உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Sridhar G: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 177: வரிசை 177:
::இல்லை, நான் படம் பற்றி சொல்கிறேன் [[சாகசம் (திரைப்படம்)]] [[:en:Saagasam]] நடிகர் பிரசாந்த் மற்றும் அமண்டா ரொசாரியோ நடித்திருந்தனர் இது ஜூலை படத்தின் ரீமேக். நன்றி! --[[சிறப்பு:Contributions/178.71.172.228|178.71.172.228]] 13:40, 13 மார்ச் 2018 (UTC)
::இல்லை, நான் படம் பற்றி சொல்கிறேன் [[சாகசம் (திரைப்படம்)]] [[:en:Saagasam]] நடிகர் பிரசாந்த் மற்றும் அமண்டா ரொசாரியோ நடித்திருந்தனர் இது ஜூலை படத்தின் ரீமேக். நன்றி! --[[சிறப்பு:Contributions/178.71.172.228|178.71.172.228]] 13:40, 13 மார்ச் 2018 (UTC)
புரிந்தது. இந்த வாரத்திற்குள் நிச்சயம் எழுதுகிறேன் நண்பரே நன்றி. [[பயனர்:Dsesringp|Dsesringp]] ([[பயனர் பேச்சு:Dsesringp|பேச்சு]]) 13:46, 13 மார்ச் 2018 (UTC)
புரிந்தது. இந்த வாரத்திற்குள் நிச்சயம் எழுதுகிறேன் நண்பரே நன்றி. [[பயனர்:Dsesringp|Dsesringp]] ([[பயனர் பேச்சு:Dsesringp|பேச்சு]]) 13:46, 13 மார்ச் 2018 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Working Man's Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த உழைப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | இந்திய அளவில் நடைபெறும் [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி|வேங்கைத்திட்டத்தில்]] கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் முதல் இடத்தில் இருப்பதற்காக இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகின்றேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். --[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]]) 05:48, 15 மார்ச் 2018 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#143|பதிகை]])</small>
|}

05:48, 15 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Sridhar G, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Kanags (பேச்சு) 19:48, 26 ஏப்ரல் 2017 (UTC)

கட்டுரைத் தலைப்பு

சாம்சங் ஜெ 7 இவ்வாறு கட்டுரைத் தலைப்பு அமையாது, ஆங்கிலச் சொல் நீக்கப்பட்டு சாம்சங் ஜெ 7 என தலைப்பு அமைய வேண்டும். கட்டுரைகளை எழுதுவதற்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:42, 27 ஏப்ரல் 2017 (UTC)

வணக்கம், Sridhar G!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 02:57, 2 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம், Sridhar G!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 02:58, 2 மே 2017 (UTC)[பதிலளி]

உங்க கவனத்திற்கு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். பள்ளிகள் குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறீர்கள். ஆங்கில விக்கியிலுள்ள கட்டுரைகளையே மொழிபெயர்க்கிறீர்கள் என நினைக்கிறேன். இது சரியான முயற்சியே, எனினும் புதிதாக அடுத்த கட்டுரையைத் தொடங்குமுன் நீங்கள் ஏற்கனவே துவங்கிய பழைய கட்டுரைகளில் மற்ற அனுபமுள்ள பயனர்களால் செய்யப்படும் மாற்றங்களையும் திருத்தங்களையும் கவனிக்கவும். இது உங்களது அடுத்த கட்டுரை மேலும் விக்கித் தரத்தில் அமைய உதவும்.

கட்டுரையின் உள்ளடக்கத்தில் கட்டுரையின் பெயர் தமிழில் தடித்த எழுத்துக்களில் தரப்பட்டிருப்பதை அடுத்து அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்திலும் சாய்ந்த எழுத்துக்களில் இணைக்கவும்.
ஆங்கில விக்கியில் ஒரு கட்டுரையில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ள இணைப்புகளைச் சொடுக்கி அவை இயக்கத்தில் உள்ளனவா என்று தெரிந்த பின்னர் இணைக்கவும்.
கட்டுரைக்குத் தொடர்பில்லாத இணையப் பக்கங்களைச் சான்றாக இணைக்க வேண்டாம்.
தேவைப்படும் உதவிகளை இங்கு உங்கள் பேச்சுப் பக்கத்திலோ, ஒத்தாசைப் பக்கத்திலோ அல்லது கட்டுரையின் பேச்சுப்பக்கங்களில் கேட்கவும்.

தயவுசெய்து உங்கள் கட்டுரைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் நீங்கள் உருவாக்கியுள்ள கட்டுரைகளைச் சரிசெய்த பின்னர் புதிய கட்டுரைகளை உருவாக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:29, 8 மே 2017 (UTC)[பதிலளி]

நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் மேம்பாடு கருதி இணைக்கப்பட்டிருக்கும் வார்ப்புக்களைக் கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடுங்கள். உங்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகளுக்கு செவிமடுப்பது நல்லது.--AntanO 03:11, 9 மே 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
வணக்கம் நண்பரே, தங்களுடைய விக்கிப்பணிகள் செம்மையாகிக் கொண்டிருக்கின்றன. கல்லூரிகள் கட்டுரைகளை விட சட்டங்கள் குறித்தான ஆர்வக் கட்டுரைகள் மிகவும் மகிழ்வினைத் தருகின்றன. கட்டுரை உருவாக்கத்துடன் தொடர்ந்து அதனை மேம்படுத்துதலையும் செய்துவருகின்றீர்கள். தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:01, 17 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம் வாழ்த்துகள்! --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:46, 17 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--இரவி (பேச்சு) 13:15, 17 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம். தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி கட்டுரையில் விக்கியாக்கமாக நான் செய்திருந்த மாற்றங்களையெல்லாம் நீக்கிவிட்டு, கட்டுரையை மீண்டும் முதலில் இருந்தது போலவே மாற்றியிருக்கிறீர்கள். இதன் காரணத்தையும் அவசியத்தையும் தெரிவிக்குமாறுத் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். தவறாது உங்கள் பதிலைப் பதிவு செய்யவும் வேண்டுகிறேன். நன்றி. --Booradleyp1 (பேச்சு) 16:47, 22 மே 2017 (UTC)[பதிலளி]

தானியங்கித் தமிழாக்கம் தவிர்க்கவும்


தாங்கள் உருவாக்கிய ஜூலியா (நிரலாக்க மொழி) கட்டுரையின் சில பகுதிகள் கூகுள் மொழிபெயர்ப்பில் இருந்து அப்படியே உரை திருத்தம் இன்றி அப்படியே வெட்டி ஒட்டப்பட்டுள்ளது. இது படிப்பதற்கு இயல்பாக இல்லை. கவனிக்க வேண்டுகிறோம். --இரவி (பேச்சு) 09:07, 26 மே 2017 (UTC)[பதிலளி]

கவனிக்க

உங்கள் கட்டுரை ஒன்றில் நான் செய்துள்ள திருத்தங்களைக் கவனியுங்கள். அடுத்து நீங்கள் எழுதப்போகும் கட்டுரைகளுக்கு இது உதவக்கூடும்.--Kanags \உரையாடுக 09:45, 26 மே 2017 (UTC)[பதிலளி]

போட்டிக்கட்டுரைகள்

வணக்கம்! நீங்கள் மின்னஞ்சல் கட்டுரையை முற்பதிவு செய்து விரிவாக்கம் செய்துள்ளீர்கள். ஆனால் சமர்ப்பிக்கவில்லையே. கட்டுரையைச் சமர்ப்பிக்க இங்கு செல்லுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 22:14, 14 சூன் 2017 (UTC)[பதிலளி]

மீண்டும் உங்கள் கவனத்திற்கு

  1. கட்டுரையின் உள்ளடக்கத்தில் கட்டுரையின் பெயர் தமிழில் தடித்த எழுத்துக்களில் தரப்பட்டிருப்பதை அடுத்து அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்திலும் சாய்ந்த எழுத்துக்களில் இணைக்கவும்,
  2. முற்றுப்புள்ளி அல்லது காற்புள்ளிகளுக்கு அடுத்து ஒரு இடைவெளிவிட்டு எழுதுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

உங்களது அடுத்துவரும் கட்டுரைகளில் இவற்றைக் கவனத்தில் கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:53, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]

உதவிக்கு நன்றி நிச்சயம் அடுத்த கட்டுரைகளில் இதனை சரி செய்கிறேன். நன்றி

பயனர்: Dsesringp(பயனர் பேச்சு:Dsesringp|பேச்சு]])ஸ்ரீ (பேச்சு) 05:08, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]

விருப்பம்.--Booradleyp1 (பேச்சு) 14:47, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]
பயனர்:Dsesringp! தயவுசெய்து மொழி கட்டுரையில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களைப் பாருங்கள். விக்கியாக்கம் செய்யப்பட வேண்டி இருந்தது. மேற்கோள்கள் சரியாக இணைக்கப்பட்டிருக்கவில்லை. சொற்றொடர்களும் சரியாக அமைந்திருக்கவில்லை. தயவுசெய்து அடுத்த கட்டுரையில் இவற்றைக் கவனித்துச் செய்யுங்கள். ஏதாவது உதவி தேவைப்படின் கேளுங்கள். --கலை (பேச்சு) 15:40, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]
ஆசிரியப் பயனர்கள் தங்கள் பயனர் பக்கங்களில் ஏதேனும் கட்டுரை எழுதியிருந்தால், அப்பக்கங்களை கட்டுரை வெளிக்கு நகர்த்த வேண்டாம். அவற்றை நிருவாகி ஒருவர் கவனித்து நகர்த்துவார். நன்றி.--Kanags \உரையாடுக 08:28, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]

பி. எஸ். எல். வி-சி1

பி. எஸ். எல். வி-சி1 என்ற சவாலான தலைப்பைத் தேர்ந்தெடுத்து எழுதியமைக்கு நன்றி. இதனை இன்றைய தேர்ந்தெடுத்த கட்டுரையாக ஆசிரியர்களுக்குச் சுட்டியுள்ளேன். இக்கட்டுரையில் நான் செய்துள்ள மாற்றங்களைக் கவனித்தால் அடுத்து தாங்கள் எழுதும் கட்டுரைகளை மேம்படுத்த உதவலாம். நன்றி. --இரவி (பேச்சு) 07:41, 13 சூலை 2017 (UTC)[பதிலளி]

போட்டிக்கட்டுரை

பழக்க அடிமைத்தனம்

பயனர்:Dsesringp! உங்களால் விரிவாக்கப்பட்ட பழக்க அடிமைத்தனம் கட்டுரை திருத்தப்பட வேண்டி உள்ளது.

  • மேற்கோள்கள் சரியாகக் கொடுக்கப்படவில்லை / மேற்கோள் தேவைப்படும் இடங்களில் மேற்கோள் இல்லை.
  • சில சொற்றொடர்கள் தெளிவற்றதாக இருக்கின்றன / தவறான தமிழாக்கமாக உள்ளது.
  • பாதக அம்சங்கள் என்ற துணைத் தலைப்பின் கீழ் பாதிப்பிற்கான காரணிகளே கொடுக்கப்பட்டுள்ளன. அது மீண்டும் கீழே எழுதப்பட்டுள்ளது.

திருத்திய பின்னர் அறியத் தாருங்கள். --கலை (பேச்சு) 22:59, 27 சூலை 2017 (UTC)[பதிலளி]

பயனர்:Dsesringp! நீங்கள் ஆங்கிலக் கட்டுரைகளையே தமிழாக்கம் செய்கின்றீர்கள் என நினைக்கிறேன். அப்படியிருந்தால், அங்குள்ள மேற்கோள்களையே இணைக்கலாமே? எடுத்துக்காட்டாக பழக்க அடிமைத்தனம் மரபுவழிக் காரணியால் ஏற்படுமா என்பதற்கு எந்த மேற்கோளையும் நீங்கள் கொடுக்கவில்லை. ஆனால் ஆங்கிலக் கட்டுரையில் மேற்கோள்கள் உள்ளன. அவற்றையே பயன்படுத்தலாமே? அத்துடன் ஏற்கனவே கூறியதுபோல் சில பகுதிகள் தெளிவற்றதாக அல்லது தவறான தமிழாக்கமாக இருக்கின்றது என நினைக்கிறேன். எ.கா. உணர்திறனுக்கான வெகுமதி என்ற பகுதியில் உள்ள அட்டவணை. அங்குள்ள தகவல்கள் சரியாகத்தான் எழுதப்பட்டுள்ளனவா? --கலை (பேச்சு) 22:22, 4 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]
பழக்க அடிமைத்தனம் கட்டுரையை நீங்கள் இனிமேல் திருத்த மாட்டீர்களோ என்று எண்ணி நான் திருத்தியிருந்தேன். ஏன் அவற்றை நீக்கினீர்கள் என அறியத் தர முடியுமா? நீங்கள் திருத்தங்களைக் கவனிக்காமல் அகற்றியிருக்கக் கூடும் என்பதனால் மீளமத்துள்ளேன். அந்தக் கட்டுரையை உங்கள் முற்பதிவிலிருந்து எடுத்துவிட்டு, வேறொரு கட்டுரையை விரிவாக்குங்கள். நன்றி. --கலை (பேச்சு) 16:54, 11 செப்டம்பர் 2017 (UTC)

பிளேட்டோ

பயனர்:Dsesringp! பிளேட்டோ கட்டுரையிலுள்ள எழுத்துப் பிழைகளைத் திருத்திவிடுவீர்களா? --கலை (பேச்சு) 16:37, 11 செப்டம்பர் 2017 (UTC)

நலம்

பயனர்:Dsesringp! நலம் கட்டுரையில் பல இடங்கள் சரியான புரிதலைக் கொடுக்காமல் உள்ளது. எ.கா. காரணிகள் என்ற தலைப்பு எதனைக் குறிக்கிறது? நலனைப் பாதிக்கும் காரணிகளையா? பொதுவான காரணிகள் என்று சொல்லி,

  • வயது (குழந்தைகள் 0 முதல் 1.5 ஆண்டுகள், இளம் குழந்தைகள் 1.5 முதல் 6 ஆண்டுகள் வரை)
  • பாலினம் (ஆண் அல்லது பெண்)
  • இனக்குழு

என்று கொடுத்துள்ளீர்கள். அதன் அர்த்தம் என்ன? வயது நலனைப் பாதிக்கும் காரணியா?

கட்டுரையை புரிந்துகொள்ளக் கூடிய வகையில் திருத்தியமைக்க முடியுமா? திருத்தியமைத்த பின்னர் கூறினால், மீள்பார்வை செய்ய முடியும். நன்றி. --கலை (பேச்சு) 21:34, 9 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

கலை

தவறுகளுக்கு மன்னிக்கவும். நான் நலம் என்ற கட்டுரையின் ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளதை அப்படியே மொழிபெயர்த்ததால் வந்த தவறு அது. தற்போது தலைப்பை சரி செய்துள்ளேன். மேலும் பொதுவான காரணிகள் என்பது Risk factor எனும் இதனோடு தொடர்புடைய கட்டுரைகளில் இருந்ததை மொழிபெயர்த்தேன். ஆனால் அதனை முழுமையாக மொழிபெயர்க்காமல் சிலவரிகளை தவிர்த்ததால் அந்த பிழைகள் வந்தது. தற்போது அது சரியாக உள்ளதா என பார்க்கவும். இல்லையெனில் பொதுக் காரணிகளை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக வேறொரு பத்தியினை மொழிபெயர்க்கிறேன். நன்றி --Dsesringp (பேச்சு) 05:42, 10 அக்டோபர் 2017 (UTC)(ஞா.ஸ்ரீதர்|பேச்சு)[பதிலளி]

பயனர்:Dsesringp! திருத்தியமைக்க முயற்சித்தமைக்கு பாராட்டுக்கள். ஆனால், இன்னமும் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினமாகவே உள்ளது. எ.கா. பொதுவான காரணிகளில், பாலினம் (ஆண் அல்லது பெண்) மற்றும் இனக்குழு எனக் கொடுக்கப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் எப்படி நலனைப் பாதிக்கும் காரணிகளாக உள்ளன என்பதைப் புரிய வைக்கும் வகையில், ஓரிரு வரிகளிலாவது ஒவ்வொரு காரணிக்கும் விளக்கம் கொடுத்தால் நல்லது. மேலும் மரபணு முன் கணிப்பு என்றும் ஒரு காரணி கொடுத்துள்ளீர்கள். இது எதனைக் குறிக்கிறது. ஆங்கிலக் கட்டுரையிலும் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லையே? அதனையும் என்னவென்று கூறுவீர்களா? வெறுமனே பட்டியலிடும்போது இவ்வாறான பிரச்சனை வருகின்றது. எனவே சிறிது விரிவாக எழுதினீர்கள் என்றால் நல்லது. --கலை (பேச்சு) 20:50, 11 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

கலை தற்போது பொதுக்காரணி என்ற தலைப்பை நீக்கி விட்டேன். மேலும் சில வாக்கிய அமைப்பில் இருந்த சிக்கலகளையும் களைந்து விட்டேன் . பிழைகளுக்கு வருந்துகிறேன். வேறு சில பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டவும் . நன்றி--Dsesringp (பேச்சு) 07:21, 14 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

பிராங்க் லாய்டு ரைட்

கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணை விளங்கிக்கொள்ள முடியாததாக உள்ளது. அதாவது, அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இவற்றை எங்கிருந்து பெற்றீர்கள். கொடுக்கப்பட்ட மேற்கோள்களில் கட்டுரையில் கொடுக்கப்பட்ட தகவல்களைச் சரிபார்க்க முடியவில்லை. கட்டுரை திருத்தப்பட வேண்டும். வெறும் அட்டவணையைக் கொடுக்காது, விளக்கங்கள் கொடுக்கப்பட்டால் நன்று.--[w[பயனர்:Kalaiarasy|கலை]] (பேச்சு) 21:58, 27 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

பயனர்:Kalaiarasy! [[1]] இந்தப் பக்கத்தில் அட்டவணை உள்ளது. அதில் கொடுத்த சான்றுகள் ஆங்கில கட்டுரையில் உள்ளவையே. அதில் பெரும்பாலும் பெயர்கள் இருந்ததால் அதை அப்படியே எழுதியுள்ளேன். அட்டவணையில் சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. அதனை முடித்து விட்டு தங்களுக்கு தெரிவிக்கிறேன். நன்றி --Dsesringp (பேச்சு) 06:49, 28 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

பயனர்:Dsesringp! அட்டவணையாகக் கொடுப்பது சிறந்ததே. ஆனால் போட்டிக்குச் சமர்ப்பிக்க முன்னர் தகவல்கள் சரியா என்பதைப் பாருங்கள். திருத்தம் செய்யப்பட வேண்டியன.
  • ஒரே அட்டவணை மூன்று தடவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டை நீக்க வேண்டும்.
  • அட்டவணைக்குப் பொருத்தமான ஒரு தலைப்பைக் கொடுத்தீர்கள் என்றால் நன்று.
  • அட்டவணையின் கட்டமைப்பு சரியாக இல்லை. நிரல்கள் முழுமையாக்கப்படவில்லை. அதாவது நிரல்களுக்கான தலைப்புக்களை எல்லா நிரல்களுக்கும் கொடுக்கவில்லை. அத்துடன் அட்டவணையின் இடைப்பகுதியில், வெறுமையான குறுக்கமான வரிசைகள் உள்ளன. அவற்றையும் நீக்க வேண்டும்.
  • நிரல்களுக்கான தலைப்புக்கள் சரி செய்யப்பட வேண்டும்.
  • நீங்கள் கொடுத்துள்ள இணைப்பிலுள்ள முழுமையான பட்டியலையே கொடுக்கலாமே. அதாவது அங்குள்ள அட்டவணையை அப்படியே எடுத்து, தமிழாக்கம் செய்யலாமே?
--கலை (பேச்சு) 09:01, 28 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
பயனர்:Dsesringp! ஒரு அட்டவணையை வைத்துக்கொண்டு, ஏனைய இரண்டையும் நீக்கியுள்ளேன். நீங்கள் அதனைத் திருத்தலாம். நன்றி.--கலை (பேச்சு) 21:36, 28 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

கலை

  • அட்டவணைக்குப் பொருத்தமான ஒரு தலைப்பைக் கொடுத்துள்ளேன்
  • வெறுமையான குறுக்கமான வரிசைகள் நீக்கப்பட்டுள்ளது. நன்றி

--Dsesringp (பேச்சு) 12:25, 30 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

கவனிக்க

பிறமொழிக் கட்டுரைகளை மொழிபெயர்க்கும் போது முதல் அறிமுகப் பகுதியில் கட்டுரைத் தலைப்புடன், அதன் ஆங்கிலப் பெயர், (தெரிந்தால்) மூலமொழிப் பெயர் ஆகியவை கட்டாயம் தரப்பட வேண்டும். உ+ம்: இலங்கை பற்றிய கட்டுரையில் இலங்கை (Sri Lanka, சிங்களம்: ශ්‍රී ලංකා என எழுத வேண்டும். இலங்கை கட்டுரையைப் பாருங்கள். ஆனால் நீங்கள் கூவைனான் என்ற கட்டுரையில் எவ்வித தரவும் இல்லை.--Kanags (பேச்சு) 07:37, 7 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

நன்றி திரு.Kanags. இனி வரும் கட்டுரைகளில் இந்த பிழை தொடராது. Dsesringp (பேச்சு) 12:34, 7 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2017

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
  • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
  • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
  • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
  • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:13, 14 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை இங்கே தெரிவியுங்கள். நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  2. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  3. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2017}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:09, 25 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

Bhubaneswar Heritage Edit-a-thon Update

Hello,
Thanks for signing up as a participant of Bhubaneswar Heritage Edit-a-thon (2017). The edit-a-thon has ended on 20th November 2017, 25 Wikipedians from more than 15 languages have created around 180 articles during this edit-a-thon. Make sure you have reported your contribution on this page. Once you're done with it, Please put a Y mark next to your username in the list by 10th December 2017. We will announce the winners of this edit-a-thon after this process.-- Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 17:30, 4 திசம்பர் 2017 (UTC) You are getting this message because you have joined as a participant/ambassador. You can subscribe/unsubscribe here.[பதிலளி]

குறிப்பு

கட்டுரையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி என்ற வார்ப்புருவை கட்டுரையில் இணைக்க வேண்டாம். பேச்சுப்பக்கத்தில் பயன்படுத்தலாம். --AntanO (பேச்சு) 21:49, 5 மார்ச் 2018 (UTC)

Fountain கருவியில் கட்டுரையைச் சமர்ப்பித்தால் அது தானே பேச்சுப் பக்க வார்ப்புருவைச் சேர்த்து விடுகிறது என்று நினைக்கிறேன். --இரவி (பேச்சு) 23:26, 5 மார்ச் 2018 (UTC)

--AntanO (பேச்சு) இருவருக்கும் நன்றி. கட்டுரைகளை முன்பதிவு செய்ய உதவி கூறவும் நன்றி.Dsesringp (பேச்சு) 08:15, 6 மார்ச் 2018 (UTC)

விக்கித் தரவில் இணைப்பு

நீங்கள் தொடங்கும் கட்டுரைகளை விக்கித் தரவில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 06:12, 9 மார்ச் 2018 (UTC)

Saagasam

Vanakkam Dsesringp! பிரசாந்த் நடித்த நடிகர் நாகிஸ் ஃபக்ரி என்ற படத்தில் சாகசத்தை பற்றி ஒரு கட்டுரையை நீங்கள் தயாரிக்க முடியுமா? இந்த கட்டுரையை நீங்கள் செய்தால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்! நன்றி! --178.71.172.228 12:54, 13 மார்ச் 2018 (UTC)

நண்பருக்கு வணக்கம் சாஹசம் (2017) திரைப்படத்தைக் குறிப்பிடுகிறீர்களாDsesringp (பேச்சு) 13:08, 13 மார்ச் 2018 (UTC)
இல்லை, நான் படம் பற்றி சொல்கிறேன் சாகசம் (திரைப்படம்) en:Saagasam நடிகர் பிரசாந்த் மற்றும் அமண்டா ரொசாரியோ நடித்திருந்தனர் இது ஜூலை படத்தின் ரீமேக். நன்றி! --178.71.172.228 13:40, 13 மார்ச் 2018 (UTC)

புரிந்தது. இந்த வாரத்திற்குள் நிச்சயம் எழுதுகிறேன் நண்பரே நன்றி. Dsesringp (பேச்சு) 13:46, 13 மார்ச் 2018 (UTC)

பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
இந்திய அளவில் நடைபெறும் வேங்கைத்திட்டத்தில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் முதல் இடத்தில் இருப்பதற்காக இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகின்றேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:48, 15 மார்ச் 2018 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sridhar_G&oldid=2497791" இலிருந்து மீள்விக்கப்பட்டது