து. ஜெயக்குமார்
து. ஜெயக்குமார் (D. Jayakumar) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இராயபுரம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இதற்கு முன்னதாக இதே தொகுதியிலிருந்து, 1991, 2001, 2006, மற்றும் 2011 தேர்தல்களில் வெற்றி பெற்றார்.[2][3][4] முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராகப் பணியாற்றி உள்ள இவர் செப்டம்பர் 29, 2012 வரை தமிழகச் சட்டப்பேரவைத் தலைவராக செயல்பட்டார். செப்டம்பர் 29, 2012 அன்று பேரவை தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தார்.[5]
இவரது தந்தை துரைராஜ், மனைவி ஜெயக்குமாரி ஆவார்கள். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை அறிவியலும், சென்னை சட்டக்கல்லூரியில் 1987இல் சட்டப்படிப்பும் முடித்தார்.[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரகுறிப்பு". தமிழக அரசு சுயவிபரகுறிப்பு.
- ↑ 1991 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ பேரவைத்தலைவர் பதவியிலிருந்து ஜெய்க்குமார் பதவி விலகல் - நக்கீரன்
- ↑ http://www.elections.tn.gov.in/Affidavits/17/JAYAKUMAR.D.pdf