உள்ளடக்கத்துக்குச் செல்

பாகூர்

ஆள்கூறுகள்: 11°49′N 79°45′E / 11.81°N 79.75°E / 11.81; 79.75
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகூர்
Bahour
நகரம்
பாகூர் Bahour is located in புதுச்சேரி
பாகூர் Bahour
பாகூர்
Bahour
புதுச்சேரி வரைபடத்தில் உள்ள இடம்.
ஆள்கூறுகள்: 11°49′N 79°45′E / 11.81°N 79.75°E / 11.81; 79.75
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)பாகூர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்36,983
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அ.கு.எண்
607 402
தொலைபேசிக் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /

பாகூர் (Bahour) என்பது, இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள கொம்யூன், தாலுகா மற்றும் சட்டமன்றத் தொகுதி ஆகும். இது புதுச்சேரியின் 9 உண்மையான உறைவிடங்களில் 3 உட்பட 4 தொடர்ச்சியான பகுதிகளைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பாகூர் எரி, இரண்டாவது பெரிய மற்றும் மிகப் பழமையான நீர்ப்பாசன ஏரியாகும். இந்த ஏரி சோழர் காலத்தில் இருந்தது. [1] பாகூரில் நிலத்தடியியல் பழுப்பு நிலக்கரி இருப்பது பற்றிய தகவல்களும் உள்ளன. ஆனால் அது கடலுக்கு அருகாமையில் இருப்பதாலும், கடல்நீரை வெளியேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாகவும் அகழப்படவில்லை. இதனால் இது, நிலத்தடி நீரை கலப்படமாக்குகிறது. [2] புதுச்சேரிக்கு தெற்கே உள்ள கிராமங்களுக்கு இது ஒரு முக்கிய வழித்தடமாகும். மேலும் யூனியன் பிரதேசத்தின் தெற்கு எல்லையாகவும் உள்ளது. நெல் சாகுபடிக்கு ஏற்ற பகுதி என்பதால் இந்த நகரம் 'புதுச்சேரியின் அரிசி கிண்ணம்' என்றும் அழைக்கப்படுகிறது. [3]

வரலாறு

[தொகு]

பாகூரின் வரலாற்றுப் பதிவு சோழர் காலத்திலிருந்தே உள்ளது. பாகூர் ஒரு பழங்கால கோவிலின் இருப்பிடமாகும். இங்குள்ள, ஸ்ரீ மூலஸ்தானம் உடையார் கோயில், 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த கோயிலின் சுவர்களில், ராஷ்டிரகூட வம்சத்தின் மூன்றாம் அரசர் கிருஷ்ணா (III) எனப்படும் கண்ணாரா தேவன் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகளில் காணப்படுகிறன. இந்த கோயிலை பல்லவர்கள் கலையிலிருந்து சோழர் பாணியிலான கட்டிடக்கலைக்கு மாற்றுவதைக் குறிக்கும் ஒன்றாக ஆராய்ச்சியாளர் ஜுவே-டுப்ரூயில் கருதினார். [4] சதுர்தச வித்யா-பதினான்கு கற்றல் கிளைகளை (அதாவது நான்கு வேதங்கள், ஆறு வேதாகமகங்கள், மீமாம்சம், நியாயம், தர்ம சாஸ்திரம் மற்றும் புராணங்கள்) வழங்குவதற்காக அறியப்பட்ட இப்பகுதியில் வித்யாஸ்தான சமசுகிருத ஆய்வுகளுக்கான மையம் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன. இந்த மையத்தின் ஆதாரங்களை பல்லவ மன்னர் நிருபதுங்கவர்மனின் (கி.பி 869-800) கல்வெட்டுகள் மூலம் காணலாம். இதில் மூன்று கிராமங்களின் மானியங்கள் வித்யாஸ்தானத்திற்கு அரசரால் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. [5]

ராஷ்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணனின் கல்வெட்டுகள் பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய கிராம நிர்வாகத்தின் விரிவான அமைப்பைப் பற்றிய விவரத்தையும் தருகின்றன. மூலஸ்தானம் கோயிலின் கல்வெட்டுகள் கிராம நிர்வாகத்தை கவனித்த பாகூரின் மாபெரும் சட்டமன்றம் என்ற ஒரு சட்டசபையின் விவரத்தை அளிக்கின்றன. [6] பாகூர் பற்றிய குறிப்புகள் "வாகூர் " என்றும் பின்னர் ஸ்ரீ அழகிய சோழ சதுர்வேதிமங்கலம் என்று முதலாம் ராஜராஜானின் 25 ஆம் ஆண்டு பிறந்த ஆட்சியாண்டு முதல் அழைக்கப்படுகிறது என்கிற குறிப்பு காணப்படுகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளரான குப்புசாமி தோண்டிய இறுதி சடங்குகளின் வரலாற்றுக்கு முந்தைய சான்றுகளும் இங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [7] இந்த பகுதியை வரலாற்றுக்கு முந்தைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாற்றியது.

பாகூர் ஏரி

[தொகு]

பாகூர் ஏரி பாகூரில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். இது புதுச்சேரியில் உள்ள முக்கியமான பறவை பகுதிகளில் (ஐபிஏ) ஒன்றாகும். [8] மற்றொன்று ஊசுட்டேரி ஆகும். இது புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இரண்டாவது பெரிய மற்றும் பழமையான நீர்ப்பாசன ஏரியாகும். இந்த ஏரி சோழர் காலத்திலிருந்து இருந்தது. கண்ணரதேவடின் கல்வெட்டுகள், இந்த ஏரியை பெரிய ஏரி என்றும், கடம்பு ஏரி (கடம்பு மரங்களால் சூழப்பட்ட ஏரி) என்றும் விவரிக்கிறது. [1] ஏரியின் பாசனப் பகுதியியில் வரியாக நெல் எவ்வாறு வசூலிக்கப்பட்டது என்பதையும், வரி செலுத்தத் தவறியவருக்கு ஏரியைத் அகழும் பணி அளிக்கப்பட்டது குறித்து ராஜராஜனின் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. [6] ஏரி வாரிய பெருமக்கள் என்று அழைக்கப்படும் ஊர் சபையிர் குறித்த தகவல்களும் உள்ளன. அதன் பொறுப்பு ஏரியின் பராமரிப்பு மற்றும் அதன் நீரை முறையாக விநியோகிப்பது போன்றவை ஆகும்.

சோழ மன்னன், முதலாம் ராஜேந்திரனின் கல்வெட்டுகளில், ஒவ்வொரு ஆண்டும், ஏரி பராமரிப்பு, நெல்லாக வரி வசூலிப்பதைத் தவிர, ஒவ்வொரு வருடமும், இரண்டு தண்டு அகலமாகவும், ஒரு தடியை ஆழமாகவும் அளவிடும் குழியை 10 முதல் 80 வயதுக்குட்பட்ட கிராமத்தின் தீண்டத்தகாதவர்கள் தவிர, ஒவ்வொரு உறுப்பினரும் அகழ வேண்டும் என்றும், வரி வசூலிக்கத் தவறினால் ஏரி பராமரிப்பு சபைக்கு கூட இழப்பீடு வடிவில் தண்டனைகள் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலநாதசுவாமி கோயில்

[தொகு]

பாகூரின் மையத்தில் மூலநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சோழர் காலத்தைச் சேர்ந்தது. கோயிலில் உள்ள அற்புதமான சிற்பங்கள் சோழர்களின் கட்டிடக்கலைகளைக் காட்டுகிறது. இது ஒரு தொல்பொருள் நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் இந்திய தொல்பொருள் துறையினால் பராமரிக்கப்படுகிறது. [9]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Francis, Cyril Antony. Gazetteer of India- Union Territory of Pondicherry Volume 1. Administration of the Union Territory of Pondicherry, 1982.
  2. https://frontline.thehindu.com/static/html/fl2905/stories/20120323290512400.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  3. https://www.thehindu.com/news/cities/puducherry/bahour-the-rice-bowl-turning-shaky-and-stale/article7026677.ece
  4. Vide Revue Historique de L’Inde Francaise, Vol VII, 1948
  5. Balasubrahmanyam, C.R., Early Chola Temples. Orient Longman, 1971.
  6. 6.0 6.1 Vijayavenugopal, G., Pondicherry Inscription Part II. Ecol`e francaise d’ Extreme-Orient.
  7. Kuppuswamy. Fernel Urns of Bahour. Pondicherry: Revue Historique de la Pondichery; 1974-75
  8. Islam, M.Z. & A.R. Rahmani (2004). Important Bird Areas in India: Priority sites for conservation. Indian Bird Conservation Network: Bombay Natural History Society and Birdlife International (UK).Pp.xviii+1133
  9. http://asi.nic.in/asi_monu_alphalist_pondicherry.asp

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bahour
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகூர்&oldid=3699536" இலிருந்து மீள்விக்கப்பட்டது