துணி துவைப்பி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

நீரையும் அழுக்கு அகற்றும் கலவையையும் பயன்படுத்தி துணிகளைத் தோய்த்து தரும் இயந்திரம் துணி துவைப்பி ஆகும். இது மின்னாற்றலில் இயங்கும் ஒரு வீட்டுக் கருவி ஆகும்.
அன்றாட வாழ்வியலில் நாம் பயன்படுத்தும் துணிகளையும் உடைகளையும் அவ்வப்போது துவைத்துச் சுத்தமாக்குவது ஒரு சுகாதாரத் தேவை. இது ஒரு அழகியல் செயற்பாடும் கூட. முன்னைய காலகட்டங்களில் உடையை நீரில் நனைத்து, கைகளால் தேய்த்து, சவர்க்காரம் போட்டு அழுக்கு நீக்கி அலசித் தோய்த்தனர். இது நேரமெடுக்கும், உடலுழைப்பு தேவையான ஒரு செயற்பாடு. நேரத்தைக் குறைத்து, உடலுழைப்பைத் தவிர்க்க துணி துவைக்கும் இயந்திரம் உதவுகிறது.
துணிதுவைப்பி தயாரிக்கும் சில முன்னணி நிறுவனங்கள்[தொகு]
- ஐஎஃப்பி(IFB)
- வீடியோகான்(Videocon)
- சாம்சங்(Samsung) [1]
- எல்ஜி(LG)
- வேர்ல்பூல்(Whirlpool)
- எலக்ட்ரோலக்ஸ்(Electrolux)