கன்பூசியசு அமைதிப் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்பூசியசு அமைதிப் பரிசு(Confucius Peace Prize)உலக அமைதிக்குப் பாடுபட்டோரை அடையாளம் கண்டு வழங்கிடவும் சீனத்தின் உலக அமைதி மற்றும் மனித உரிமை பார்வையை அறிவிக்கும் விதமாகவும் சீன மக்கள் குடியரசு "சீன கிராம கலைக்கழகம்" என்ற தனி அமைப்பின் மூலம் 2010ஆம் ஆண்டு நிறுவியுள்ள ஓர் உலகளாவிய பரிசாகும். இது 2010ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு சீன அரசுக்கு இணக்கமற்ற லியூ சியாபோவிற்கு கொடுக்கப்படுவதற்கு எதிர்ப்பாக இந்தப் பரிசு நிறுவப்படுவதாக மேற்கத்திய ஊடகங்கள் கருதுகின்றன. சீனத்தின் புகழ்பெற்ற மெய்யியலாளர் கன்பூசியசின் பெயரில் நிறுவப்படும் இந்தப் பரிசை முதலில் நவம்பர் 17, 2010 அன்று வணிகர் லியூ சைகின் (Liu Zhiqin) பரிந்துரைத்திருந்தார்.[1]

கன்பூசியசு அமைதிப் பரிசு முதன்முதலில் முன்னாள் சீனக் குடியரசு துணைத்தலைவர் லீன் சானிற்கு தாய்வானிற்கும் சீனாவிற்குமிடையே நல்லுறவுகள் வளர்த்தெடுத்தமைக்காகக் கொடுக்கப்படுகிறது.[2] லீன் சான் பீஜிங்கில் நடைபெறவுள்ள இந்தப் பரிசு விழாவிற்கு வரமாட்டார் என மேற்கத்திய ஊடகங்கள் கருதுகின்றன.[1] அவர் இப்பரிசை வென்றது குறித்து இன்னும் அறியவில்லை எனவும் அவ்வூடகங்கள் வெளியிடுகின்றன.[3]

இப்பரிசை வென்றவருக்கு பணமாக ¥100,000 ($15,000) வழங்கப்படும்.[4]

கன்பூசியசு அமைதிப் பரிசு வென்றவர்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]