அறைக்கீரை
அறைக்கீரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. dubius
|
இருசொற் பெயரீடு | |
Amaranthus dubius Mart. ex Thell. |
அறைக்கீரை (ⓘ; Amaranthus dubius, red spinach) அல்லது குப்பைக் கீரை அல்லது அரைக் கீரை என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் கீரைகளில் ஒன்றாகும்.
பெயர்கள்
[தொகு]இந்த் கீரையை வேரொடு பிடுங்கி பயன்படுத்தாமல் செடியில் இருந்து இலைகளை மட்டும் கொய்து பயன்படுத்தலாம் என்பதால் இது அறுகீழை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அறுகீரை அறைக்கீரை போன்ற இதன் பெயர்கள் மக்கள் வழக்கில் மருவி அரைக்கீரை, அரக்கீர என்று வழங்கப்படுகிறது.[1]
பயன்
[தொகு]சித்த மருத்துவத்தில் காய்ச்சல், குளிர் சன்னி, கப நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக இக்கீரை கூறப்பட்டுள்ளது. தோசை, கூட்டு, சூப், கூட்டல், வடை, மசியல் என பல வகைகளில் அறைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது கீரையாகத் தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் .[2] ஆப்பிரிக்காவிலும் போற்றி உண்ணப்படுகிறது.[3] அறைக்கீரை உடலுக்கு வெப்பத்தை கொடுப்பதினால் மகப்பேறு பெற்ற பெண்களுக்கு ஒரு முக்கிய உணவாக அளிக்கபடுகிறது. அதோடு பிரசவத்தால் எற்படும் உடல் மெலிவை போக்கி, உடலுக்குச் சக்தியையும், பலத்தையும் கொடுக்கின்றது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பச்சை வைரம் 02: நலம் கொடுக்கும் அறைக்கீரை". 2023-09-23.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ Edible Amaranth
- ↑ Grubben, G.J.H. & Denton, O.A. (2004) Plant Resources of Tropical Africa 2. Vegetables. PROTA Foundation, Wageningen; Backhuys, Leiden; CTA, Wageningen.
- ↑ Arai Keerai Benefits in Tamil