நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை-மருத்துவம்)
National Eligibility cum Entrance Test (Undergraduate)
சுருக்கம்நீட் (மருத்துவம்)
வகைஎழுத்து தேர்வு,
நிருவாகி
மதிப்பிடப்பட்ட திறமைஉயிரியல், வேதியியல் & இயற்பியல்
நோக்கம்அரசு, தனியார் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கைக்காக
ஆரம்பிக்கப்பட்ட வருடம்
 • 2013 (2013-except 2014 & 2015) (2014 & 2015 தவிர்த்து)
 • முன்னர் அகில இந்திய முன்மருத்துவ தேர்வு
காலம்3 மணி நேரம்
தர அளவு-180 to +720
கொடுப்பனவுஆண்டுக்கு ஒரு முறை
நாடுஇந்தியா
மொழி(கள்)அசாமி
பெங்காலி
ஆங்கிலம்
குசராத்தி
இந்தி
கன்னடம்
மலையாளம்
மராத்தி
ஒடியா
தமிழ்
தெலுங்கு
பஞ்சாபி
உருது
வலைத்தளம்www.ntaneet.nic.in
2020 தகவல் தொகுப்பின் படி[1]

நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும்.

தோற்றம்[தொகு]

இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் - 1956-ன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948-ன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி அகில இந்திய அளவிலான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது, இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான (அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது.[2] இதன்படி 5 மே, 2013 முதல் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறதுது.[3] 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை நடத்துகிறது.

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. ந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தெரிவித்தது.[4][5][6][7][8][9]

தமிழகத்தின் நிலை[தொகு]

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்மை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.[10] இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.[11] செயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில், நவம்பர் 23-ம் நாள்[12], இத்திட்டம் தமிழத்தில் செயல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.[13]. தமிழ், உள்ளிட்ட 8 மொழிகளில்[14] தேர்வு நடத்தப்படும் என்று பின்னர் அறிக்கை வெளியிடப்பட்டது.[15] 2017ஆம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ச. அனிதா எனும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசியற்கட்சிகள், சமுதாய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.[16] 2018ஆம் ஆண்டில் "நீட்" தேர்வின் போது தமிழகத்தில் போதுமான தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் ஒரு குறிப்பிட்ட அளவிலான மாணவர்கள் இராஜஸ்தான் மற்றும் கேரளாவில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு அங்கு சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது.[17][18] 2018ஆம் ஆண்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான போது விழுப்புரம் மாவட்டம், பெருவளுர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாநில அரசு நடத்திய 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 93.75 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.[19][20]

இட ஒதுக்கீடு[தொகு]

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு[தொகு]

2020ஆம் ஆண்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் +2 முடிய படித்த மாணவர்களுக்கு, அதிமுக தலைமையினான தமிழ்நாடு அரசு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது.[21][22][23] இதனால் 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் தேர்வு செய்யப்பட்டனர்.

அகில இந்திய இட ஒதுக்கீடு[தொகு]

நடப்பு 2021 ஆண்டு முதல் அகில இந்திய இடஒதுக்கீட்டில் தேர்வாகும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும்; பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடும் வழங்கி இந்திய அரசு ஆனையிட்டுள்ள்து. [24][25]

தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறை[தொகு]

தற்போதைய (2018 ஆம் ஆண்டு) நடைமுறைப்படி, இத்தேர்வில், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் கேட்கப்பட்டு மொத்தம் 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதிற்குள் மூன்று முறையும், மற்றவர்கள் 25 வயதிற்குள் மூன்று முறையும் இத்தேர்வை எழுத முடியும்.[26]

தேர்வில் மாணவர்கள் பங்கேற்பு விவரம்[தொகு]

ஆண்டு தேர்வு நாள் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை தகுதிப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை
2024[27] 5 மே 2024 2,381,833
2023[28][29] 7 மே 2023 2,087,462 2,038,596
2022[30][31] 17 சூலை 2022* 1,872,343 1,764,571
2021[32][33] 05/09/2021 1.614,777[34] 1,544,275
2020[35] 13/09/2020 1,597,435 1,366,945 771,500
2019[35] 05/05/2019 1,519,375 1,410,755 797,042
2018[36] 6 மே 2018 1,326,725 1,269,922
2017[36] 7 மே 2017 1,138,890 1,090,085
2016[37] 1 மே 2016 802,594 731,233
24 சூலை 2016
2015 தேர்வு நடைபெறவில்லை (அனைத்திந்திய மருத்துவ முன் தேர்வு)
2014
2013[38] 05/05/2013 717127 658,040 366317

2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் கோவிட் பெருந்தொற்று காரணமாக தாமதமாக நடைபெற்றது.

விமர்சனங்கள்[தொகு]

2017ஆம் ஆண்டில் சுமார் 400 மாணவர்கள் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பென் மற்றும் 110 மாணவர்கள் பூஜ்ஜியம், எதிர்மறை மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.[39][40][41]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Information Bulletin(English) 2020". தேசியத் தேர்வு முகமை. Archived from the original (PDF) on 17 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 28 July 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-07. பார்க்கப்பட்ட நாள் 2018-06-07.
 3. Central Board of Secondary Education(5 June 2013). "NEET-UG (2013)". செய்திக் குறிப்பு.
 4. "NEET exams in 8 languages". தி இந்து பிசினசு லைன். பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 24, 2016.
 5. "Medical entrance test NEET to be held in 8 languages". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 24, 2016.
 6. "NEET-UG In 8 Languages From 2017-18: Health Ministry". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 24, 2016.
 7. "NEET 2017 to be held in 8 languages including Gujarati, Assamese, Tamil". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 24, 2016.
 8. Odia, Kannada added to NEET list after furore - Asian Age
 9. "NEET Exam 2021: Check the list of barred items and dress code - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.
 10. "Ensure NEET is not forced on TN even in future: Jaya writes to PM Modi". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
 11. "NEET controversy strikes again, State Board students from Tamil Nadu move SC". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
 12. "Tamil Nadu govt to tutor 10,000 students for NEET & JEE". தி டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
 13. "NEET nightmare haunts TN". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
 14. "தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் "நீட்' தேர்வு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
 15. "நீட் தேர்வை கட்டாயமாக்கியது மத்திய அரசு… தமிழ் உள்பட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்". ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 23, 2016.
 16. "நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 4, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 17. http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44921-neet-constraints-special-articles.html
 18. https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-students-should-write-neet-exam-in-other-states-supreme-court/
 19. http://tamil.thehindu.com/tamilnadu/article24086799.ece
 20. http://indianexpress.com/article/cities/chennai/tamil-nadu-girl-who-scored-93-per-cent-in-plus-2-kills-self-after-failing-neet-5205639/
 21. How will Tamil Nadu’s 7.5% reservation in medical admissions help students from state-run schools?
 22. மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு: அவசர சட்டத்துக்கு ஒப்புதல்
 23. 7.5% இடஒதுக்கீடு: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
 24. நீட் தேர்வு: ஓபிசி 27% & EWS 10% இடஒதுக்கீடு, இந்த ஆண்டே அமல்
 25. மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி., ஒதுக்கீடு இந்தாண்டே அமல்
 26. http://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/may/11/neet-exam--full-details-2700335--1.html
 27. Gohain, Manash Pratim (2024-03-21). "NEET-UG journey in numbers at it hits all-time high". The Times Of India. https://twitter.com/manashTOI/status/1770643421566296420. 
 28. "At 20 lakh+, NEET-UG records all-time high registration". The Times of India. 2023-04-20. https://timesofindia.indiatimes.com/education/at-20-lakh-neet-ug-records-all-time-high-registration/articleshow/99622482.cms. 
 29. "NTA Declares the Result/NTA Scores/Rank of National Eligibility cum Entrance Test (UG) – 2023" (PDF). National Testing Agency. 2023-06-13. பார்க்கப்பட்ட நாள் 2023-06-13.
 30. Manash Pratim Gohain (May 27, 2022). "NEET-UG registrations up 2.6 lakh this year, cross 18 lakh | India News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.
 31. "NEET(UG) 2022 Press Release" (PDF). 2022-09-08. Archived from the original (PDF) on 8 September 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-09-08.
 32. Conduct of National Eligibility cum Entrance Test (UG) 2021.[1]
 33. Bhandari, Shashwat (2021-03-12). "NEET 2021: NTA announces exam date. Check details". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.
 34. "NEET UG Statistics 2021 - Check Number of Registrations". Embibe Exams (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-11-03. பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
 35. 35.0 35.1 National Testing Agency(17 October 2020). "National Eligibility cum Entrance Test (UG) – 2020 Results". செய்திக் குறிப்பு. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-12-04. பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
 36. 36.0 36.1 "NEET 2018 analysis: Pass percentile, toppers and comparison with last year's exam" (in en). India Today. Ist. https://www.indiatoday.in/education-today/news/story/neet-2018-analysis-pass-percentile-comparison-with-neet-2017-html-1249938-2018-06-04. 
 37. "NEET(UG) 2016 Press Release" (PDF). 2022-06-27. Archived from the original (PDF) on 27 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
 38. Central Board of Secondary Education(5 June 2013). "NEET-UG (2013)". செய்திக் குறிப்பு.
 39. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
 40. "Students with zero, negative marks in Physics and Chemistry got MBBS seats through NEET". Zee News (in ஆங்கிலம்). 2018-07-16. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
 41. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.