பகத் பூல் சிங் அரசு மகளிர் மருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகத் பூல் சிங் அரசு மகளிர் மருத்துவக் கல்லூரி
Bhagat Phool Singh Government Medical College for Women
Other name
பபூசி அரசு மகளிர் மருத்துவக் கல்லூரி, சோன்பாத்
வகைமருத்துவக் கல்லூரி, மருத்துவமனை
உருவாக்கம்2013
அமைவிடம்,
இந்தியா
சேர்ப்புபகவத் தயாள் சர்மா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.bpsgmckhanpur.ac.in/

பகத் பூல் சிங் அரசு மகளிர் மருத்துவக் கல்லூரி, இந்தியாவின் அரியானாவின் சோனேபட் மாவட்டத்தில் கோகானாவில் கான்பூர் கலனில் உள்ள ஒரு பொது மகளிர் மருத்துவக் கல்லூரி ஆகும். இது சுதந்திர இந்தியாவின் முதல் மகளிர் அரசு மருத்துவக் கல்லூரி. இக்கல்லூரி 1914-ல் நிறுவப்பட்ட தில்லியின் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரிக்குப் பிறகு வட இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் நிறுவனம் ஆகும். 2013ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாளன்று, இந்தியத் தேசிய காங்கிரசு கட்சித் தலைவர் சோனியா காந்தியால் இந்தக் கல்லூரி திறந்து வைக்கப்பட்டது.[1][2]

வரலாறு[தொகு]

2008ஆம் ஆண்டில், அரியானா முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா, கான்பூர் கலானில் உள்ள பகத் பூல் சிங் மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் மகளிர் மருத்துவக் கல்லூரியை நிறுவுவதற்கான திட்டத்தை முதலில் அறிவித்தார்.[3] 2009ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி சோனியா காந்தி இந்தக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். இந்தக் கல்லூரியின் தொடர்புடைய மருத்துவமனை 100 படுக்கைகள் மற்றும் 21 மருத்துவர்களைக் கொண்ட குழுவுடன் 2011ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது. இந்த எண்ணிக்கை மார்ச் 2013 நிலவரப்படி 450 படுக்கைகள் மற்றும் 211 மருத்துவர்களுடன் தரம் உயர்த்தப்பட்டது.[1]

வளாகம்[தொகு]

இந்த கல்லூரி 88 ஏக்கர் நிலப்பரப்பில் 700 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.[1][4]

படிப்புகள் மற்றும் இணைப்பு[தொகு]

பகத் பூல் சிங் பெண்களுக்கான அரசு மருத்துவக் கல்லூரி இளநிலை மருத்துவம் படிப்புகளில் மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சியை வழங்குகிறது. இக்கல்லூரி தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு பண்டிட் பகவத் தயாள் சர்மா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[5] பிற இந்திய மருத்துவக் கல்லூரிகளைப் போலவே, இந்தக் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் தகுதியின் அடிப்படையில் நடைபெறுகிறது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • அரியானாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Sonia inaugurates first all-women medical college". The Hindu. 9 March 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/sonia-inaugurates-first-allwomen-medical-college/article4490212.ece. 
  2. "Sonia Gandhi inaugurates Women Medical College in Haryana". Daily Bhaskar. 9 March 2013. http://daily.bhaskar.com/article/HAR-congress-president-and-upa-chairperson-sonia-gandhi-inaugurates-medical-college--4202206-NOR.html. 
  3. "Hooda promises medical college for women". தி இந்து. 28 December 2008. http://www.hindu.com/2008/12/28/stories/2008122855480700.htm. 
  4. "Haryana to get medical college for women". The Sunday Indian. 5 March 2013. http://www.thesundayindian.com/en/story/haryana-to-get-medical-college-for-women/254/46898/. 
  5. "List of Colleges, National Medical Commission".

வெளி இணைப்புகள்[தொகு]