உள்ளடக்கத்துக்குச் செல்

பரமார்த்த குருவின் கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரமார்த்த குருவின் கதை என்னும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பெற்ற தழுவு நூல் ஆகும். இந்த நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை வீரமாமுனிவர் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப பெயர்த்தார்.

1728-இல் புதுவையில் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் முதன்முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்டது.

இக்கதையில் மிளிர்ந்த நகைச்சுவை, மக்களைப் பெரிதும் கவர்ந்ததால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னக மொழிகள் பலவற்றிலும் இது வெளிவந்தது.

நூலின் முக்கியத்துவம்

[தொகு]

இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். ஆசிரியரின் காலமான 17-ஆம் நூற்றாண்டில், உரைநடையாக்கம் என்பது அரிதாகவே பின்பற்றப்பட்டது. அனைத்துத் தமிழ் வெளிப்பாடுகளும், பெரும்பாலும் கவிதை நடையிலேயே இருந்தன. பாமரரும் பிறரும் தமிழைக் கற்க, இவரது ஆக்கங்கள் இருந்தன என்பதற்கு இக்கதையே சான்றாகும்.

கதைக் களம்

[தொகு]

அதிவிவேக குருவுக்கு மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்ற ஐந்து சீடர்கள். இவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களையே இந்நூல் நகைச்சுவையோடு விவரிக்கின்றது.

சில வரிகள்

[தொகு]

பரமார்த்த குருவின் குதிரையை வர்ணித்து எழுதிய கவிதை :

"முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிழுக்க
பின்னிருந் திரண்டுபேர் தள்ள - எந்நேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காதம் வழி"

பிற இணைய இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமார்த்த_குருவின்_கதை&oldid=3658829" இலிருந்து மீள்விக்கப்பட்டது