கிருமாம்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிருமாம்பாக்கம்
Kirumampakkam
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)பாகூர்
ஒன்றியம்பாகூர்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண் -->607 402
அஞ்சல் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /

கிருமாம்பாக்கம் (Kirumampakkam ) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்[1] ஆகும். தேசிய நெடுஞ்சாலை 45ஏ – கடலூர் சாலையில் புதுச்சேரியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

எல்லைகள்[தொகு]

மேற்கில் தமிழ்நாட்டின் நாகப்பனூர் கிராமம், வடக்கில் தமிழ்நாட்டின் மடப்பட்டு கிராமம், கிழக்கில் பனித்திட்டு கிராமம், தெற்கில் பிள்ளையார் குப்பம் ஆகியன கிருமாம்பாக்கம் கிராமத்திற்கு புவியியல் எல்லைகளாக அமைந்துள்ளன.

சாலைப் போக்குவரத்து[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 45ஏ – கிருமாம்பாக்கம் கடலூர் சாலை வழியாக புதுச்சேரியுடன் இணைகிறது. மேலும் கிருமாம்பாக்கம் – பாகூர் சாலை கிருமாம்பாக்கத்தை பாகூருடன் இணைக்கிறது. இவ்வொன்றியத்தின் தலைமையிடமான கிருமாம்பாக்கம் தமிழ்நாட்டுக் கிராமம் நாகப்பனூர் கிராமத்திற்கு நுழைவாயிலாக உள்ளது.

அரசியல்[தொகு]

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், ஏம்பலம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் கிருமாம்பாக்கம் கிராமம் இருக்கிறது.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருமாம்பாக்கம்&oldid=2374008" இருந்து மீள்விக்கப்பட்டது