பார்தீவ் பட்டேல்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பார்தீவ் பட்டேல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.60 m (5 அடி 3 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | குச்சக்காப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 244) | ஆகத்து 8 2002 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | ஆகத்து 8 2008 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 148) | சனவரி 4 2003 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | சனவரி 21 2011 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 21 2011 |
பார்தீவ் அஜய் பட்டேல் (Parthiv Ajay Patel (ⓘ;, பிறப்பு: மார்ச்சு 9 1985) இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இடதுகை மட்டையாளரான இவர் குச்சக் காப்பாளராகவும் செயல்படுகிறார். இவர் உள்ளூர் துடுப்பாட்டப் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
2008 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் மாத்தியூ எய்டனுடன் துவக்கவீரராக களம் இறங்கினார். மகேந்திரசிங் தோனி அந்த அணியின் தலைவராகவும் குச்சக் காப்பாளராகவும் இருந்ததால் இவருக்கு குச்சக் காப்பாளர் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தத் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 302 ஓட்டங்கள் எடுத்தார். இந்தில் அதிகபட்சமாக 54 ஓட்டங்கள் எடுத்தார். இவரின் ஸ்டிரைக் ரேட் 101.68 ஆகும்.[1]
[1] பின் நான்காவது பருவ தொடரில் கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா அணிக்காக விளையாடினார்[2]. 2013 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 294 ஓட்டங்கள் எடுத்தார். இந்தில் அதிகபட்சமாக 61 ஓட்டங்கள் எடுத்தார். இவரின் ஸ்டிரைக் ரேட் 115.29 ஆகும்[1]. பின் 2014 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 205 ஓட்டங்கள் எடுத்தார். இந்தில் அதிகபட்சமாக 57 ஓட்டங்கள் எடுத்தார். இவரின் ஸ்டிரைக் ரேட் 110.81 ஆகும்[1]. 2015 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 339 ஓட்டங்கள் எடுத்தார். இந்தில் அதிகபட்சமாக 59 ஓட்டங்கள் எடுத்தார். இவரின் ஸ்டிரைக் ரேட் 137.80 ஆகும்.[1][3] 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் இவரை 1.7 கோடி ரூபாய் மதிப்பில் இவரை எடுத்தது.[4]
சர்வதேச போட்டிகள்
[தொகு]சனவரி 4, 2003 குயீன்ஸ்டவுன், நியூசிலாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 7 ஆவது வீரராகக் கள் இறங்கிய இவர் 35 பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுத்து மில்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.[5]
2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் 15 பேர் கொண்ட அணியில் இவர் இடம்பெற்றார்.ஆனால் விளையாடும் அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. பின் 2010 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்தத் தொடரின் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டியில் அரைநூறுகள் அடித்தார். பின் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். சச்சின் டெண்டுல்கர் காயம் காயரணமாக விலகியதாலிவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
2002 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அப்போது இவருக்கு வயது 17 ஆண்டுகள் 153 நாட்கள் ஆகும். இதன்மூலம் மிக இளம் வயதில் தேர்வுத் துடுப்பாட்டக் குச்சக் காப்பாளராக இருந்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "IPLT20.com - Indian Premier League Official Website", www.iplt20.com (in ஆங்கிலம்), archived from the original on 2018-03-10, பார்க்கப்பட்ட நாள் 2018-05-20
- ↑ "Sify News:Parthiv to replace Mahela as Kochi skipper". Archived from the original on 2011-05-19. பார்க்கப்பட்ட நாள் 2018-05-20.
- ↑ "IPL auction 2012". dnaindia. பார்க்கப்பட்ட நாள் 4 February 2012.
- ↑ "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
- ↑ "4th ODI, India tour of New Zealand at Queenstown, Jan 4 2003 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-20