நூக் நகரம்
நூக்
மேவாத் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28°07′N 77°01′E / 28.12°N 77.02°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | நூக் |
• சட்டமன்ற உறுப்பினர் | (சௌத்திரி அப்டாப் அகமது, இந்திய தேசிய காங்கிரசு) |
ஏற்றம் | 199 m (653 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,767 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி, ஆங்கிலம் |
• பேச்சு மொழி | மேவாதி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-HR |
வாகனப் பதிவு | HR-27 |
இணையதளம் | haryana |
http://www.mewat.gov.in |
நூக் நகரம் (Nuh), இந்தியாவின் அரியானா மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த நூக் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.[1]இது அரியானா தலைநகரான சண்டிகருக்கு தென்கிழக்கே 337.7 கிலோ மீட்டர் தொலைவிலும், குருகிராமிற்கு தெற்கே 46.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; தில்லிக்கு தெற்கே 83.6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. குருகிராம்-அல்வார் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 248 (48) நூக் நகரம் வழியாகச் செல்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 13 வார்டுகளும், 2,636 குடும்பங்களும் கொண்ட நூக் நகரத்தின் மக்கள் தொகை 16,260 ஆகும். அதில் ஆண்கள் 8,502 மற்றும் பெண்கள் 7,758 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 912 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 19% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 69.6% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,321 மற்றும் 0 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 49.1%, இசுலாமியர் 50.09%, பௌத்தர்கள் , சமணர்கள் 0.36%, சீக்கியர்கள் 0.38% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gurgaon is now ‘Gurugram’, Mewat renamed Nuh: Haryana government". The Indian Express. 12 April 2016. http://indianexpress.com/article/india/india-news-india/gurgaon-gurugram-rename-mewat-nuh-haryana-government/. பார்த்த நாள்: 12 April 2016.
- ↑ Nuh Ctiy Population, Religion, Caste, Working Data Mewat, Hariyana - Census 2011