செ. மு. மணிகண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செ. மு. மணிகண்டன் ஓர் தமிழக அரசியல்வாதி. இவரது தந்தை செ.முருகேசன். ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், அவைத்தலைவராகவும் இருந்தவர். தாயார் பெயர் அன்னக்கிளி. மணிகண்டனின் மனைவி வசந்தி ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். இவர்களுக்கு லீலா, லெனிசா ஆகிய இரு மகள்களும், கிளிண்டன் செல்லத்துரை என்ற மகனும் உள்ளார்.[1] 2016 ஆம் ஆண்டு இராமநாதபுரம் தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு,[2] தற்போது தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி (2016 மே 29). பார்த்த நாள் 29 மே 2016.
  2. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2016". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி.
  3. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._மு._மணிகண்டன்&oldid=2719956" இருந்து மீள்விக்கப்பட்டது