மேகா (2014 திரைப்படம்)
Appearance
மேகா | |
---|---|
இயக்கம் | கார்த்திக் ரிஷி |
தயாரிப்பு | ஆல்பர்ட் ஜேம்ஸ் S. செல்வக்குமார் |
இசை | இளையராஜா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஆர். பி. குருதேவ் |
படத்தொகுப்பு | ராம் சுதர்சன் |
கலையகம் | ஜி. பி. ஸ்டூடியோ |
விநியோகம் | ஜெ. கே. எஸ். பிலிம் கார்ப்பரேசன் |
வெளியீடு | ஆகத்து 29, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேகா (Megha) 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். திரில்லர் வகையை சேர்ந்த இப்படத்தை இயக்கியவர் கார்த்திக் ரிஷி.[1] ஆல்பர்ட் ஜேம்ஸ் மற்றும் S. செல்வக்குமார் கூட்டாக தயாரித்த இப்படத்தில் அஸ்வின் ககுமனு, சிருஷ்டி டங்கே மற்றும் அங்கனா ராய் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜெயப்பிரகாசு, ரவி பிரகாசு, ஆடுகளம் நரேன், மீரா, நித்யா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.[2] இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஆகஸ்ட் 29, 2014 அன்று வெளிவந்தது.[3]
நடிகர்கள்
[தொகு]- அஸ்வின் ககுமனு - முகிலன் (முகில்)
- சிருஷ்டி - மேகவதி சீனிவாசன் (மேகா)
- அங்கனா ராய் - துளசி
- ஜெயப்பிரகாசு - ஜெயகுமார்
- விஜயகுமார் - ராகவன்
- ஒய். ஜி. மகேந்திரன்
- ஆடுகளம் நரேன் - ஜோசப் பெர்னான்டோ
- ரவி பிரகாசு - சீனிவாசன்
- மீரா கிருஷ்ணன்
- சசிகுமார் - மணி
- சாய் பிரசாந்த்
- நித்யா
- பேபி யுவினா - யுவி
இசை
[தொகு]இளையராஜா பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்தார். இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றன. அவற்றில் ஒன்று அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் இடம்பெற்ற "புத்தம் புது காலை" என்ற பாடலாகும். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பிடித்திருந்ததால் இதில் பணியாற்ற சம்மதித்ததாக இளையராஜா தெரிவித்தார்.[4]
- முகிலோ மேகமோ- யுவன் சங்கர் ராஜா, ரம்யா என்.எஸ்.கே.
- செல்லம் - யுவன் சங்கர் ராஜா, ரம்யா என்.எஸ்.கே.
- என்ன வேண்டும் - கார்த்திக், பிரியதர்சினி
- ஜீவனே - இளையராஜா
- புத்தம் புது காலை- அனிதா கார்த்திகேயன்
- கள்வனே - ஹரிசரன், ரம்யா என்.எஸ்.கே.
சான்றுகள்
[தொகு]- ↑ "It's an honor to work with Ajith – Ashwin". Behindwoods. 2 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 ஏப்ரல் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Megha". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 மார்ச் 2013. Archived from the original on 2014-01-07. பார்க்கப்பட்ட நாள் 7 ஏப்ரல் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "JSK Films to come with three flicks with different themes". IndiaGlitz. 21 மே 2014. Archived from the original on 2014-05-25. பார்க்கப்பட்ட நாள் 26 மே 2014.
- ↑ http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-megha-musical-cloudburst/article5124165.ece