வத்திராயிருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வத்றாப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வத்திராயிருப்பு
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 15 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

வத்றாப் (Watrap) அல்லது வத்திராயிருப்பு (Vathirairuppu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வத்திராயிருப்பு மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் பாதையில் மதுரையிலிருந்து 70 கி.மீ தொலைவிலும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 20கி.மீ தொலைவில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,999 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வத்திராயிருப்பு மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட அதிகம். வத்திராயிருப்பு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பெயர்க்காரணம்[தொகு]

ஸ்ரீமகாலட்சுமி தாயார் இத்தலத்தில்தான் தவம் செய்தார். எனவே ஸ்ரீ (திருமகள்) "வக்த்ரம்' (திருமுகம்) என்பது "ஸ்ரீவக்த்ரபுரம்' என்று அழைக்கப்பட்டது, இதுவே மருவி தற்போது வத்திராயிருப்பு என்று அழைக்கப்படுகிறது.[4]

ஊரில் திருமகள் இருந்த காரணத்தினால் இந்த பகுதி வற்றாத இருப்புடன் இருக்கும் என மக்கள் நம்பினர். எனவே இந்த பகுதியை வற்றாத இருப்பு என அழைத்தனர். அந்த வற்றாத இருப்பு நாளடைவில் வத்தாத இருப்பாக திரிந்து வத்திராயிருப்பு ஆனது. வத்திராயன் எனும் மன்னன் இப்பகுதியை ஆண்டதாகவும் அதனால் வத்திராயிருப்பு எனும் பெயர் பெற்றதாகவும் கூறுவர். இவ்வூரின் பெயரில் மேலும் ஒரு சிறப்புள்ளது,வத்திராயிருப்பு என்பதில் "ரா" என்ற இடையின எழுத்தோ "றா" என்ற வல்லின எழுத்தோ என எதைப் பயன்படுத்தினாலும் பொருள் மாறாது.

கோவில்கள்[தொகு]

வத்திராயிருப்பில் அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் மற்றும் நல்லதங்காள் கோயில் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன. பல ஆண்டுகள் பழமையான காசிவிசுவநாதர-விசாலாட்சி அம்மன் கோவிலும்,சேதுநாரயணப் பெருமாள் கோவிலும் உள்ளது. மேலும் ஊர் தேவதையான முத்தாலம்மனுக்கும் ஊரின் நடுவில் கோவில் உள்ளது.இக்கோவிலின் திருவிழா புரட்டாசி மாதம் ஏழு நாள்கள் நடைபெறும்,தேரோட்டமும் உண்டு.இது அனைத்து மக்களாளும் கொண்டாடப்படும் சமத்துவப் பொங்கலாகும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  4. http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Vellimani&artid=557369&SectionID=147&MainSectionID=147&SEO=&Title=
"https://ta.wikipedia.org/w/index.php?title=வத்திராயிருப்பு&oldid=2516091" இருந்து மீள்விக்கப்பட்டது