உள்ளடக்கத்துக்குச் செல்

பாயா பெசார் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாயா பெசார் (P084)
மலேசிய மக்களவைத் தொகுதி
பகாங்
Paya Besar (P084)
Federal Constituency in Pahang
பாயா பெசார் மக்களவைத் தொகுதி
(P084 Paya Besar)
மாவட்டம்குவாந்தான் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை79,744 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிபாயா பெசார்
முக்கிய நகரங்கள்குவாந்தான், பாயா பெசார்
பரப்பளவு2,218 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சி      பாரிசான் நேசனல்
மக்களவை உறுப்பினர்முகமது சகார் அப்துல்லா
(Mohd Shahar Abdullah)
மக்கள் தொகை128,041 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1995
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

பாயா பெசார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Paya Besar; ஆங்கிலம்: Paya Besar Federal Constituency; சீனம்: 巴耶勿刹国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், குவாந்தான் மாவட்டத்தில் (Kuantan District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P084) ஆகும்.[5]

பாயா பெசார் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1995-ஆம் ஆண்டில் இருந்து பாயா பெசார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

குவாந்தான் மாவட்டம்

[தொகு]

குவாந்தான் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் குவாந்தான். பகாங் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்கில் திராங்கானு மாநிலத்தின் கெமாமான் மாவட்டம்; கிழக்கில் தென்சீனக் கடல்; மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் ஜெராண்டுட் மாவட்டம்; தெற்கில் பெக்கான் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.

முதலாம் நூற்றாண்டில் சித்து அரசு (ஆங்கிலம்: Chih-Tu அல்லது Chihtu; மலாய்: Tanah Merah) எனும் பேரரசின் ஒரு பகுதியாகக் குவாந்தான் மாவட்டம் இருந்தது. 'சிது' என்றால் 'சிகப்பு மண்' (Red Earth Kingdom) என்று பொருள்.[7][8] 11-ஆம் நூற்றாண்டில், குவாந்தான் நிலப்பகுதி, சயாமியர்களால் கையகப்படுத்தப் படுவதற்கு முன்பு, பெங்-கெங் (Pheng-Kheng) எனும் ஒரு சிறிய பேரரசால் ஆளப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டில், சிறிது காலம் மலாக்கா சுல்தானக அரசாலும் ஆளப்பட்டது.

பாயா பெசார் மக்களவைத் தொகுதி

[தொகு]




2022-இல் பாயா பெசார் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[9]

  மலாயர் (83.9%)
  சீனர் (11.1%)
  இதர இனத்தவர் (3.1%)
பாயா பெசார் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1994-ஆம் ஆண்டில் பாயா பெசார் தொகுதி உருவாக்கப்பட்டது
9-ஆவது மக்களவை P079 1995–1999 சித்தி சகாரா சுலைமான்
(Siti Zaharah Sulaiman)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P084 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013 அப்துல் மனான் இசுமாயில்
(Abdul Manan Ismail)
13-ஆவது மக்களவை 2013–2018
2018 காலி
14-ஆவது மக்களவை 2018–2022 முகமது சகார் அப்துல்லா
(Mohd Shahar Abdullah)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

பாயா பெசார் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
முகமது சகார் அப்துல்லா
(Mohd Shahar Abdullah)
பாரிசான் நேசனல்26,89943.400.24
அயிரோசரி ரோசுலான்
(Aireroshairi Roslan)
பெரிக்காத்தான் நேசனல்25,58241.2741.27
அகமது அசாம் முகமது சாலே
(Ahmad Azam Mohd Salleh)
பாக்காத்தான் அரப்பான்9,19214.8311.87
ரோசுமினாகர் முகமது அமீன்
(Rosminahar Mohd Amin)
தாயக இயக்கம்3100.500.50
மொத்தம்61,983100.00
செல்லுபடியான வாக்குகள்61,98398.75
செல்லாத/வெற்று வாக்குகள்7851.25
மொத்த வாக்குகள்79,744
பதிவான வாக்குகள்/வருகை62,7682.80
      பாரிசான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7591-0279-1.
  8. Geoff Wade (2007). Southeast Asia-China interactions: reprint of articles from the Journal of the Malaysian Branch, Royal Asiatic Society. Malaysian Branch of the Royal Asiatic Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-9948-38-2.
  9. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  10. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]