பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் 22 மாநாடுகள் ஐந்து கண்டங்களிலும் 17 நாடுகளில் 21 நகரங்களில் இடம்பெற்றன.

பொதுநலவாய அரசுத் தலைவர்கள் மாநாடு (Commonwealth Heads of Government Meeting, CHOGM) என்பது அனைத்துப் பொதுநலவாய நாடுகளினதும் அரசுத் தலைவர்கள் பங்குபற்றும் உச்சி மாநாடு ஆகும். இம்மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை அவ்வமைப்பின் உறுப்பு நாடு ஒன்றில் இடம்பெறுகிறது. இம்மாநாடு நடைபெறும் நாட்டின் அரசுத் தலைவர், பிரதமர் அல்லது குடியரசுத் தலைவர் மாநாட்டுக்குத் தலைமை வகிப்பதோடு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரே பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நடப்புத் தலைவராகவும் செயல்படுவார். பொதுநலவாயத்தின் தலைவர் இரண்டாம் எலிசபெத் மகாராணி 1973 ஆம் ஆண்டில் ஒட்டாவா நகரில் இடம்பெற்ற உச்சிமாநாட்டில் முதன் முதலில் பங்குபற்றியதில் இருந்து அனைத்து மாநாடுகளிலும் பங்குபற்றி வருகிறார்.[1]. ஆனாலும், 87 வயதாகும் மகாராணியின் தேகநிலை இடம்கொடுக்காததால், கொழும்பில் நடைபெறவிருக்கும் 2013 மாநாட்டில் மகாராணிக்குப் பதிலாக வேல்சு இளவரசர் சார்லசு கலந்து கொள்கிறார்.[1]

பொதுநலவாய தலைவர்களின் முதலாவது மாநாடு 1971 இல் சிங்கப்பூரில் நடைபெற்றது. மொத்தம் 21 தடவைகள் மாநாடுகள் இடம்பெற்றுள்ளன. கடைசியாக 2011 இல் மேற்கு ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்றது.

பொதுநலவாயத் தலைவர்களின் உச்சி மாநாடுகளில் உறுப்புநாடுகள் எதிர்கொள்ளும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள், மற்றும் தற்கால நிகழ்வுகள் ஆராயப்படுகின்றன. தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்றுவந்த இனவொதுக்கல் கொள்கை, மற்றும் அதனை முடிவுக்குக் கொண்டு வருவது, பாக்கித்தான், பிஜி நாடுகளில் இடம்பெற்ற இராணுவப் புரட்சிகள், சிம்பாப்வே நாட்டில் தேர்தல் ஏமாற்று போன்றவை இவற்றுள் சிலவாகும். சில வேளைகளில், உறுப்பு நாடுகள் உச்சி மாநாட்டில் பொதுத் தீர்வு ஒன்றை எட்டி அதனைக் கூட்டு அறிக்கை மூலம் வெளியிடுகின்றன. 1997 ஆம் ஆண்டு முதல் மாநாடு நடைபெறும் நாடு பொதுவான "கருப்பொருள்" ஒன்றை அறிவித்து, அதனைக் குறித்து விவாதங்கள் இடம்பெறுகின்றன.[2]

மாநாடுகளின் பட்டியல்[தொகு]

ஆண்டு நாள் நாடு நகரம் Retreat தலைவர்
1971 14–22 சனவரி  Singapore சிங்கப்பூர் N/A லீ குவான் யூ
1973 2–10 ஆகத்து  Canada ஒட்டாவா Mont-Tremblant Pierre Trudeau
1975 29 ஏப்ரல் – 6 மே  Jamaica கிங்ஸ்டன் Michael Manley
1977 8–15 சூன்  United Kingdom இலண்டன் Gleneagles Hotel James Callaghan
1979 1–7 ஆகத்து  Zambia லுசாக்கா லுசாக்கா கென்னத் கவுண்டா
1981 30 செப்டம்பர் – 7 அக்டோபர்  Australia மெல்பேர்ண் கான்பரா மால்கம் பிரேசர்
1983 23–29 நவம்பர்  India கோவா (மாநிலம்) Fort Aguada இந்திரா காந்தி
1985 16–22 அக்டோபர்  Bahamas நசாவு Lyford Cay Lynden Pindling
1986 3–5 ஆகத்து  United Kingdom இலண்டன் N/A மார்கரெட் தாட்சர்
1987 13–17 அக்டோபர்  Canada வான்கூவர் Okanagan Brian Mulroney
1989 18–24 அக்டோபர்  Malaysia கோலாலம்பூர் லங்காவி மகாதீர் பின் முகமது
1991 16–21 அக்டோபர்  Zimbabwe ஹராரே விக்டோரியா அருவி ராபர்ட் முகாபே
1993 21–25 அக்டோபர்  Cyprus Limassol George Vasiliou
1995 10–13 நவம்பர்  New Zealand ஆக்லன்ட் Millbrook Jim Bolger
1997 24–27 அக்டோபர்  United Kingdom எடின்பரோ St Andrews டோனி பிளேர்
1999 12–14 நவம்பர்  South Africa டர்பன் ஜார்ஜ் ட்வுன் தாபோ உம்பெக்கி
2002 2–5 மார்ச்சு  Australia Coolum Hyatt Regency ஜோன் ஹவார்ட்
2003 5–8 டிசம்பர்  Nigeria அபுஜா Aso Rock Olusegun Obasanjo
2005 25–27 நவம்பர்  Malta வல்லெட்டா Mellieħa Lawrence Gonzi
2007 23–25 நவம்பர்  Uganda கம்பாலா Munyonyo Yoweri Museveni
2009 27–29 நவம்பர்  Trinidad and Tobago Port of Spain Laventille Heights Patrick Manning
2011 28–30 அக்டோபர்  Australia பேர்த் Kings Park ஜூலியா கிலார்ட்
2013 15–17 நவம்பர்  Sri Lanka கொழும்பு Waters Edge மகிந்த ராசபக்ச
2015 அறிவிக்கப்படவில்லை  United Kingdom TBA TBA

அடிக்குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]