இளைய சைரஸ் என்பவர் அகாமனிசிய இளவரசர் மற்றும் தளபதி ஆவார். இவர் கிமு 408 முதல் 401 வரை லிடியா மற்றும் ஐயோனியாவின் ஆளுநராக இருந்து ஆட்சி செய்தார். இவர் இரண்டாம் டேரியஸ் மற்றும் பாரிசாடிஸ் ஆகியோரின் மகனாவார். இவர் கிமு 401 இல் பாரசீக அரியாசத்திலிருந்து தன் அண்ணனான இரண்டாம் அர்த்தசெராக்சை அகற்றி அதில் தான் அமர குனக்சா சமரில் ஈடுபட்டு இறந்தார். சைரசின் வரலாறு குறித்து செனபோன் தனது அனபாசிஸ் என்ற நூலில் கூறியுள்ளார். மேலும்...
1846 – அமெரிக்கா, கனடா ஆகியவற்றின் எல்லைக்கோடு ராக்கி மலைத்தொடர் முதல் உவான் டெ பூக்கா நீரிணை வழியாக வரையப்பட்டது.
1878 – குதிரை ஒன்று ஓடுகையில் அதன் நான்கு கால்களும் தரையில் படுவதில்லை என்பதை நிறுவும் புகைப்படங்களை எதுவார்து மைபிரிட்ச் என்பவர் எடுத்தார். இவ்வாய்வே பின்னர் அசையும் திரைப்படம் உருவாக மூலமாக அமைந்தது.
1888 – முடிக்குரிய இளவரசர் வில்லியம்செருமானியப் பேரரசின் கடைசி மன்னராக முடிசூடினார். 1888 இல் முதலாம் வில்லியம், மூன்றாம் பிரெடெரிக் ஆகிய மன்னர்கள் இறந்ததனால், இவ்வாண்டு செருமனியின் மூன்று பேரரசர்களின் ஆட்சி ஆண்டு ஆகும்.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,65,917 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.