யோகான் ஐன்றிச் சூல்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யோகான் ஐன்றிச் சூல்ட்சு
Johann Heinrich Schulze.gif
யோகான் ஐன்றிச் சூல்ட்சு
பிறப்பு12 மே 1687
இறப்பு10 அக்டோபர் 1744
தேசியம்செருமானியர்
பணியிடங்கள்அல்ட்டார்ஃப்
ஆலே
கல்வி கற்ற இடங்கள்அல்ட்டார்ஃப்
அறியப்படுவதுவெள்ளிக் குளோரைடு, வெள்ளி நைத்திரேட்டு போன்ற சில வெள்ளியின் உப்புக்கள், ஒளிபடும்போது கருமையாக மாறுகின்றன என்னும் இவரது கண்டுபிடிப்பு.
பின்பற்றுவோர்யோசெப் நிசிபோர் நியெப்சு

யோகான் ஐன்றிச் சூல்ட்சு (Johann Heinrich Schulze, 12 மே 1687 - 10 அக்டோபர் 1744) என்பவர், மக்தபர்க் டியூச்சியில் உள்ள கோல்பிட்சு என்னும் இடத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியரும் பல்துறை அறிஞரும் ஆவார். சுல்ட்சு மருத்துவம், வேதியியல், மெய்யியல், இறையியல் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்த பின்னர், ஆல்ட்டோர்ஃபிலும், ஆலேயிலும் உடற்கூற்றியலுக்கும், மேலும் பல துறைகளுக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புக்கள்[தொகு]

வெள்ளிக் குளோரைடு, வெள்ளி நைத்திரேட்டு போன்ற சில வெள்ளியின் உப்புக்கள், ஒளிபடும்போது கருமையாக மாறுகின்றன என்னும் இவரது கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமான ஒன்று. 1724ல் இவர் செய்த ஆய்வு ஒன்றின் மூலம், கலப்பற்ற வெள்ளியிலும் பார்க்க, வெள்ளியும் சுண்ணத்தூளும் கலந்த கலவை குறைவான ஒளியையே த்ரிக்கின்றது எனக் கண்டார். இவரத்யு இந்தக் கண்டுபிடிப்பு பிற்காலத்தில் ஒளிப்படங்களின் கண்டுபிடிப்புக்கு வித்திட்டது.