செனபோன்
ஏதென்சின் செனபோன் | |
---|---|
![]() கிரேக்க வரலாற்றாளர் ஏதென்சின் செனபோன். | |
பிறப்பு | c. 430 கிமு ஏதென்சு |
இறப்பு | 354 கிமு (தோராய வயது. 76) |
இனம் | கிரேக்கர் |
பணி | வரலாற்றாளர், படைவீரர், கூலிப்படையாள் |
பெற்றோர் | கிரைல்லசு |
பிள்ளைகள் | கிரைல்லசு மற்றும் தியோடரசு] |
செனபோன் ஏதென்சில் கி.மு. 430 முதல் கி. மு. 354 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி, வரலாற்று வரைவாளர், போர் வீரர் மற்றும் சாக்ரடீஸின் மாணவர் ஆவார். இவர் சொல்லணிக் கலையில் தேர்ந்தவரும் தூசிடைட்டீசுக்குப் பின் வந்த கிரேக்க வரலாற்றாளர்களில் குறிப்பிடத்தக்கவரும் ஆவார். இவர் தன்னுடைய 30 ஆவது வயதில் இசுபார்ட்டாவின் படையில் சேர்ந்தார் .
படைப்புகள்[தொகு]
1. அன்பாசிஸ்[தொகு]
இந்நூல் பாரசீக மன்னர் சைரசுக்கும் அவரது சகோதரர் அர்டக்செர்க்கசுக்கும் இடையே நடைபெற்ற போர் பற்றிய முழுமையான தொகுப்பு ஆகும். குறிப்பாக பத்தாயிரத்துக்கு மேற்பட்ட படை வீரர்களை வெற்றிகரமாக வழிநடத்தி இசுபார்ட்டாவுக்கு அழைத்து வந்த நிகழ்வை எழுதியுள்ளார்.
2. ஹெல்லெனிகா[தொகு]
இந்நூல் பெலப்பொனீசியா போர் பற்றிய வரலாற்று நூல்.
3. மெமோரபிலியா[தொகு]
செனபோனுக்கும், சாக்ரடீஸுக்கும் இடையில் நடைபெற்ற வரலாற்று நூல் ஆகும்.
4. பங்குவாட்[தொகு]
செனபோனின் இளமைக்கால வரலாற்றை பற்றியது.
5. பொருளாதாரம்[தொகு]
வெற்றிகரமான வாழ்கை வாழ தேவையான குறிப்புகள் மற்றும் பொருள்களை பற்றிய தகவல்களை உள்ளடக்கியது.
6. சைரோபீடியா[தொகு]
பாரசீக மன்னர் மகா சைரசின் இளைமைக்கால கல்வி, வாழ்க்கைத்தொழில், நிர்வாகம் பற்றிய விவரங்களைக் கொண்டது
மேற்கோள்[தொகு]
- க. வெங்கடேசன், வரலாற்று வரைவியல், வி.வி.பதிப்பகம்.