பாக்சைட்டு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
பாக்சைட்டு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by bauxite production ) என்பது அலுமினியத்தின் தாதுவான பாக்சைட்டு என்ற கனிமத்தை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் ஆகும். 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி நாடுகளின் பட்டியல் இங்குத் தரப்பட்டுள்ளது.
பாக்சைட் (Bauxite) என்பது அலுமினியத்தின் மிக முக்கியமான கனிமமாகும். இப்பாறைவடிவ தாதுவில் பெரும்பாலும் கிப்சைட்டு,Al(OH)3, போயிமைட்டு γ-AlO(OH) மற்றும் டையாசுபெரா (α-AlO(OH)) ஆகிய கனிமங்கள் கலந்துள்ளன. கெதேயிதைட்டு மற்றும் எமதைட்டு போன்ற இரும்பு ஆக்சைடுகள், கயோலினைட்டு எனப்படும் களிமண் கனிமம், மற்றும் அனாடேசு எனப்படும் தைட்டானியம் ஈராக்சைடு,TiO2 ஆகியவற்றுடன் கலந்து கலவையாகவும் பாக்சைட்டு தாது காணப்படுகிறது. தெற்கு பிரான்சில் உள்ள சிறிய கிராமமான லெசு பாக்சு என்ற இடத்தில் பாக்சைட்டு கண்டறியப்பட்டது. இக்கனிமம் அலுமினியத்தைக் கொண்டிருக்கிறது என்பது முதன்முதலில் அவ்விடத்தில் கண்டறியப்பட்டதால் இக்கனிமத்திற்கு பாக்சைட் என்ற பெயரும் வைக்கப்பட்டது. பிரெஞ்சு புவியலாளர் பியெர் பெர்த்தியர் 1821 ஆம் ஆண்டில் இப்பெயரைச் சூட்டினார்.
பாக்சைட்டு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்[தொகு]
தரம் | நாடு/பகுதி | பாக்சைட்டு (ஆயிரம் டன்கள்) |
---|---|---|
உலகம் | 234,000 | |
1 | ![]() |
81,000 |
2 | ![]() |
47,000 |
3 | ![]() |
32,500 |
4 | ![]() |
19,300 |
5 | ![]() |
19,000 |
6 | ![]() |
9,800 |
7 | ![]() |
5,500 |
8 | ![]() |
5,300 |
9 | ![]() |
2,700 |
10 | ![]() |
2,200 |
11 | ![]() |
2,100 |
12 | ![]() |
1,800 |
13 | ![]() |
1,000 |
14 | ![]() |
500 |
மற்ற நாடுகள் | 4,760 |