மணப்பட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மணப்பட்டு
Manappattu
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)பாகூர்
ஒன்றியம்பாகூர்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண் -->607 402
அஞ்சல் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /

மணப்பட்டு (Manappattu) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். புதுச்சேரி மாவட்டத்தில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 45ஏ க்குக் கிழக்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது.

எல்லைகள்[தொகு]

மேற்கில் பாகூர் கிராமம், வடக்கில் பிள்ளையார்குப்பம் கிராமம், கிழக்கில் வங்காள விரிகுடா, தெற்கில் கிருட்டிணாவரம், புதுக்குப்பம் ஆகியன மணப்பட்டு கிராமத்திற்கு புவியியல் எல்லைகளாக அமைந்துள்ளன.

சாலைப் போக்குவரத்து[தொகு]

கன்னியக்கோயில் – மணப்பட்டு சாலை மூலம் மணப்பட்டு இதரபகுதிகளுடன் இணைக்கப்படுகிறது. மேலும் பனித்திட்டுபுதுக்குப்பம் சாலையும் மணப்பட்டை பிற பகுதிகளுடன் இணைக்கிறது.

கிராமங்கள்[தொகு]

மணப்பட்டு கிராமப் பஞ்சாயத்தில் பின்வரும் கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.

  • மணப்பட்டு
  • கன்னியக்கோயில்
  • காட்டுக்குப்பம்
  • வரக்கோலைப்பட்டு

அரசியல்[தொகு]

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், ஏம்பலம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் மணப்பட்டு கிராமம் இருக்கிறது.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணப்பட்டு&oldid=2043560" இருந்து மீள்விக்கப்பட்டது