குருவிநத்தம், பாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குருவிநத்தம்
Kuruvinatham
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)பாகூர்
ஒன்றியம்பாகூர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்36,983
மொழிகள்
 • அலுவல்பூர்வம்பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண் -->607 402
அஞ்சல் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /

குருவிநத்தம் (Kuruvinatham) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்[1] ஆகும். விழுப்புரத்திலிருந்து திருபுவனை வழியாகக் கடலூருக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளுக்கும் குருவிநததம் கிராமமே நுழைவாயிலாக திகழ்கிறது. புதுச்சேரி மாவட்டத்தின் அயலகச் சிற்றூரான பாகூருக்கு தென்மேற்கு முனையில் இக்கிராமம் அமைந்துள்ளது.

எல்லைகள்[தொகு]

மேற்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருப்பணம்பாக்கம் கிராமம், வடக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காரைமேடு கிராமம், கிழக்கில் பாகூர் மற்றும் பரிக்கல்பட்டு கிராமங்கள், தெற்கில் சோரியாங்குப்பம் ஆகியன குருவிநத்தம் கிராமத்திற்கு புவியியல் எல்லைகளாக அமைந்துள்ளன.

சாலைப் போக்குவரத்து[தொகு]

குருவிநத்தம் சாலை வழியாக பாகூருடன் இணைக்கப்பட்டுள்ளது. கடலூர் – பள்ளிநெல்லியனூர் பிரதான மாவட்டச்சாலை குருவிநத்தம் வழியாகச் செல்கிறது. மேலும் புதுச்சேரி – சோரியாங்குப்பம் பேருந்துச்சாலை குருவிந்ததம் கிராமத்துடன் இணைக்கிறது. பாகூர் வழியாகச் செல்லும் கடலூர் – விழுப்புரம் பேருந்துகள் குருவிநத்தத்தை இணைக்கின்றன.

அரசியல்[தொகு]

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், ஏம்பலம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் குருவிநத்தம் கிராமம் இருக்கிறது. தொடக்கக் காலத்தில் குருவிநத்தம் கிராமம் தனி சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதிச் சீரமைப்பில் குருவிநத்தம் சட்டப்பேரவைத் தொகுதி சிதைக்கப்பட்டது.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவிநத்தம்,_பாகூர்&oldid=2374012" இருந்து மீள்விக்கப்பட்டது