கர்ப்ப உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்ப்பம்
தேவநாகரிगर्भ
உபநிடத வகைசாமான்யம், உடலியல்
தொடர்பான வேதம்யசுர் வேதம்,[1]
அதர்வண வேதம்[2]
பாடல்களின் எண்ணிக்கைஅறியப்படவில்லை, சில கையெழுத்துப் பிரதிகள் முழுமையடையவில்லை
அடிப்படைத் தத்துவம்வேதாந்தம் [2]

கர்ப்ப உபநிடதம் (Garbha Upanishad) [3] ), அல்லது கர்போபநிடதம் ( Garbhopaniṣad ) என்பது சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும். இது 108 இந்து உபநிடத நூல்களின் நவீன தொகுப்பில் 17-வது இடத்தில் உள்ளது. சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இதை சில அறிஞர்கள் யசுர்வேதத்துடன் தொடர்புடையது என்றும்[1]பிறர் அதர்வண வேதத்துடன் தொடர்புடையது என்றும் கூறுகின்றனர்.[2] இது 35 சாமான்ய (பொது) உபநிடதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[4] உபநிடதத்தின் கடைசி வசனம் பிப்பலாத முனிவருக்கு உரையைக் காணிக்கையாக்குகிறது. ஆனால் உரையின் காலவரிசை மற்றும் ஆசிரியர் பற்றி தெளிவில்லை. மேலும் எஞ்சியிருக்கும் கையெழுத்துப் பிரதிகள் சேதமடைந்துள்ளன. ஒன்றுக்கொன்று பொருந்தாதவை மற்றும் முழுமையற்றவையாக இருக்கின்றன. [5] ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியவியலாளர் பால் தியூசென் போன்ற பலரும் "உடலியல் அல்லது மருத்துவம் பற்றிய கையேடு" என்கின்றனர். [3]

மனித வாழ்க்கையின் கரு முதல் வயதுவந்த நிலை வரை மனித உடற்கூறியல் தொடர்பான ஒப்பீட்டு அளவைக் கணக்கிடுவதற்கும் வழங்குவதற்கும் இது குறிப்பிடத்தக்கது. [6][7] மேலும், மனித உடல் என்றால் என்ன?,[8][9] மனித கரு எவ்வாறு உருவாகிறது?,[10] [11][7] கரு எவ்வாறு உருவாகிறது?,[9][12] கருவுக்கு என்ன தெரியும்?,[11][13]கர்ப்பத்தில் கரு எவ்வாறு கற்றுக்கொள்கிறது?,[14] பிறப்புக்குப் பிறகான வளர்ச்சி[15] என்பதைப் பற்றியெல்லாம் பேசுகிறது.

சொற்பிறப்பியல்[தொகு]

கர்ப்பம் என்ற வார்த்தையின் அர்த்தம் "கருப்பை" தொடர்பானது.[16]

கையெழுத்துப் பிரதிகள்[தொகு]

எஞ்சியிருக்கும் கையெழுத்துப் பிரதிகள் முழுமையடையாமல் காணப்படுகின்றனர். பெரும்பாலான வாசகங்கள் தொலைந்துவிட்டன அல்லது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் கிடைத்த கையெழுத்துப் பிரதிகளும் சீரற்றதாக உள்ளது. [7] ஒரு அத்தியாயத்தில் நான்கு உரைநடைப் பகுதிகளைக் கொண்ட கொல்கத்தா கையெழுத்துப் பிரதி மிகவும் ஆய்வு செய்யப்பட்ட பதிப்பாகும். [7] [11]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Prasoon 2008, ப. 82.
  2. 2.0 2.1 2.2 Paul Deussen, Sixty Upanishads of the Veda, Volume 2, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120814691, page 567
  3. 3.0 3.1 Deussen, Bedekar & Palsule 1997.
  4. Carlos Alberto Tinoco. Upanishads. IBRASA. பக். 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-85-348-0040-2. https://books.google.com/books?id=7xoNEM63hZEC&pg=PA87. 
  5. Paul Deussen, Sixty Upanishads of the Veda, Volume 2, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120814691, pages 639-640, 644
  6. Paul Deussen, Sixty Upanishads of the Veda, Volume 2, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120814691, pages 640-644
  7. 7.0 7.1 7.2 7.3 Paul Deussen, Sixty Upanishads of the Veda, Volume 2, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120814691ISBN 978-8120814691, pages 640-644
  8. Deussen, Bedekar & Palsule 1997, ப. 639.
  9. 9.0 9.1 Aiyar, K. Narayanasvami (1914). "Garbha-Upanishaḍ Of Kṛshṇa-Yajurveḍa". Sacredtexts.com. பார்க்கப்பட்ட நாள் 23 June 2015.
  10. Deussen, Bedekar & Palsule 1997, ப. 641-642.
  11. 11.0 11.1 11.2 ॥ गर्भोपनिषत् १७ ॥ Sanskrit text of Garbha Upanishad, SanskritDocuments Archives (2009)
  12. Deussen, Bedekar & Palsule 1997, ப. 642.
  13. Deussen, Bedekar & Palsule 1997, ப. 642-643.
  14. "UpTodd Garbhsanskar - Nurturing baby with care and love". uptodd.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
  15. TMP Mahadevan (2010), Upaniṣads: Selections from 108 Upaniṣads, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120816114, page 176
  16. garbha, Sanskrit-English Dictionary, Koeln University, Germany

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ப்ப_உபநிடதம்&oldid=3600466" இலிருந்து மீள்விக்கப்பட்டது