1729 இன் வால்வெள்ளி
Appearance
கண்டுபிடிப்பு | |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்): | நிக்கொலாசு சரபாத் |
கண்டுபிடித்த நாள்: | ஆகத்து 1, 1729 |
வேறு குறியீடுகள்: | C/1729 P1, 1729, 1729 இன் வால்வெள்ளி |
சுற்றுவட்ட இயல்புகள் A | |
ஊழி: | 2352731.148 (சூன் 16, 1729) |
ஞாயிற்றண்மைத் தூரம்: | 4.05054 வா.அ[1] |
மையப்பிறழ்ச்சி: | 1 (அனுமானம்) |
சாய்வு: | 77.095°[1] |
கடைசி அண்மைப்புள்ளி: | சூன் 16, 1729[1] |
அடுத்த அண்மைப்புள்ளி: | தெரியவில்லை |
1729 இன் வால்வெள்ளி (Comet of 1729, அல்லது C/1729 P1 அல்லது சரபாத் வால்வெள்ளி (Comet Sarabat) என்பது காலச்சுழற்சி அற்ற ஒரு வால்வெள்ளி ஆகும். தனி ஒளிப்பொலிவெண் −3[2] என்ற எண்ணைக் கொண்ட இவ்வால்வெள்ளி இதுவரை அவதானிக்கப்பட்டவற்றுள் ஒளிர்ப்புக் கூடியதாகும்.[3] எனவே இதுவே இதுவரை காணப்பட்ட வால்வெள்ளிகளுள் மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது.[4]
கண்டுபிடிப்பு
[தொகு]இந்த வால்வெள்ளி எக்கூலியசு என்ற விண்மீன் குழாமில் இருப்பதை நிக்கொலாசு சரபாத் என்ற குருவானவர் கண்டுபிடித்தார். மர்சேய் பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியரும், இயேசு சபையைச் சேர்ந்தவருமான இவர் 1729 ஆகத்து 1 இல் அதிகாலையில் இதனைக் கண்டுபிடித்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "JPL Small-Body Database Browser: C/1729 P1". Jet Propulsion Laboratory. சனவரி 16, 1730. பார்க்கப்பட்ட நாள் சூலை 26, 2011.
- ↑ Kidger, M. 'Comet Hale-Bopp Light Curve', NASA JPL, 24-Nov-2008 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சீசர் வால்வெள்ளி (C/-43 K1) −3.3 தனி ஒளிப்பொலிவெண் கொண்டதாக இருந்தது; cp. John T. Ramsey & A. Lewis Licht, The Comet of 44 B.C. and Caesar's Funeral Games, Atlanta, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7885-0273-5.
- ↑ Moore, P. The Data Book of Astronomy, CRC, 2000, p.232
- ↑ Lynn, W. T. 'Sarrabat and the comet of 1729', The Observatory, Vol. 19, p. 239–240 (1896).