வைஜெயந்திமாலா
வைஜெயந்திமாலா பாலி | |
---|---|
வைஜெயந்தி மாலா - பஹார் என்னும் இந்தி படத்தில் நாட்டிய பெண்மணி 'லதா'வாக | |
பிறப்பு | வைஜெயந்திமாலா ராமன் ஆகத்து 13, 1933 திருவல்லிக்கேணி, சென்னை மாகாணம், இந்தியா |
பணி | நடிகை, இந்திய நடன கலைஞர், கர்நாடக சங்கீத கலைஞர், அரசியல்வாதி. |
பெற்றோர் | எம். டி. ராமன் வசுந்தராதேவி |
வாழ்க்கைத் துணை | சமன்லால் பாலி (1968–1986)(மறைவு) |
பிள்ளைகள் | சுசிந்திர பாலி |
கையொப்பம் |
வைஜெயந்திமாலா பாலி (Vyjayanthimala Bali, பிறப்பு: ஆகத்து 13, 1933)[1] இந்திய நடிகையும் பரதநாட்டியக் கலைஞரும், கர்நாடக சங்கீத கலைஞரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். தென்னிந்தியாவிலிருந்து அகில இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நடிகை இவர்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]வைஜெயந்திமாலா சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த வைதீக ஐயங்கார் வகுப்பை சேர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் வசுந்தராதேவியும் 1940களில் புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தமிழ் நடிகை ஆவார். இவரது தந்தையார் பெயர் எம். டி. ராமன். வைஜயந்தி தனது பள்ளிப் படிப்பை செக்ரடு ஹார்ட் மேல்நிலை பள்ளி, ப்ரசெண்டசன் கான்வென்ட், சர்ச் பார்க், ஆகிய பள்ளிகளில் முடித்தார். இவர் குரு வழுவூர் ராமையா பிள்ளையிடம் சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றார். மேலும் மனக்கல் சிவராஜா அய்யர் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும் பயின்றார். இவர் தனது அரங்கேற்றதினை தனது 13வது வயதிலேயே முடித்தார்.
இவர் சமன்லால் பாலி என்பவரை மணமுடித்த பின்பு நடிப்பதை நிறுத்திக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். இவர்களுக்கு சுசிந்திர பாலி என்கிற மகன் உண்டு. வைஜயந்திமாலா தனது சுயசரிதையை 2007ஆம் ஆண்டு வெளியிட்டார்.
திரைப்படத் துறையில்
[தொகு]நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]அரசியல் வாழ்க்கை
[தொகு]வைஜயந்திமாலா பாலி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் (லோக் சபா) தென் சென்னை மக்களவைத்தொகுதி | |
பதவியில் 1984–1991 | |
பிரதமர் | இந்திரா காந்தி ராஜீவ் காந்தி வி.பி.சிங் சந்திரசேகர் பி.வி.நரசிம்ம ராவ் |
முன்னையவர் | ரா. வெங்கட்ராமன் |
பின்னவர் | R. ஸ்ரீதரன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (1984 - 1999) பாரதிய ஜனதா கட்சி (1999 முதல் நடப்பு) |
1984இல் முதல் முறையாக வைஜெயந்திமாலா மக்களவை தேர்தலில் அகில இந்திய காங்கிரசு கட்சியின் சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதி போட்டியிட்டார்.[2] மீண்டும் 1989இல் வைஜெயந்திமாலா தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆலடி அருணா போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 1.25 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.[3]
பின்னர் இவர் 1993 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார். 1999-இல், அவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியியிலிருந்து விலகினார்.[4] இக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு இவர் எழுதிய கடிதத்தில், பதவி விலகியதற்கான காரணத்தையும் இவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது “இராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு கட்சி தன் உறுதியான கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வதை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருப்பதால், கட்சி அதன் அடிமட்டத் தொடர்பை இழந்துவிட்டது. நேர்மையான கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை தினம் தினம் பார்க்கவும்" எனத் தெரிவித்திருந்தார்.[4][5] பின்னர், வைஜயந்திமாலா 6 செப்டம்பர் 1999 அன்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[6][7]
பெருமை
[தொகு]வைஜெயந்திமாலா இந்தியத் திரைப்படத்துறையில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[8] 2022-இல், இவர் அவுட் லுக் இந்தியாவின் "75 சிறந்த இந்தித் திரைப்பட நடிகைகள்" பட்டியலில் இடம்பிடித்தார்.[9] 1950கள் மற்றும் 1960களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான வைஜெயந்திமாலா, 1954 முதல் 1967 வரை இந்தியாவின் "சிறந்த நடிகைகள்" பட்டியலில் இடம்பெற்றார். மேலும் ஆறு ஆண்டுகள் (1958-1959, 1961-1964) பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.[10] இந்தியன் எக்சுபிரசுசின் ஆருஷி ஜெயின், இவரை இந்திய திரைப்படத்துறையின் "முதல் பெண் பெரும் நட்சத்திரம்" என்று அழைத்தார், மேலும் அவர் மூன்று தொழில்களை ஆண்டதாகவும், முதல் "பான்-இந்தியா" நட்சத்திரம் என்றும் கூறினார்.[11] 2007-இல், வைஜெயந்திமாலா "பிணைப்பு... ஒரு நினைவு” எனும் தனது நினைவுக் குறிப்பை வெளியிட்டார்.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vyjayanthimala Biography". IMDb. Archived from the original on 11 August 2023.
- ↑ T. Ramakrishnan; R.K. Radhakrishnan; Raktima Bose (9 May 2009). "Actor's South Chennai link". தி இந்து இம் மூலத்தில் இருந்து 11 May 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090511161649/http://www.hindu.com/2009/05/09/stories/2009050955701300.htm.
- ↑ R. C. Rajamani (23 November 2007). "Dance is futile without devotion". The Statesman (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 22 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130222155452/http://www.thestatesman.net/index.php?id=354959&option=com_content&catid=39.
- ↑ 4.0 4.1 United News of India (28 August 1999). "Vyjayanthimala quits Congress". இந்தியன் எக்சுபிரசு. http://www.indianexpress.com/Storyold/118195/.
- ↑ United News of India (27 August 1999). "Vyjayanthimala quits Congress". The Tribune (New Delhi). http://www.tribuneindia.com/1999/99aug28/nation.htm#6.
- ↑ "National Events in 1999". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 November 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101130100634/http://hindu.com/thehindu/revents/01/19990199.htm.
- ↑ "Independent India" இம் மூலத்தில் இருந்து 20 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121020194042/http://www.sify.com/itihaas/fullstory.php?id=13268712&page=11.
- ↑ "Top heroines of Bollywood". இந்தியா டுடே இம் மூலத்தில் இருந்து 28 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201128234730/https://www.indiatoday.in/cinema/100-years-of-indian-cinema/photo/top-actresses-of-bollywood-ever-367543-2012-05-01/15.
- ↑ "75 Bollywood Actresses Who Ruled The Silver Screen With Grace, Beauty And Talent". Outlook India. Archived from the original on 16 August 2022. பார்க்கப்பட்ட நாள் 16 August 2022.
- ↑ "Top Actresses". Box Office India. Archived from the original on 4 January 2012. பார்க்கப்பட்ட நாள் 24 September 2020.
- ↑ Arushi Jain. "Vyjayanthimala, ‘first female superstar’ of Indian cinema who towered over 3 industries, quit films at height of fame". The Indian Express. https://indianexpress.com/article/entertainment/bollywood/vyjayanthimala-first-female-superstar-of-indian-cinema-who-towered-over-3-industries-quit-films-at-height-of-fame-8888313/lite/.
- ↑ Bali, Vyjayantimala (2007). Bonding... A Memoir (in ஆங்கிலம்). Stellar Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789382035015.
வெளி இணைப்புகள்
[தொகு]- Tête-à-Tête with Vyjayanthimala - வைஜெயந்திமாலாவுடன் ஒரு உரையாடல்
- யூடியூபில் வைஜயந்திமாலா சொந்தக் குரலில் பாடிய ஒரு பாடல் - ஹாதே பசார் (1967) என்ற வங்க மொழி படத்திலிருந்து.
- Pages using infobox person with unknown parameters
- Biography with signature
- 1936 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- பரதநாட்டியக் கலைஞர்கள்
- கலைமாமணி விருது பெற்றவர்கள்
- பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- 6வது மக்களவை உறுப்பினர்கள்
- 7வது மக்களவை உறுப்பினர்கள்
- 8வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- தமிழ்நாட்டு நடிகைகள்
- தமிழ்நாட்டு நடனக்கலைஞர்கள்
- தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள்
- தமிழ்நாட்டுப் பெண் கல்வியாளர்கள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்