தஞ்சாவூர் சகாநாயக்கர் தெரு ஆஞ்சநேயர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுழைவாயில்

தஞ்சாவூர் சகாநாயக்கர் தெரு ஆஞ்சநேயர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் சகாநாயக்கர் தெருவில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

சகாநாயக்கர் தெரு, மேற்கு ராஜ வீதியியில் கொங்கனேஸ்வரர் கோயில் எதிரில் காசுக்கடைத் தெருவைச் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இத்தெருவின் வலப்புறத்தில் வடக்கு பார்த்த நிலையில், பூலோககிருஷ்ணன் கோயிலுக்கு எதிரே இக்கோயில் அமைந்துள்ளது. [1]

மூலவர்[தொகு]

வடக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ள சன்னதி விமானத்துடன் காணப்படுகிறது. மூலவராக உள்ள ஆஞ்சநேயர் மராட்டியர் கால லை வடிவத்தில் புடைப்புச் சிற்பமாக உள்ளார். முன்னோக்கி உந்திச் செல்வது போன்ற நிலையில் இந்த ஆஞ்சநேயர் உள்ளார். இவரை ஆனந்தத் தாண்டவ ஆஞ்சநேயர் என்றும் கூறுகின்றனர். கோயில் மண்டபத்தில் இடப்புறம் ஆனந்த விநாயகர் உள்ளார்.[1]

சிறப்பு[தொகு]

இத்தெருவில் பல பஜனைகள் நடைபெற்றதாகவும் அதனை ஆதரித்தவர் பலர் இருந்ததாகவும், ஆதலால் இந்த ஆஞ்சநேயர் என்றும் ஆனந்தமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சில காலம் வரை சிதிலம் அடைந்திருந்த கோயில் அண்மையில் சீரமைக்கப்பட்டுள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 தஞ்சாவூர் அனுமார் கோயில்கள், வாயுசுதா வெளியீடு, தில்லி 110 092