ஓ. பன்னீர்செல்வம் அமைச்சரவை (2016–17)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓ. பன்னீர்செல்வம் 2016 திசம்பர் 6 அன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து தமிழக முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2017 பிப்ரவரி 16 எடப்பாடி க. பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றதுவரை இவரது அமைச்சரவை தொடர்ந்தது.

உருவான நாள்06 டிசம்பர் 2016
கலைக்கப்பட்ட நாள்16 பிப்ரவரி 2017
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்ஓ. பன்னீர்செல்வம்
நாட்டுத் தலைவர்ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ்
சட்ட மன்றத்தில் நிலைபெரும்பான்மை அரசு
எதிர் கட்சிதிமுக
எதிர்க்கட்சித் தலைவர்மு. க. ஸ்டாலின் (துணைத்தலைவர் துரைமுருகன்)
வரலாறு
தேர்தல்(கள்)2016
Legislature term(s)5 வருடம்
அடுத்தஎடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை

அமைச்சரவை[தொகு]

அமைச்சரவை 2016 திசம்பர் 6 அன்று இருந்தவாறு:[2]

வ. எண் அமைச்சர் பெயர் ஒளிப்படம் அமைச்சர் கவனிக்கும் துறைகள்
1. ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை,உள்துறை, நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம் (பயிற்சி).
2. திண்டுக்கல் சீனிவாசன் வனத்துறை அமைச்சர் வனத்துறை
3. எடப்பாடி க. பழனிசாமி பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் பொதுப்பணிகள், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம் மற்றும் செயற் திட்டப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள்
4. செல்லூர் கே. ராஜூ கூட்டுறவுத் துறை அமைச்சர் கூட்டுறவு, புள்ளியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்
5. பி. தங்கமணி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் மின்சாரம், மரபுசார எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கரும்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்), ஊழல் தடுப்புச் சட்டம்
6. எஸ். பி. வேலுமணி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள், நகர்ப்பகுதி, ஊரகக் குடிநீர் வழங்கல், சிறப்புத் திட்ட செயலாக்கம்.
7. டி. ஜெயக்குமார் மீன்வளத் துறை அமைச்சர் மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம்
8. சி. வே. சண்முகம் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத் துறை அமைச்சர் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள்
9. கே. பி. அன்பழகன் உயர்கல்வித் துறை அமைச்சர் தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல், அறிவியல் & தொழில் நுட்பவியல்.
10. மருத்துவர் வி. சரோஜா சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்.
11. எம். சி. சம்பத் தொழில்துறை அமைச்சர் தொழில்கள் ,சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்
12. கே. சி. கருப்பண்ணன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு
13. ஆர். காமராஜ் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு
14. ஓ. எஸ். மணியன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கைத்தறி மற்றும் துணிநூல்
15. உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இடவசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
16. மருத்துவர் சி. விஜயபாஸ்கர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்
17. இரா. துரைக்கண்ணு வேளாண்துறை அமைச்சர் வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளான் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு
18. கடம்பூர் ராஜு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்
19. ஆர். பி. உதயகுமார் வருவாய்த்துறை அமைச்சர் வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.
20. வெல்லமண்டி நடராசன் சுற்றுலாத்துறை அமைச்சர் சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம்
21. கே. சி. வீரமணி வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம்.
22. மாஃபா பாண்டியராஜன் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
23. கே. டி. ராஜேந்திர பாலாஜி பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி
26. பி. பெஞ்சமின் ஊரகத் தொழில்துறை அமைச்சர் ஊரகத் தொழில்கள்,குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள்
27. மருத்துவர் நிலோபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தொழிலாளர்கள் நலன், மக்கள்தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வஃக்ப் வாரியம்.
28. எம். ஆர். விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை அமைச்சர் போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்திச் சட்டம்
29. மருத்துவர் எம். மணிகண்டன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தகவல் தொழில்நுட்பம்
30. வி. எம். ராஜலட்சுமி ஆதி திராவிடரர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
31. ஜி. பாஸ்கரன் காதி மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் காதி மற்றும் கிராம தொழில் மற்றும் பூதானம் மற்றும் கிராம தானம்
32. சேவூர் ராமச்சந்திரன் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடு
32. எஸ். வளர்மதி பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன்.
33. பாலகிருஷ்ணா ரெட்டி கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கால்நடை பராமரிப்பு

மேற்கோள்கள்[தொகு]