ஆமிஷ் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆமிஷ் மக்களின் பாரம்பரியக் குதிரை வண்டிப் பயணம்

ஆமிஷ் மக்கள் (Amish) தீவிரமான கிறித்துவத்தைப் பின்பற்றும் மக்கள் ஆவர். இவர்கள் அமெரிக்காவின் பென்ஸில்வேனியா, ஒஹையோ மற்றும் இண்டியானா ஆகிய மூன்று மாகாணங்களில் அதிக அளவு வாழ்கின்றனர். மிகவும் எளிமையான வாழ்க்கையை இவர்கள் கடைபிடிக்கின்றனர். மின்சாரப் பொருட்கள், நவீன அறிவியல் உபகரணங்கள் எதையும் இவர்கள் உபயோகப்படுத்துவதில்லை.

வரலாறு[தொகு]

கி.பி.1690ளில் ஐரோப்பாவின் ஸ்விட்ஸர்லாந்தில் வாழ்ந்து வந்த கிறிஸ்துவர்களில் ஒரு பிரிவினர் சக கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவ மதத்தை சரியாகப் பின்பற்றவில்லை என்று தனியாக பிரிந்து சென்றனர்.[1] ஜேகோப் அம்மான் என்பவர் தலைமையில் இப்படி உருவான இந்த கிறிஸ்துவப் பிரிவுவானது பிற்காலத்தில் ஆமிஷ் என்ற பெயரை பெற்றது. [2]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kraybill 2001, பக். 7–8.
  2. Kraybill 2001, பக். 8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமிஷ்_மக்கள்&oldid=1600066" இருந்து மீள்விக்கப்பட்டது