது கரு நிறமாக மாறுகின்றது என்பதை யோகான் ஐன்றிச் சூல்ட்சு கண்டுபிடித்தார்.
1725
- பெப்ரவரி 8 - முதலாம் பீட்டர் இறந்ததை அடுத்து உருசியாவின் அரசியாக அவரது மனைவி முதலாம் கேத்தரின் முடிசூடினார்.
- செப்டம்பர் 16 - பெரிய பிரித்தானியா, பிரான்சு, புருசியா ஆகிய நாடுகளுக்கிடையே அனோவர் நகரில் உடன்படிக்கை கையெழுத்தானது.
- இங்கிலாந்தின் வாப்பிங்கு நகரில் 70 வீடுகள் தீயினால் சேதமடைந்தன.
- சிங் மரபு சீனாவில் 5,020 பாகங்கள் அடங்கிய நீண்ட கலைக்களஞ்சியத்தின் 66 பிரதிகள் அச்சிடப்பட்டன.
- 1725-1730 - பிரான்சில் விடுதலைக் கட்டுநர் நிறுவப்பட்டது.
1726
- ஏப்ரல் 15 - ஐசாக் நியூட்டன் ஈர்ப்பு விசைக் கொள்கையைத் தாம் எவ்வாறு உருவாக்கினார் என்பதை வில்லியம் ஸ்டூக்கெலி என்பவரிடம் கூறினார்.
- மே 1 - வோல்ட்டயர் நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்தில் வாழத் தொடங்கினார்.
- அக்டோபர் 26 - ஜோனதன் ஸ்விப்ட்டின் கலிவரின் பயணங்கள் புதினம் முதன் முறையாக இலண்டனில் வெளியிடப்பட்டது. ஒரே வாரத்தில் அனைத்துப் பிரதிகளும் விற்று முடிந்தன.
- டிசம்பர் 24 - மொண்டேவீடியோ நகரம் அமைக்கப்பட்டது.
- அலோசியுஸ் கொன்சாகா புனிதராக அறிவிக்கப்பட்டார்.
- பேட்ரசு வைஸ்ட் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் இலங்கையின் ஆளுனராக நியமிக்கப்பட்டார்.
1727
- பெப்ரவரி - எசுப்பானியா ஜிப்ரால்ட்டரை மீளக் கைப்பற்றும் நோக்கோடு அதனை முற்றுகையிட்டது.[3]
- சூன் 11 - இரண்டாம் ஜார்ஜ் மன்னரின் இறப்பை அடுத்து வேல்சு இளவரசர் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னரானார்.[4]
- செப்டம்பர் 8 - இங்கிலாந்தின் பர்வெல் கிராமத்தில் இடம்பெற்ற ஒரு களியாட்டவிழாவில் தீப்பற்றியதில் பெருமளவு சிறுவர்கள் உட்பட 78 பேர் உயிரிழந்தனர்.
- நவம்பர் 9 - எசுப்பானியா, பிரான்சு, இங்கிலாந்து ஆகியன செவீயாவில் உடன்பாட்டை எட்டின.
- நவம்பர் 18 - பாரசீகத்தின் தாசுரிசு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 77,000 பேர் உயிரிழந்தனர்.
- ஆமிசு மக்கள் வட அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்.
- 1727-1800 - லெப். கேணல் பிரான்சிஸ்கோ டெ மெல்லோ பால்கெட்டா என்பவர் காப்பி விதைகளை பிரேசிலுக்குக் கடத்தினார்.
1728
- சூலை 14-ஆகத்து 14 - விட்டஸ் பெரிங் கம்சாத்கா தீபகற்பத்தில் இருந்து வடக்கே பெரிங் நீரிணைக்குப் பயணமானார்.
- இங்கிலாந்தில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த வோல்ட்டயர் தனது சிறைக்காலத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
- அக்டோபர் 20-அக்டோபர் 23 - கோபனாவன் நகரம் எரிந்ததில் நகரின் 28% அழிந்தது.
- ஆங்கிலேய வானியலாளர் ஜேம்சு பிராட்லி வானியல் தோற்றப்பெயர்வைக் கொண்டு ஒளியின் வேகத்தைக் கணித்தார்.[5]
- கியூபாவின் அவானா நகரில் அவானா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- பிரெடரிக், வேல்சு இளவரசர் தனது 21வது அகவையில் முதற்தடவையாக பிரித்தானியா வந்தார்.
- வீரமாமுனிவர் இயற்றிய பரமார்த்த குருவின் கதை நூலாக வெளிவந்தது.
1729
- சூலை 25 - கரொலைனா மாகாணத்தின் எட்டு நில உரிமையாளர்கள் தமது நிலங்களை பிரித்தானிய அரசுக்கு விற்றனர். மாகாணம் வட கரொலைனா, தென் கரொலைனா என இரண்டு குடியேற்ற நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.
- சூலை 30 - பால்ட்டிமோர் அமைக்கப்பட்டது.
- ஆகத்து 1 - அதிக தோற்ற ஒளிப்பொலிவெண்ணைக் கொண்டதும், மிகப் பெரியதுமான 1729 இன் வால்வெள்ளி, மர்சேய் கணிதப் பேராசிரியர் நிக்கொலாசு சரபாத் எனபவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- செப்டம்பர் 29-அக்டோபர் 5 - நாதிர் ஷா தலைமையிலான பாரசீகப் படைகள் ஆப்கான் மற்றும் கூட்டுப்படைகளை டம்கான் சண்டையில் தோற்கடித்தது.
- நவம்பர் 9 - பெரிய பிரித்தானியா, பிரான்சு, எசுப்பானியா, டச்சுக் குடியரசு ஆகியவற்றுக்கிடையில் செவீயா உடன்பாடு எட்டப்பட்டது.[6]
- நவம்பர் 29 - மிசிசிப்பியில் நாட்ச்செசு பழங்குடி மக்கலினால் 138 பிரெஞ்சு ஆண்கள், 35 பிரெஞ்சுப் பெண்கள், 56 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
- இசுதான்புல்லில் ஏற்பட்ட தீயில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.
- ஒல்லாந்தர் கால இலங்கையின் ஆளுனராக இசுட்டெபானெசு வெர்சுலசு நியமிக்கப்பட்டார்.
போர்கள்
[தொகு]- மேயினில் டம்மர் போர் (1722)
- உருசிய-பாரசிகப் போர், (1722-1727)
- இரண்டாவது ஃபொக்ஸ் போர், (1728–1737)
பேரரசர்கள்
[தொகு]- பதினைந்தாம் லூயி, (பிரெஞ்சு மன்னன், 1715-1774)
- நான்காம் சார்ல்ஸ், புனித ரோமப் பேரரசன் (1711–1740)
- புருசியாவின் முதலாம் பிரெடெரிக் வில்லியம், புருசியா அரசன்
- ஜோர்ஜ் I, பிரித்தானிய அரசன் (1714-1727)
- ஜோர்ஜ் II, பிரித்தானிய அரசன் (1727-1760)
- பிலிப்பு V, ஸ்பெயின் மன்னன் (1700-1746)
- சத்திரபதி சாகு, மரதப் பேரரசன் (1707-1749)
- முகம்மது ஷா, முகலாயப் பேரரசன் (1720-1748)
நபர்கள்
[தொகு]- வள்ளல் சீதக்காதி, (1650-1720)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 297–298. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ Breverton, Terry (2004). Black Bart Roberts: The Greatest Pirate of Them All. Gretna, LA: Pelican Publishing. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58980-233-0.
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. p. 301. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ Everett, Jason M., ed. (2006). "1727". The People's Chronology. Thomson Gale.
- ↑ Delambre, J. B. (1827). Histoire de l'astronomie au dix-huitième siècle. Paris: Bachelier.
- ↑ William L. R. Cates (1863). The Pocket Date Book. Chapman and Hall.