பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு 1971

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1வது பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு
இடம்பெற்ற நாடுசிங்கப்பூர் சிங்கப்பூர்
தேதிகள்14 சனவரி 1971
22 சனவரி 1971
பின்னையது1973

முதலாவது பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு (First Commonwealth Heads of Government Meeting) சிங்கப்பூரில் 1971 ஆம் ஆண்டு சனவரி 14 தொடக்கம் சனவரி 22 வரை இடம்பெற்றது. இம்மாநாட்டிற்கு அந்நாட்டின் பிரதமரும், அரசுத் தலைவருமான லீ குவான் யூ தலைமை வகித்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு பிரித்தானியா ஆயுதங்கள் விற்பனை செய்வதாக எழுப்பப்பட்ட சர்ச்சைகளை அடுத்து எலிசபெத் மகாராணியை இம்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என அன்றைய பிரித்தானியப் பிரதமர் எட்வர்ட் ஹீத் கேட்டுக் கொண்டதை அடுத்து அவர் கலந்து கொள்ளவில்லை. இதுவே 2013 ஆம் ஆண்டு வரை மகாராணி கலந்து கொள்ளாத ஒரேயொரு பொதுநலவாய உச்சிமாநாடு ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]