அலைகள் ஓய்வதில்லை
அலைகள் ஓய்வதில்லை | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | ஆர். டி. பாஸ்கர் பாவலர் கிரியேஷன்ஸ் |
கதை | மணிவண்ணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் ராதா |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
வெளியீடு | சூலை 18, 1981 |
நீளம் | 3993 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அலைகள் ஓய்வதில்லை (Alaigal Oivathillai)1981 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- கார்த்திக்- விச்சுவாக (பின்னணிக்குரல்: எஸ்.என்.சுரேந்தரன்)
- ராதா மேரியாக (பின்னணிக்குரல்: அனுராதா)
- தியாகராஜன்- டேவிட் (பின்னணிக்குரல்: பாரதிராஜா)
- வாகாயாக முகமது
- தீபக்
- யூன்ஸ்
- ரங்கா
- ரமேஷ்
- புருஷோத்தமன்
- சில்க் ஸ்மிதா- எலிசி
- கமலா காமேஷ் விச்சுவின் தாயாக (பின்னணிக்குரல்: ஹேமமாலினி)
- ரேணு சந்திரா
- பெரிய கருப்பு தேவர்
- வெள்ளை சுப்பையா
- சுரேஷ் சக்ரவர்த்தி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்தின் பாடல்கள், பின்னணி இசையை ஆகியவற்றிற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். "ஆயிரம் தாமரை", "விழியில் விழுந்து" ஆகிய பாடல்களை வைரமுத்து இயற்றினார். "புத்தம் புது காலை", "வாடி என் கப்பா கிழங்கே" ஆகிய பாடல்களை கங்கை அமரன் இயற்றினர். காதல் ஓவியம் என்ற பாடலை பஞ்சு அருணாசலம் இயற்றினார். மீதமுள்ள சிறிய பாடல்களை இளையராஜாவே இயற்றி இசையமைத்தார். படத்தின் பாடல்கள் இன்று வரை இளையராஜாவின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கிறது.
"புத்தம் புது காலை" பாடல் மீண்டும் பதிவு செய்யப்பட்டது. மகேந்திரன் இயக்கத்தில் மருதாணி திரைப்படத்திற்கு உருவாவதாக இருந்தது. அத்திரைப்படம் தயாரிக்கப்படாததால், இப்பாடல் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் எல்பி பதிவுகளில் மட்டுமே உள்ளது. இப்பாடலை இளையராஜா மீண்டும் 2014 இல் மேகா திரைப்படத்தில் பயன்படுத்தினார்.[2][3]
# | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "ஆயிரம் தாமரை" | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:30 | |
2. | "தரிசனம் கிடைக்காதா" (பெண்) | வைரமுத்து | எஸ். ஜானகி | 1:12 | |
3. | "தரிசனம் கிடைக்காதா" (ஆண்) | வைரமுத்து | இளையராஜா | 1:50 | |
4. | "காதல் ஓவியம்" (பதிவு 1) | பஞ்சு அருணாசலம் | இளையராஜா, ஜென்சி அந்தோனி | 4:38 | |
5. | "காதல் ஓவியம்" (பதிவு 2) | பஞ்சு அருணாசலம் | இளையராஜா, ஜென்சி அந்தோனி | 1:51 | |
6. | "லம்போதரா" | இளையராஜா | எஸ். ஜானகி | 0:53 | |
7. | "புத்தம் புது காலை" | கங்கை அமரன் | எஸ். ஜானகி | 4:34 | |
8. | "ச ரி க ம ப" | இளையராஜா | குருவாயூர் ராஜம், எஸ். ஜானகி | 2:03 | |
9. | "தோத்திரம் பாடியே" | இளையராஜா | இளையராஜா, பி. ௭ஸ். சசிரேகா | 0:47 | |
10. | "வாடி என் கப்பா கிழங்கே" | கங்கை அமரன் | இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கரன், ஜென்சி அந்தோனி | 4:45 | |
11. | "வாழ்வெல்லாம் ஆனந்தமே" | இளையராஜா | இளையராஜா, எஸ். ஜானகி | 1:27 | |
12. | "விழியில் விழுந்து" | வைரமுத்து | இளையராஜா, பி. ௭ஸ். சசிரேகா | 4:03 |
விருதுகள்
[தொகு]- 1981 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - முதல் பரிசு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "முதல் படத்துல ஒரு திட்டு கூட வாங்கலை - நடிகை ராதாவின் 'அலைகள் ஓய்வதில்லை' ப்ளாஷ்பேக் பேட்டி" (in ta). Hindu Tamil Thisai. 18 July 2019 இம் மூலத்தில் இருந்து 18 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190718100035/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/507685-alaigal-oivathillai-radha.html.
- ↑ Kumar, S. R. Ashok (13 September 2013). "Audio Beat: Megha — Musical cloudburst". The Hindu இம் மூலத்தில் இருந்து 28 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171028044602/http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-megha-musical-cloudburst/article5124165.ece.
- ↑ "Ilayaraja reuses his classic song !". Behindwoods. 2 May 2013. Archived from the original on 2 October 2019. பார்க்கப்பட்ட நாள் 6 April 2020.
நூற்பட்டியல்
[தொகு]- Dhananjayan, G. (2011). The Best of Tamil Cinema, 1931 to 2010: 1977–2010. Galatta Media. இணையக் கணினி நூலக மைய எண் 733724281.