திருவேங்கடநாதபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவேங்கடநாதபுரம்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வி. விஷ்ணு, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திருவேங்கடநாதபுரம் (Thiruvenkadanathapuram) தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமம்[4]. இக்கிராமம் திருநெல்வேலியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு சுமார் 3000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் புகழ் பெற்ற வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இதன் காரணமாக இவ்வூர் 'தென் திருப்பதி' என்றும் அழைக்கப்படுகிறது.

பெயர்க் காரணம்[தொகு]

புராண வரலாறு[தொகு]

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட பாண்டிய மன்னனின் கனவில் தோண்றிய இறைவன் தனக்கு இவ்விடத்தில் கோவில் அமைத்து வழிபட்டு வந்தால் உனது குறைகளை போக்குவேன் என்றார். அதன்படி மன்னன் இவ்விடத்தில் கோவில் கட்டி இறைவழிபாடு செய்து நல்லாட்சி செய்து வந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கிராமத்தைச் சுற்றியுள்ள கோயில்கள்[தொகு]

திருவேங்கடநாதபுரம் கிராமத்தைச் சுற்றி இந்திய கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக பல கோயில்கள் அமைந்துள்ளன.

அவை:

  • வெங்கடாசலபதி கோவில்
  • பரமேசுவரர் கோவில்
  • வரதராஜபெருமாள் கோவில்

இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்[தொகு]

தொழில்[தொகு]

இப்பகுதியில் வேளாண்மைத் தொழிலே முக்கியத் தொழிலாக விளங்கி வருகிறது.

ஓடும் ஆறு[தொகு]

தாமிரபரணி ஆறு இக்கிராமத்தை வளமைப்படுத்தி வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவேங்கடநாதபுரம்&oldid=1685473" இருந்து மீள்விக்கப்பட்டது