சேலியமேடு
சேலியமேடு Seliamedu | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | புதுச்சேரி |
மாவட்டம் | பாண்டிச்சேரி |
வட்டம் (தாலுகா) | பாகூர் |
ஒன்றியம் | பாகூர் |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எண் --> | 607 402 |
தொலைபேசிக் குறியீடு | 0413 |
வாகனப் பதிவு | PY-01 |
பாலின விகிதம் | 50% ♂/♀ |
சேலியமேடு (Seliamedu) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்[1] ஆகும். புதுச்சேரி மாவட்டத்தின் அயலகச் சிற்றூரான பாகூருக்கு வடக்கில் இக்கிராமம் அமைந்துள்ளது.
எல்லைகள்
[தொகு]மேற்கில் பாகூர் கிராமம், வடக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கீழ்குமாரமங்கலம் கிராமம், கிழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாகப்பனூர், தெற்கில் குடியிருப்புபாளையம் மணப்பட்டு ஆகியன சேலியமேடு கிராமத்திற்கு புவியியல் எல்லைகளாக அமைந்துள்ளன.
சாலைப் போக்குவரத்து
[தொகு]வில்லியனூர் – பாகூர் சாலையில் சேலியமேடு கிராமம் அமைந்துள்ளது. மேலும் திம்மநாயக்கன்பாளையம் – பாகூர் சாலையுடனும் இக்கிராமம் இணைக்கப்பட்டுள்ளது.
கிராமங்கள்
[தொகு]சேலியமேடு கிராமப் பஞ்சாயத்தில் பின்வரும் கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.
- சேலியமேடு
- அரங்கனூர்
அரசியல்
[தொகு]புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், ஏம்பலம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் சேலியமேடு கிராமம் இருக்கிறது
படக்காட்சியகம்
[தொகு]-
சேலியமேடு கிராமப் பஞ்சாயத்தின் வரைபடம்
-
சேலியமேடு, பாகூர் ஒன்றியம்
-
சிவன் கோவில், சேலியமேடு, பாகூர் ஒன்றியம்
-
அரங்கனூர், சேலியமேடு, பாகூர் ஒன்றியம்
-
RC-18 சாலை , அரங்கனூர், சேலியமேடு, பாகூர் ஒன்றியம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-26.