வேலூர் (நாமக்கல்)
வேலூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நாமக்கல் மாவட்டம், பரமத்தி-வேலூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும், பேரூராட்சி தலைவர் லக்ஷ்மி முரளி B.A.
இப்பேரூராட்சி பகுதியில் வாழை, வெற்றிலை, கோரை போன்ற பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. ஜேடார்பாளையம் தடுப்பணை 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அமைவிடம்
[தொகு]வேலூர் பேரூராட்சியானது கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை எண் 37-இல் காவேரி ஆற்றின் வடகரையில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 8 கிமீ தொலைவில் உள்ள புகலூரில் உள்ளது. இப்பேரூராட்சிக்கு கிழக்கில் மோகனூர் 16 கிமீ; மேற்கில் கபிலர்மலை 13 கிமீ; தெற்கில் கரூர் 22 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]15 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 35 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,353 வீடுகளும், 11,986 மக்கள்தொகையும் கொண்டது. [2]
கல்வி
[தொகு]- கந்தசாமி கவுண்டர் கலைக் கல்லூரி