நைஜர்
| நைஜர் குடியரசு République du Niger (பிரெஞ்சு) Jamhuriyar Nijar வார்ப்புரு:Ha icon |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Fraternité, Travail, Progrès"(பிரெஞ்சு) "சகோதரத்துவம், பணி, முன்னேற்றம்" |
||||||
| நாட்டுப்பண் லா நைஜரியென் |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
நியாமி |
|||||
| ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு | |||||
| மக்கள் | நைஜரியென் | |||||
| அரசு | Semi-presidential குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | Mahamadou Issoufou | ||||
| - | பிரதமர் | Brigi Rafini | ||||
| விடுதலை | பிரான்சிடம் இருந்து | |||||
| - | கூற்றம் | ஆகஸ்ட் 3 1960 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 12,67,000 கிமீ² (22வது) 4,89,678 சது. மை |
||||
| - | நீர் (%) | 0.02 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2012 மதிப்பீடு | 16,274,738[1] (63வது) | ||||
| - | 2001 குடிமதிப்பு | 10,790,352 | ||||
| - | அடர்த்தி | 12.1/கிமீ² 31.2/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2011 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $11.632 billion[2] | ||||
| - | நபர்வரி | $771[2] | ||||
| ஜினி சுட்டெண்? (1995) | 50.5 (உயர்) | |||||
| ம.வ.சு (2011) | ||||||
| நாணயம் | சி.எப்.ஏ. பிரான்க் (XOF) |
|||||
| நேர வலயம் | WAT (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | இல்லை (ஒ.ச.நே.+1) | ||||
| இணைய குறி | .ne | |||||
| தொலைபேசி | +227 | |||||
நைஜர் (பிரெஞ்சு பலுக்கல்: [niʒɛʁ], சில வேளைகளில் /niːˈʒɛər/ அல்லது /ˈnaɪdʒər/ என்றும் அழைக்கப்படுகிறது[3]) என்னும் நைஜர் குடியரசு, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நிலம் சூழ் நாடு ஆகும். நைஜர் ஆற்றின் பெயரையொட்டி இப்பெயர் வந்தது. இந்நாட்டின் தலைநகரம் நியாமி ஆகும். நைஜருக்குத் தெற்கே நைஜீரியாவும் பெனினும், மேற்கே புர்க்கினா பாசோவும் மாலியும், வடக்கே அல்சீரியாவும் லிபியாவும், கிழக்கே சாடும் உள்ளன. ஏறத்தாழ 1,270,000 km2 பரப்பளவுடைய நைஜர், மேற்கு ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடு ஆகும். இதில் 80 விழுக்காடு நிலம் சகாரா பாலைவனத்தில் உள்ளது. 15 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையில் பெருமளவினர் இசுலாமியர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் நாட்டின் தெற்கு, மேற்கு மூலைகளில் வாழ்கிறார்கள்.
வளர்ந்து வரும் நாடான நைஜர், ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சிச் சுட்டெண்களில் தொடர்ந்து கீழ் நிலையில் இடம்பெற்று வருகிறது. 2011 அளவீட்டின் படி, 187 நாடுகளில் 186ஆவது இடத்தையே பெற்றது. நாட்டின் பாலைவனமல்லா பகுதிகள் பலவும் விட்டு விட்டு வரும் வறட்சியாலும் பாலைவனமாதலாலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. நைஜரின் பொருளாதாரம் வாயுக்கும் வயிற்றுக்குமான வேளாண்மையையும் சிறிதளவு ஏற்றுமதி வேளாண்மையையும் யுரேனியம் உள்ளிட்ட இயற்கை வளங்களின் ஏற்றுமதியையும் நம்பியே உள்ளது. சுற்றி நிலம் சூழ்ந்துள்ள நிலை, பாலை நிலம், மோசமான கல்வி, ஏழ்மை, உள்கட்டமைப்பு வசதியின்மை, மோசமான நலத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு முதலியவற்றால் நைஜர் முடங்கி உள்ளது.
முன்னர் பிரான்சின் பேரரசுவாத ஆட்சியின் கீழ் இருந்து 1970ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அன்று முதல் நைஜீரியர்கள் ஐந்து அரசியல் அமைப்புகளின் கீழும் மூன்று இராணுவ ஆட்சிகளின் கீழும் வாழ்ந்துள்ளனர். 2010ல் நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து, தற்போது நைஜர் ஒரு பல கட்சி குடியரசாகத் திகழ்கிறது.
சான்றுகள் [தொகு]
- ↑ INS Niger (பிரெஞ்சு)
- ↑ 2.0 2.1 "Niger". International Monetary Fund. பார்த்த நாள் 20 April 2012.
- ↑ How Do You Pronounce "Niger"? from Slate.com, retrieved 04 March, 2012