உள்ளடக்கத்துக்குச் செல்

பிசுமத் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிசுமத் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் ( List of countries by bismuth production ) அணுஎண் 83 கொண்டுள்ள Bi என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுள்ள பிசுமத்தை உற்பத்தி செய்கின்ற நாடுகளின் பட்டியல் இங்குத் தரப்பட்டுள்ளது. இந்தக் கடினமான , நொறுங்கும் தன்மையுள்ள , வெண்மை நிறப் படிக மூவிணைய அலோகம் வேதியியல் பண்புகளில் ஆர்சனிக் மற்றும் ஆண்டிமனியை ஒத்திருக்கிறது.

அனைத்து தனிமங்களிலும் இயற்கையிலேயே எதிர்காந்தப் பண்புடன் விளங்கும் தனிமம் பிசுமத் மட்டுமேயாகும். பாதரசம் மட்டுமே இதைவிடக் குறைவான வெப்பங்கடத்துத் திறன் கொண்டுள்ளது. இதுவே கடைசியாக அறியப்பட்ட கதிரியக்கப் பண்பில்லாத தனிமமாகும்.

அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பில் பிசுமத் சேர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமீப காலத்தில் ஈயத்தின் நச்சுத்தன்மை வெளிப்படையாக மாறிவிட்ட காரணத்தால் அதற்கு மாற்றாக பிசுமத் தற்காலத்தில் வணிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.

பிசுமத் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் 2014 இல்....

[தொகு]
தரம் நாடு/பகுதி பிசுமத் உற்பத்தி
(tonnes)
  உலகம் 8,500
1 சீனா சீனா 7,600
2 மெக்சிக்கோ மெக்சிகோ 825
3 உருசியா உருசியா 40
4 கனடா கனடா 35
5 பொலிவியா பொலிவியா 10

வெளி இணைப்புகள்

[தொகு]