உள்ளடக்கத்துக்குச் செல்

இசுட்டெபானெசு வெர்சுலசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுட்டெபானெசு வெர்சுலசு
Stephanus Versluijs
21வது ஒல்லாந்தர் கால இலங்கையின் ஆளுனர்
பதவியில்
27 ஆகத்து 1729 – 25 ஆகத்து 1732
முன்னையவர்பேட்ரசு வைஸ்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 20, 1694
இறப்புபெப்ரவரி 27, 1736(1736-02-27) (அகவை 41)

இசுட்டெபானெசு வெர்சுலசு (ஆங்கிலம்:Staphanus Versluys; 20 ஆகத்து 1694, மிட்டில்பர்க் – 27 பிப்ரவரி 1736, பத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகள்), ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில், 1729 ஆம் ஆண்டு முதல் 1732 வரை ஒல்லாந்தர் கால இலங்கையின் 21ஆவது ஆளுனராக இருந்தார். கொடுங்கோல் ஆட்சி நடத்தி இறுதியில் மரணதண்டனை பெற்ற ஆளுனர் பேட்ரசு வைஸ்டுக்குப் பின்னர் இவர் பதவியேற்றார். இவரும் மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு செயலாற்றவில்லை. அதிக இலாபம் பெறும் பேராசை காரணமாக, சாதாரண மக்களால் வாங்குவதற்கு முடியாதபடி அரிசியின் விலையை உயர்த்தியதால், செயற்கையாகவே நாட்டில் பஞ்சத்தை உருவாக்கினார்.

உசாத்துணைகள்

[தொகு]