லங்காவி
| லங்காவி 浮羅交怡 Langkawi |
|
|---|---|
| குறிக்கோளுரை: சுற்றுலா நகரம் (ஆங்கிலம்: City of Tourism) |
|
| Location of Langkawi | |
| அமைவு: | |
| நாடு | மலேசியா |
| மாநிலம் | கெடா |
| தோற்றம் | 1957 |
| நகராண்மைக் கழக தகுதி வழங்கப் பட்டது |
2001 |
| அரசு | |
| - யாங் டி பெர்துவா (மேயர்) |
அப்துல் அஜீஸ் பின் ஹாஜி அப்துல் கனி |
| பரப்பளவு | |
| - நகரம் | 478.5 கிமீ² (184.7 ச. மைல்) |
| மக்கள் தொகை | |
| - நகரம் | 64 |
| - அடர்த்தி | /கிமீ² (./ச. மைல்) |
| - மாநகரம் | 64 |
| நேர வலயம் | MST (ஒ.ச.நே.+8) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
கவனிப்பு இல்லை (ஒ.ச.நே.) |
| அஞ்சல் குறியீடு | 07xxx |
| அனைத்துலக முன்னொட்டுக் குறி | +6049 (தரைவழித் தொலைபேசி) |
| இணையத்தளம்: http://mplbp.gov.my | |
லங்காவி மலேசியா, கெடா மாநிலத்தில் உள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். இந்தத் தீவுக் குழுமத்தில் 104 தீவுகள் உள்ளன. அதில் லங்காவித் தீவு என்பது ஆகப் பெரிய தீவு ஆகும். இந்தத் தீவைக் கெடாவின் பொன் கலன் (Jewel of Kedah;மலாய்: Langkawi Permata Kedah) என்றும் அழைப்பார்கள். லங்காவித் தீவு மலேசியப் பெருநிலத்தில் இருந்து 30 கி.மீ. அப்பால் அந்தமான் கடலும் மலாக்கா நீரிணையும் இணைகின்ற பகுதியில் இருக்கின்றது.
இந்தத் தீவுகள் கெடா மாநிலத்தின் ஒரு பகுதியாகும். லங்காவித் தீவு தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ளது. இதன் மக்கள் தொகை 64,792. லங்காவித் தீவிற்கு அருகாமையில் உள்ள தூபா தீவில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். மற்றத் தீவுகளில் மனிதக் குடியேற்றம் இல்லை. லங்காவித் தீவில் பெரிய பட்டணம் துவா ஆகும். லங்காவித் தீவு ஒரு தீர்வையற்றச் சுற்றுலா மையமாகத் திகழ்கின்றது.[1]
பொருளடக்கம் |
சொல் பிறப்பியல் [தொகு]
லங்காவி என்றால் மலாய் மொழியில் செம்பழுப்பு கழுகு என்று பொருள் படும். மலாய் மொழியில் helang என்றால் கழுகு. இதன் சுருக்கம் "lang". Kawi என்றால் செம்பழுப்பு என்று பொருள். இரு சொற்களையும் சேர்த்து Langkawi என்று அழைக்கப் படுகின்றது.
2008 ஆம் ஆண்டில் கெடா சுல்தான் அப்துல் ஹாலிம் முவட்சாம் ஷா தமது பொன் விழாவின் போது லங்காவித் தீவிற்கு கெடாவின் பொன் கலன் என்று சிறப்புப் பெயர் சூட்டினார்.[2]
புவியியல் [தொகு]
லங்காவியின் மொத்தப் பரப்பளவு 47,848 ஹெக்டர். லங்காவித் தீவு வடக்கில் இருந்து தெற்கு வரை 25 கி.மீ நீளம் கொண்டது. தீவு முழுமையும் காடுகள் நிறைந்து உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளும் உள்ளன.
மேற்கோள் [தொகு]
- ↑ "Shopping in Langkawi". ABC Langkawi. http://www.abclangkawi.com/index.php/shopping-in-langkawi/. Retrieved 2011-10-18.
- ↑ Majid, Embun (16 July 2008). "It's Langkawi Permata Kedah now". The Star Online. http://thestar.com.my/news/story.asp?file=/2008/7/16/nation/20080716171300&sec=nation. Retrieved 2011-10-18.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் லங்காவி தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |