உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி. பாஸ்கரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜி. பாஸ்கரன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவரது பெற்றோர் கணபதி அம்பலம், இருளாயி அம்மாள் ஆவர் இவர் பத்தாம்வகுப்புவரை படித்துள்ளார். இவரது தொழில் வேளாண்மை. இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும், இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.[1] இவர் அமைச்சராவதற்கு முன் கட்சியில் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி செயலராக இருந்தார். சிவகங்கை ஒன்றியக் குழுத் தலைவராகப் பணியாற்றினார்.[2] இவர் 2016 ஆண்டு தமிழக சட்டமன்றத்துக்கு சிவகங்கை சட்டமன்றத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அமைச்சரவையில் 2016 ஆண்டு காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சிவகங்கை மாவட்ட அதிமுக வேட்பாளர்கள்". தினமணி. Retrieved 13 சூன் 2016.
  2. "புதிய அமைச்சர்களின் வாழ்க்கைக் குறிப்பு". தினமணி. Retrieved 13 சூன் 2016.
  3. "முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு". தி இந்து (தமிழ்). Retrieved 13 சூன் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._பாஸ்கரன்&oldid=4278084" இலிருந்து மீள்விக்கப்பட்டது