விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு94

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியங்கள் கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தின் கீழ் விக்கித்திட்டத்துக்குக் கொடை[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக மயூரநாதன், சுந்தர், இரவி, நான் ஆகிய நாங்கள் நால்வரும், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் பேராசிரியர் ப. அர. நக்கீரன் அவர்களும் செப்டம்பர் 28, 2013 அன்று தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் வா. செ. குழந்தைசாமி அவர்களை நேரில் அவர் இல்லத்தில் சந்தித்தோம். அப்பொழுது தமிழ் வளர்ச்சிக் கழகம் 1954-இல் தொடங்கி, 1968 வரை வெளியிட்டுள்ள கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளையும், 1968-இல் தொடங்கி 1976-இல் நிறைவு பெற்ற குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளையும் உலகப் பயன்பாட்டிற்காக கிரியேட்டிவ் காமன்சு பகிர்வுரிமத்தின் கீழ் மாற்றித்தந்தால் தமிழ் விக்கிப்பீடியாவின் உறவுத்திட்டங்களில் வெளியிடலாம், பிறகு அவற்றை நாம் பல திட்டங்களில் தக்கவாறு பயன்கொள்ளலாம் என எடுத்துக்கூறி வேண்டினோம். அதன் பயனாய் இப்பொழுது அக்டோபர் 23, 2013 அன்று நடந்த தமிழ் வளர்ச்சிக் கழகப் பொதுக்கூட்டத்தில் நம் வேண்டுகோளை ஏற்று ஒப்புதல் தந்துள்ளார்கள். நம் நெஞ்சார்ந்த நன்றியை பேராசிரியர் வா. செ. குழந்தைசாமி அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கழக பொறுப்பாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். தக்க முயற்சிகள் எடுத்து விக்கிமூலத்தில் ஏற்ற முற்படுவோம். [10-ஆவது ஆண்டுநிறைவு விழா கொண்டாட்டத்தை ஒட்டி மாமல்லபுரம் செல்லவிருக்கும் பேருந்தில் நாங்கள் வந்து ஏறுவதற்கு நேரம் ஆனது இதனால்தான் :) ]. --செல்வா (பேச்சு) 06:34, 1 நவம்பர் 2013 (UTC)

👍 விருப்பம்--Anton·٠•●♥Talk♥●•٠· 06:39, 1 நவம்பர் 2013 (UTC)
நமது வேண்டுகோள் ஏற்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதைத் தக்கவாறு பயன்பயன்படுத்திக்கொள்ள வேண்டும். --மயூரநாதன் (பேச்சு) 06:43, 1 நவம்பர் 2013 (UTC)
தித்திக்கும் செய்தி, செல்வா. ஏற்கனவே உங்கள் முயற்சியால் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மாபெரும் கலைச்சொல்லகராதியை விக்சனரிக்குக் கொடையளித்தனர். அதன் வாயிலாகத் தமிழ் விக்சனரி ஒரு தலையான இடம் பெற்றது. அதே போல இந்தக் கொடையின் விளைவாகத் தமிழ் விக்கிமூலமும் விக்கிப்பீடியாவும் பெரும்பயன் எய்தும்! நன்றாகப் பயன்படுத்திக் கொள்வோம். -- சுந்தர் \பேச்சு 06:49, 1 நவம்பர் 2013 (UTC) பேரா.வா. செ. கு. ஐயாவுக்கும், பேரா.ப.அர.நக்கீரன் ஐயாவுக்கும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தாருக்கும் மிக்க நன்றி. -- சுந்தர் \பேச்சு 07:21, 1 நவம்பர் 2013 (UTC)
மிக நல்ல, வளர்ச்சிமுகமான, அனைத்து தமிழ் மக்களுக்கும் வருங்காலத்தில் பயனளிக்கக்கூடிய இப்பணியினை முன்னெடுத்த மயூரநாதன், சுந்தர், இரவி, செல்வா ஆகியோருக்கு என் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்--நந்தகுமார் (பேச்சு) 06:52, 1 நவம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:54, 1 நவம்பர் 2013 (UTC)
அன்றே அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி :) தொழில்நுட்ப வழியில் உதவ விருப்பம் :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 06:58, 1 நவம்பர் 2013 (UTC)
மகிழ்ச்சியான செய்தி. இந்நூல்கள் விக்கியின் தரத்தினை மேலும் உயர்த்துவதுடன் பிற நூலாசிரியர்களையும், கலைக்களஞ்சிய உரிமையாளர்களையும் விக்கிக்கு கொடையளிக்க முன்னோடியாக இருக்கும். உழைத்திட்ட அனைவருக்கும் நன்றிகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:40, 1 நவம்பர் 2013 (UTC)
மிக்க மிக்க மகிழ்ச்சி. விரிவாகப் பதில் பின்னர். --Natkeeran (பேச்சு) 13:19, 1 நவம்பர் 2013 (UTC)
மிகவும் உவப்பான செய்தி. உழைத்திட்ட அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.--மணியன் (பேச்சு) 15:52, 1 நவம்பர் 2013 (UTC)
மகிழ்ச்சியான செய்தி. அக்களஞ்சியங்கள் தற்போது ஒருங்குறி வடிவத்தில் உள்ளனவா?--நீச்சல்காரன் (பேச்சு) 16:42, 1 நவம்பர் 2013 (UTC)
நீச்சல்காரன், அவை ஒருங்குறியில் இல்லை. அச்சுநூல்கள். அப்பொழுது ஒருங்குறி சேர்த்தியம் (யூனிக்கோடு கன்சார்சியம்) உருவாகக்கூடவில்லை. அனால் இக்கலைக்களஞ்சியத்தில் கட்டுரை எழுதியவர்கள் ஆழமான அறிவுடையவர்கள். ஏராளமான படங்கள் உள்ளன. கட்டுரைத்தலைப்புகளில் மாறாத தகவல்கள் உள்ளன. இவை மின் வடிவில் விக்கிமூலம் போன்ற இடத்தில் ஏற்றி வைத்தால் மிகவும் பயனுடையதாக இருக்கும். தக்க இடங்களில் விக்கிப்பீடியாவிலும் சான்றுகோளாகத் தரலாம் (அவை இன்றும் செல்லும் எனில்). பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் 1911 பதிப்பு போலவும் பயன்கொள்ளலாம். கணிதம், அறிவியல், வரலாறு, இலக்கியம், பெரும்புலவர்கள், தாவரங்கள், விலங்குகள், மீன்கள், தலைவர்கள் என்று மிகப்பல தலைப்புகளில் இன்றும் செல்லுபடியாகும் கருத்துகள் மிகப்பல உள்ளன. மேலும் இது ஓர் புகழ் மிக்க ஆவணம் (இந்திய மொழிகளில் முதன்முதலாக வெளிவந்த பல்தொகுதி கலைக்களஞ்சியம் இதுவே).--செல்வா (பேச்சு) 16:51, 1 நவம்பர் 2013 (UTC)
பாராட்டுகள்

செல்வா, மயூரநாதன், சுந்தர், இரவி ஆகிய அனைவரும் த.வி. வளர்ச்சிக்குச் செய்துள்ள இந்த முயற்சியை மனதாரப் பாராட்டுகின்றேன். ஒரு சில வாரங்களாக உளைச்சல் தந்து விக்கியின் வளர்ச்சியை முடுக்கிய உரையாடல்களுக்குப் பின் இந்தவொரு நல்ல செய்தி நம் காதுகளை வந்து எட்டியது உவப்பை அளிக்கின்றது. முனைவர் வா.செ.கு. அவர்களுக்கும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஏனைய பொறுப்பாளர்களுக்கும் நன்றி நவிலல் த.வி.யின் கடமை.--பவுல்-Paul (பேச்சு) 17:04, 1 நவம்பர் 2013 (UTC)

 • மேலே, "முடுக்கிய" என்றதை "முடக்கிய" என்று திருத்தி வாசிக்கவும்!
ஆமாம். நிச்சியமாக நன்றி தெரிவிக்க வேண்டும். https://creativecommons.org/licenses/by-sa/3.0/ அதற்கு இணையாம http://www.gnu.org/copyleft/fdl.html ஆகிய உரிமங்களில் அவை அதீகரபூர்வமாக வெளியிடப்பட்ட ஆதரங்களை உறுதிசெய்துகொள்ள வேண்டும். --Natkeeran (பேச்சு) 17:24, 1 நவம்பர் 2013 (UTC)👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 17:27, 1 நவம்பர் 2013 (UTC)
நற்கீரன், தமிழ் வளர்ச்சிக்கழகம் தந்துள்ள ஒப்பாணை கிரியேட்டிவ் காமன்சு பகிர்வுரிமத்தின் கீழ் வெளியிட மட்டும்தான். வேறு உரிமங்களின் கீழ் வெளியிட மீண்டும் போய் கேட்பது கடினம் என்று நினைக்கின்றேன். இந்தக் கலைக்களஞ்சியத்தில் இருந்து நாம் பயன்படுத்தும் பகுதிகளுக்கு கட்டுரை ஆசிரியர் பெயரையும், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பெயரையும் சுட்டவேண்டியது தேவை. --செல்வா (பேச்சு) 17:42, 1 நவம்பர் 2013 (UTC)
பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் விக்கியாக்கம்
செல்வா, https://creativecommons.org/licenses/by-sa/3.0/ உரிமம் போதுமானது. ஆனால் அது இந்தக் குறிப்பிட்ட https://creativecommons.org/licenses/by-sa/3.0/ உரிமம் ஆக இருக்க வேண்டும். இதற்கு குறைவான உரிமங்கள் விக்கியில் செல்லுபடியாகா. --Natkeeran (பேச்சு) 17:57, 1 நவம்பர் 2013 (UTC)
ஆம் இதன் கீழ்தான் வரும். அதில் சிக்கல் இல்லை.--செல்வா (பேச்சு) 18:02, 1 நவம்பர் 2013 (UTC)
 • மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இனி இது குறித்து அடுத்தடுத்து செய்யவேண்டிய பணிகளில் கவனம் செலுத்துவோம். பேரா. வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கும் தமிழ் வளர்ச்சிக்கழகப் பொறுப்பாளர்களுக்கும், பேரா. நக்கீரன் அவர்களுக்கும் முறையாக நன்றி நவிலுவோம். இதனை நாம் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும். --செல்வா (பேச்சு) 18:12, 1 நவம்பர் 2013 (UTC)
மிகவும் மகிழ்ச்சி கரமான செய்தி. முயற்சித்த அனைவருக்கும் மிக்க நன்றி. இவ்வுரிமத்தை அளித்த பெரியோர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 18:43, 1 நவம்பர் 2013 (UTC)

மகிழ்ச்சியான செய்தி. இதற்கான உழைப்பு, பெருமை முழுதும் செல்வா, திரு. ப. அர. நற்கீரன், பேரா. வா. செ. கு, அவர்களையே சென்று சேரும். செப்டம்பர் 24 அன்று தமிழிணைய கல்விக் கழகத்தில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி செல்வா உரையாற்றினார். அந்த உரையை அடுத்த கலந்துரையாடல் நேரத்தில் "தங்கள் இணைய தளத்தின் உள்ளடக்கங்கள் கூகுள் தேடலில் முந்துவதில்லை, தமிழ் விக்கிப்பீடியா தான் முந்துகிறது. எங்கள் உள்ளடக்கத்தை எப்படி விக்கிப்பீடியாவில் ஏற்றிப் பலரும் பயன்பெறுமாறு செய்யலாம்" என்று திரு. நற்கீரன் வினவினார். கிரியேட்டிவ் காமன்சு பற்றி எடுத்துரைத்தோம். செல்வாவும் திரு. நற்கீரனும் கல்லூரித் தோழர்கள். பேரா. வா. செ. கு, இவர்களுக்குப் பாடம் எடுத்தவர். எனவே, செல்வா கனடா திரும்பும் முன் இப்பணியைச் செய்து முடிப்பதே நன்று என்று உடனே செயலில் இறங்கினோம். செப்டம்பர் 27 அன்று மயூரநாதன், சுந்தர் இருவரும் வந்து சேர்ந்த பிறகு அவர்களோடு இணைந்து திரு. நற்கீரனைச் சந்தித்துப் பேசுவது என்று முடிவு செய்து அன்று மாலை 4 மணியளவில் தமிழிணைய கல்விக்கழகத்தில் இரண்டு மணி நேரம் பேசினோம். நமது வேண்டுகோளைப் பற்றிப் புரிந்து கொண்டு திரு. நற்கீரன், பேரா. வா. செ. கு. அவர்களிடம் 28 காலை 10 மணியளவில் பேசுவதற்கு நேரம் வாங்கித் தந்தார். பேராசிரியரின் வீட்டில் நடந்த உரையாடல் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் நீண்டது. அவரை நாம் சென்று பார்க்கும் முன்னரே நமது பத்தாண்டு நிகழ்வைப் பற்றி தி இந்து செய்தி மூலம் அறிந்திருந்தார். நமது வேண்டுகோளை முன்வைத்தவுடன் உடனே இசைந்து தமிழ் வளர்ச்சிக் கழகத்துக்கான முறையான வேண்டுதலை எழுதித்தருமாறு அறிவுறுத்தினார். இக்கடிதம் எழுதும் பணியைப் பொறுப்பேற்றுக் கொண்ட செல்வா, செப்டம்பர் 30 மீண்டும் ஒரு முறை தமிழிணைய கல்விக் கழகம் சென்று கடிதத்தைத் தந்து வந்தார். இப்போது இந்த நற்செய்தி வந்துள்ளது. இதனை விரைந்தும் சீராகவும் எண்மியப்படுத்திக் காட்டுவதே தமிழ் வளர்ச்சிக்கழகத்துக்குச் செய்யும் கைமாறு. மேலும் பல நிறுவனங்கள் தங்கள் ஆக்கங்களைப் பொது உரிமத்தில் தரத் தூண்டுவதாக அமையும். நன்றி. --இரவி (பேச்சு) 13:07, 2 நவம்பர் 2013 (UTC)

விக்கிப் பயனர்கள் கையப்பம் இட்ட ஒரு நன்றிக் கடிதத்தை அனுப்பலாமா!--Natkeeran (பேச்சு) 23:58, 2 நவம்பர் 2013 (UTC)
 • நன்றி இரவி. நற்கீரன், பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கு விடுத்த மடலை இப்பொழுது ஒரு பி.டி.எப் கோப்பாக ஏற்றியிருக்கின்றேன். இங்கே பார்க்கவும். இதனின் சரவற் படி ஒன்றை மயூரநாதன், சுந்தர், இரவி ஆகியோருக்கு அனுப்பி, கருத்துகளைப் பெற்ற பின்னரே அனுப்பினேன். இதே போல நன்றி மடல் ஒன்றையும் தமிழ் விக்கியின் சார்பாக அனுப்ப வேண்டும். யாரேனும் ஒருவர் பெயரில் அனுப்பி, சிலருக்குப் படி அனுப்பி, இங்கே தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு கோப்பாக ஏற்றி வைக்கலாம். பயனர்கள் எல்லோருடைய கையெழுத்தையும் பெற்று அனுப்புவதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கும். நன்றி மடலை நான் விக்கியில் இட்டு, அதனை பயனர்கள் சரி என்றால் அதன் பின் அதனை மடலாக அனுப்பலாம். ஒருவரே தொடர்பு மேற்கொண்டால் நல்லது என்று கருதுகின்றேன். --செல்வா (பேச்சு) 03:27, 3 நவம்பர் 2013 (UTC)
செல்வா, நன்றி நவிலும் பொறுப்பையும் நீங்களே முன்னின்று செய்வது சிறப்பாக இருக்கும். நன்றி நவிலல் கடிதத்தில் https://creativecommons.org/licenses/by-sa/3.0/ உரிமத்தின் கீழ் வெளியிட வேண்டும் என்பதைத் தெளிவாக கோர வேண்டும். பிறகு, அவர்கள் முறையாக ஒப்பம் அளிக்கும் கடிதம் ஒன்றையும் கோர வேண்டும். --இரவி (பேச்சு) 05:00, 3 நவம்பர் 2013 (UTC)
ஆம், நீங்களே நன்றி நவிலல் மடலை எழுதுவது பொருந்தும், செல்வா. மடலை அனைவருடனும் பகிருங்கள். -- சுந்தர் \பேச்சு 09:32, 5 நவம்பர் 2013 (UTC)

நிறைவேற்றுவற்கான இரண்டு வழிகள்[தொகு]

தமிழ்க் கலைக்களஞ்சிய உள்ளடக்கத்தை பதிவேற்ற நாம் பின்வரும் பணிகள் செய்ய வேண்டும்:

 • கட்டுரைகளைத் தட்டச்சு செய்தல்
 • விக்கி மூலத்தில் பதிவேற்றல், விக்கியாக்கம் செய்தல்
 • மெய்ப்புப்பார்த்தல்
 • விக்கிப்பீடியாவிற்கு நகர்த்தல்/இணைத்தல்
 • விக்கிப்பீடியாவில் கட்டுரையை இற்றை செய்தல்
 • தொடர்புடையை படங்களை விக்கிமூலத்திலும் விக்கிப்பீடியாவிலும் சேர்த்தல்

பயனர்கள் நிறைவேற்றுவது

கட்டுரைப் போட்டி போன்று அடுத்த ஆண்டு முழுக்க பதிவேற்றலை ஒரு போட்டியாக முன்னெடுக்கலாம். புதிய கட்டுரைகள் எழுதப் பயப்படும் பயனர்களுக்கு இது ஒரு நல்ல பணியாக அமையும். பள்ளி மாணவர்களையும் இச் செயற்பாட்டில் ஈடுபடுத்தலாம். இது வழி, முற்றிலும் தன்னார்வலர்களைக் கொண்டு முன்நகர்த்தப்படும். இதனூடாக விக்கிச் சமூக ஊடாட்டம் அதிகரிக்கலாம். ஆனால் இந்த வழியின் ஒரு பெரிய சிக்கல், இது நெடுங்காலம் எடுக்கலாம் என்பது. மேலும் இச் செயற்திட்டம் ஊக்கமான தொடக்கத்தின் பின் தொய்வுநிலைக்கு சென்று செயலிழந்து போய்விடும் இடர் (risk) உண்டு.

ஊழியர்களைக் கொண்டு நிறைவேற்றுவது

இந்திய விக்கிக் கிளை, விக்கிமீடிய நிறுவனம் அல்லது நாமாகவோ நிதி திரட்டி இந்த உள்ளடக்கத்தை தட்டச்சு செய்தல், பதிவேற்றல் பணியினை நிறைவேற்றலாம். பதிவேற்றல் பணி இந்த வழியில் மிக விரைவாக நிறைவேறும். ஆனால் ஊழியர்களைப் பயன்படுத்திச் செய்வது விக்கிச் சமூகத்திற்கு இது ஓர் தவறான முன் எடுத்துக்காட்டாக அமைவதோடு, தற்போது பங்களிக்கும் பயனர்களின் ஊக்கத்தையும் குறைக்கக் கூடும்.

பணிகள், நிறைவேற்றுவது தொடர்பான வழிகள் தொடர்பான உங்கள் கருத்துக்களைக் பகிருங்கள். --Natkeeran (பேச்சு) 23:42, 2 நவம்பர் 2013 (UTC)

நற்கீரன், மேலே நீங்கள் குறிப்பிட்ட வழிகளிலேயே செய்யலாம் என்றே நினைக்கின்றேன். விக்கிமீடியா நிறுவனத்தில் நிதியுதவி பெற்றோ, தனியார்களிடம் நிதி திரட்டியோ, தட்டச்சு செய்வதற்கு மட்டும் தக்கவர்களைக் கொண்டு விக்கி மூலத்தில் ஏற்றலாம். மெய்ப்புப் பார்ப்பதை நாம் செய்யலாம். இதில் மொழிபெயர்ப்பு போன்ற அறிவு உழைப்பு ஏதும் இராது, ஆகவே சிக்கல் ஏதும் இராது என்று நினைக்கின்றேன். இவற்றில் இருந்து விக்கிப்பீடியாவுக்குக் கட்டுரைகள் எடுத்துப் பயன்படுத்தும்பொழுது (சுருக்கியோ விரித்தோ இற்றைப்படுத்திப் பயன்படுத்தும் பொழுது), நம் தொகுப்புப்பணி, விக்கியாக்கப் பணி ஆகியவை இருக்கும். படங்களைத் தக்கவாறு அழகூட்டியோ விரிவுபடுத்தியோ பயன்படுத்தலாம். எப்படியாயினும், திட்டமிட்டு கூடிய விரைவில் முடிக்கவும், முன்னேற்றத்தை அளந்து ஒழுங்குபடுத்திக்கொண்டு செல்லுதலும் வேண்டும். சிறப்பாக செய்தலும் வேண்டும். தட்டச்சு செய்வதற்கு இந்தியாவிலும் இலங்கையிலும், பிற நாடுகளிலும் இருந்து தன்னார்வலர்களாகவோ, பணியமர்தியவர்களாகவோ பலரை ஈடுபடுத்தி விரைவாக முடிக்க வேண்டும். ஆனால் தக்க ஒருங்கிணைப்பாளர்கள் தேவைப்படும். மொத்தம் 20 தொகுதிகள் உள்ளன. கலைக்களஞ்சித்தின் 10 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியும் ஏறத்தாழ 1000 பக்கங்கள் கொண்டவை. குழந்தைக் கலைக்களஞ்சியம் சற்று குறைவு. 10 பேர் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் எனும் வீதம் தட்டசு செய்தால் 100 நாள்கள் ஆகும் ஒரு தொகுதி முடிக்க. இதைச் செயற்படுத்த சில வழிகள் உள்ளன என்றாலும், பயனர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால், அதனையும் உள்வாங்கி செயற்படுத்தலாம். இதனைச் சிறப்பாகச் செய்தால், இன்னும் பல ஆக்கங்கள் நமக்கு (உலகத்தாருக்கு)க் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. --செல்வா (பேச்சு) 03:54, 3 நவம்பர் 2013 (UTC)

இது குறித்த உரையாடலை விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் விக்கியாக்கம் பக்கத்தில் தொடர்வது பொருத்தமாக இருக்கும்.--இரவி (பேச்சு) 05:01, 3 நவம்பர் 2013 (UTC)

கட்டுரைப்போடியாளர்கள் கவனத்திற்கு[தொகு]

கட்டுரைப்போடியாளர்கள் தாங்கள் அக்டோபர் மாதம் விரிவாக்கிய அனைத்து கட்டுரைகளையும் முடிவுகள் பக்கத்தில் சேர்த்துள்ளார்களா? செய்யவில்லை என்றால் விரைந்து செய்யவும்.

புயல், சூறாவளி, பூகம்பம், சூரியப்புயல் போன்றவை பலமாக அடித்ததாக தெரியவில்லையே. ஒரு கடல்கோள் மட்டும் வந்து சென்றதாக தெரிகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:08, 1 நவம்பர் 2013 (UTC)

எவ்வாறு?[தொகு]

"விக்கிப்பீடியா பதக்க வார்ப்புருக்கள்" எனும் பக்கத்தில் நான் உருவாக்கிய பதக்கத்தை இட்டு அவ்வார்ப்புருவை தொகுப்பது எவ்வாறு? அடியேன் யாழ்ஸ்ரீ

தமிழக நாட்டுடைமை நூல்களுக்கு ஒரு மாதிரி - கருத்திடுக[தொகு]

கவிஞன் உள்ளம் என்ற நூல், தமிழகத்தின் நாட்டுடைமை நூல்களில் ஒன்று. இதனை ஒரு மாதிரிக் கட்டுரையாக அமைத்துள்ளேன். இதுபோல மீதமிருக்கும் ஏறத்தாழ 1000 நூல்களை உருவாக்க உள்ளேன். எனவே, இது குறித்த பிறரின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 17:21, 1 நவம்பர் 2013 (UTC)

 1. சற்றுப் பொருத்தருள்க. வார்ப்புரு_பேச்சு:நூல்_தகவல்_சட்டம்#டப்பிளின் கருவகம் - பரிந்துரைகள்
  தகவல் சட்டத்தில் சேர்த்திருக்கப்பட்டு இருக்கும் மீதரவுகள் போதாது. --Natkeeran (பேச்சு) 17:27, 1 நவம்பர் 2013 (UTC)
  சரிங்க. காத்திருக்கிறேன். உடன் குறிப்பெழுதியமைக்கு நன்றி. சந்திப்போம். வணக்கம். --≈ உழவன் ( கூறுக ) 17:30, 1 நவம்பர் 2013 (UTC)
 2. தகவல் உழவன், கட்டுரை விக்கியின் கலைக்களஞ்சிய வடிவத்தில் இருந்து சற்று வேறுபடுகிறது. முக்கியமாக, அறிமுகப் பகுதியின் நடை கலைக்களஞ்சிய நடை அல்ல. நீங்கள் இதுபோன்ற தலைப்புக்களில் பல கட்டுரைகளை எழுத எண்ணியிருப்பதால் இதைத் திருத்தி மாதிரியாக வைத்துக்கொள்வது நலம். வேண்டுமானால் நானும் உதவுகிறேன். --- மயூரநாதன் (பேச்சு) 04:40, 2 நவம்பர் 2013 (UTC)
  மிக்கநன்றி. பலரும் தங்களைப் போன்று முன்வருவர் என்றே எண்ணுகிறேன். அறிமுகப்பகுதி எப்படி அமைய வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ, அதனை அதன் உரையாடற் பகுதியில் எழுதக்கோருகிறேன். பலரின் எண்ணத்தையும் ஒருங்கே தொகுத்தபிறகு, கட்டுரையில் மாற்றம் ஏற்படுத்தலாமென எண்ணுகிறேன். படிப்பவரின் எண்ணம் தூண்டப்பட வேண்டும் என்பதே எனது இலக்கு. மற்றவை உங்கள் உரை கண்டு--≈ உழவன் ( கூறுக ) 04:47, 2 நவம்பர் 2013 (UTC)
  இதன் தொடர்ச்சியையும், முடிவுகளையும் இப்பக்கத்தில் காணலாம். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 05:32, 3 நவம்பர் 2013 (UTC)

மொழிபெயர்ப்பு விதிகள்[தொகு]

வேற்று மொழிகளில் இருந்து சொற்களை, பெயர்களை தமிழில் எப்படி மாற்றுவது என்பது குறித்து, அடிப்படையாக சில விதிகளையேனும் வகுக்க வேண்டுகிறேன். விக்கிப்பீடியா:மொழிபெயர்ப்பு விதிகள்/மலையாளம் என்ற பக்கத்தில் மலையாளம் குறித்து விதிகள் உருவாக்கி உதவுக! பேச்சுப் பக்கத்தில் கேட்டுள்ளேன். நன்றி! தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:26, 2 நவம்பர் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா ஆவணப்படம், விக்கிப்பீடியர் நேர்காணல்கள் வெளியீடு[தொகு]

https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_wikipedia_10_years_celebrations பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியர் நேர்காணல்களைத் தொடர்ந்து ஏற்றி வருகிறோம்.

 1. அபிராமியின் பேச்சு
 2. அருணன் கபிலன் பேச்சு
 3. அசுவின் பேச்சு
 4. சோடாபாட்டிலின் பேச்சு
 5. புருனோவின் பேச்சு (தமிழில்)
 6. புருனோவின் பேச்சு(ஆங்கிலத்தில்)
 7. தகவல் உழவனின் பேச்சு
 8. தமிழ் விக்கிப்பீடியா ஆவணப்படம் (ஆங்கிலத்தில்)

காமன்சில் ஏற்றும் பணியைச் சூரியா கவனித்து வருகிறார். யூட்டியூபில் நான் கவனித்து வருகிறேன்.

தமிழ் விக்கிப்பீடியா பற்றி தமிழில் தொகுத்துள்ள ஆவணப்படத்தை http://www.youtube.com/watch?v=teC0OCG_0jc என்ற முகவரியில் பார்க்கலாம். யூட்டியுபில் தொடர்ந்து ஏற்றப்படும் படங்களை http://www.youtube.com/user/TamilWikimedia பக்கத்தில் காணலாம். இதே படங்களை கூடிய விரைவில் கூகுள் இடிரைவிலும் ஏற்றி வைக்கிறோம். இவற்றை பரப்புரைகளின் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் படங்கள் அனைத்தையும் சமூக ஊடகங்களில் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்வதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வு கூட்ட உதவுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:36, 2 நவம்பர் 2013 (UTC)

👍 விருப்பம்--பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:53, 4 நவம்பர் 2013 (UTC)
👍 விருப்பம் -- சுந்தர் \பேச்சு 09:29, 5 நவம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:29, 5 நவம்பர் 2013 (UTC)
அருமையாக வந்துள்ளன. --Natkeeran (பேச்சு) 14:14, 5 நவம்பர் 2013 (UTC)
👍 விருப்பம் சிறப்பான கருத்தாக்கத்திற்கும் செயற்படுத்தலுக்கும் பாராட்டுக்கள்!!--மணியன் (பேச்சு) 15:39, 5 நவம்பர் 2013 (UTC).
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:07, 5 நவம்பர் 2013 (UTC)
மகிழ்ச்சி. எனது பயனர் பெயர் விடுபட்டுள்ளது. அதனை இணைக்க எங்கு கோர வேண்டும்? --≈ உழவன் ( கூறுக ) 03:26, 6 நவம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 01:53, 7 நவம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:01, 7 நவம்பர் 2013 (UTC)

விருப்பங்களுக்கு நன்றி. இப்போது அனைத்து நேர்காணல்களும் யூடியூபில் ஏற்றப்பட்டுவிட்டன. பொதுவகத்தில் ஏற்றும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.--இரவி (பேச்சு) 16:51, 20 நவம்பர் 2013 (UTC)

பங்களிப்பாளர் தொகுப்புகளுக்கு நன்றி நவிலல்[தொகு]

ஒவ்வொரு பக்கத்தின் வரலாற்றுப் பக்கத்திலும் ஒவ்வொரு தொகுப்பின் இறுதியிலும் அந்தத் தொகுப்பைச் செய்தவருக்கு நன்றி செலுத்தும் வசதி வந்திருக்கிறது. தொடர் சிறப்புப் பங்களிப்புகளுக்குப் பதக்கம் அளிப்பது போல் சிறந்த தொகுப்புக்கு இந்த வசதியைப் பயன்படுத்தலாம். முயன்று பாருங்கள். அதே வேளை, முகநூலில் விருப்பம் போடுவது போல் எல்லாவற்றுக்கும் நன்றி போட்டால் இடையூறாகவும் அமையலாம் என்பதையும் கவனித்தல் நலம். எனவே, மிகவும் சிறப்பான தொகுப்புகளுக்கு மட்டும் இதனைப் பயன்படுத்தலாம். நன்றி :) --இரவி (பேச்சு) 12:40, 2 நவம்பர் 2013 (UTC)

👍 விருப்பம் எனக்கும் சிலர் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளனர். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:51, 2 நவம்பர் 2013 (UTC)
இப்புதியமுறையில் ஒரு நபரைப்பற்றி ஒரு உரையாடலில் குறிப்பிடும் போது, அவரது கவணத்தினை ஈற்க அவரின் பயனர் பக்கத்திற்கு இணைப்பிட்டால் (எ.கா: ஜெயரத்தினா...) அவருக்கு அது அறிவிப்பாக காண்பிக்கப்படும். கவணிப்பு பட்டியலில் இல்லாத பக்கங்களில் தம்மை குறிப்பிடப்படுவதோ அல்லது தம்மிடம் உதவி வேண்டுவதோ அப்பயனருக்கு தெரியாமல் இருக்கலாம். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 01:37, 4 நவம்பர் 2013 (UTC)

தமிழில் ஒரு நிறுவனத்தின் கண்ணோட்டம்[தொகு]

யூடியூப்பில் உலவும் பொழுது ஒரு மலேசிய நிறுவனத்தின் கண்ணோட்டம் தமிழில் இருந்ததை கண்டு மகிழ்ந்தேன். கண்ணோட்டத்தை வழங்கியர் பள்ளியில் படிக்கும் மாணவரைப் போன்று பேசியது கொஞ்சம் உறுத்தலாக இருக்கலாம். அதனை இங்கு காணுங்கள்.--பழ.இராஜ்குமார் (பேச்சு) 18:18, 2 நவம்பர் 2013 (UTC)

அதனைக் கண்டு, வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளேன். நன்றி--≈ உழவன் ( கூறுக ) 05:53, 3 நவம்பர் 2013 (UTC)
இது போல் நேரடியாக விக்கிப்பீடியாவுக்குத் தொடர்பில்லை விசயங்களை ஆலமரத்தடி (அறிவிப்புகள்) பகுதியில் இட வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 16:55, 20 நவம்பர் 2013 (UTC)

பக்கவழி நெறிப்படுத்தல்[தொகு]

பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள் தமிழ் விக்கியில் பல இருந்தும்(600+) இங்கு ஒன்று கூட காட்டப்படவில்லை. __DISAMBIG__ என்று அப்பக்கத்தின் தொடக்கத்தில் இடுதல் இதனை மாற்றுகின்றது. அனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்களிலும் இதனை இணைத்து விடலாமா? மேலும் இப்பக்கங்கள் கட்டுரைகள் கணக்கில் வருமா? --அஸ்வின் (பேச்சு) 17:11, 4 நவம்பர் 2013 (UTC)

அனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்களிலும் இதனை இணைக்க வேண்டியதில்லை, {{பக்கவழி நெறிப்படுத்தல்}}இல் இட்டால் போதும் என நினைக்கின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:34, 4 நவம்பர் 2013 (UTC)
நன்றி ஜெயரத்தினா. அடுத்த பணி சிறப்பு:DisambiguationPageLinks --அஸ்வின் (பேச்சு) 17:47, 4 நவம்பர் 2013 (UTC)

Introducting Beta Features[தொகு]

(Apologies for writing in English. Please translate if necessary)

We would like to let you know about Beta Features, a new program from the Wikimedia Foundation that lets you try out new features before they are released for everyone.

Think of it as a digital laboratory where community members can preview upcoming software and give feedback to help improve them. This special preference page lets designers and engineers experiment with new features on a broad scale, but in a way that's not disruptive.

Beta Features is now ready for testing on MediaWiki.org. It will also be released on Wikimedia Commons and MetaWiki this Thursday, 7 November. Based on test results, the plan is to release it on all wikis worldwide on 21 November, 2013.

Here are the first features you can test this week:

Would you like to try out Beta Features now? After you log in on MediaWiki.org, a small 'Beta' link will appear next to your 'Preferences'. Click on it to see features you can test, check the ones you want, then click 'Save'. Learn more on the Beta Features page.

After you've tested Beta Features, please let the developers know what you think on this discussion page -- or report any bugs here on Bugzilla. You're also welcome to join this IRC office hours chat on Friday, 8 November at 18:30 UTC.

Beta Features was developed by the Wikimedia Foundation's Design, Multimedia and VisualEditor teams. Along with other developers, they will be adding new features to this experimental program every few weeks. They are very grateful to all the community members who helped create this project — and look forward to many more productive collaborations in the future.

Enjoy, and don't forget to let developers know what you think! Keegan (WMF) (talk) 20:42, 5 நவம்பர் 2013 (UTC)

Distributed via Global message delivery (wrong page? Correct it here), 20:42, 5 நவம்பர் 2013 (UTC)

CIS-A2K Grant Report September 2012-June 2013[தொகு]

(Apologies for writing in English. You are welcome to translate this message)

Greetings! As many of you know that the Wikimedia Foundation approved a 22 month grant to the CIS-A2K. The aim of the grant is to support the growth of Wikimedia movement in India.
Please find the Grant Report for the first 10 months period here.
CIS-A2K will be happy to receive your feedback. Please let us know if you have any suggestions, questions and concerns about the report and our work. We would be glad to have this feedback here.
We are thankful to the Wikimedia community in India, Wikimedia India Chapter and the Wikimedia Foundation for actively engaging with our work. We will continue to work upon our deficiencies, failures and successes. Thanks! --Hindustanilanguage (பேச்சு) 06:43, 6 நவம்பர் 2013 (UTC)

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் (இந்தியா) - 3-week intensive training programme[தொகு]

தானியங்கித் தணிக்கை[தொகு]

ஒரு கட்டுரை த.வி.யில் உருவாகும் போதே சிலவகை தணிக்கைப் பணிகளைச் செய்வதன் மூலம் ஒரு தரமான கட்டுரை விக்கியில் கிடைக்கும். இவ்வகை தணிக்கைப் பணியைத் தானியங்கிகளிடம் கொடுப்பதன் மூலம் துப்புரவு செய்யும் பயனர்கள் மற்றும் பங்களிப்பவர்களின் பணிச் சுமை குறையும் என நினைக்கிகிறேன். கட்டுரை உருவாகி 24மணி நேரம் ஆகிய அனைத்துப் புதுக் கட்டுரைகளையும் தானியங்கி கொண்டு தணிக்கை செய்வது சிறப்பாகயிருக்கும். அவ்வகையில் எனக்குத் தேன்றிய(தானியங்கிகளால் முடியும் என நம்பும்) சில பணிகளைப் பட்டியல் இடுகிறேன். எவையெவை தேவை, எவையெவை வேண்டாம் என விவாதித்து முடிவு செய்தால் சிறப்பு. புதிய தேவைகளையும் குறிப்பிடலாம் எதிர்காலத்திலும் யாராவது அதற்கு உதவக் கூடும்.

 1. இப்பக்கம் போல உடைந்த வழிமாற்றிகளைக் கண்டுபிடித்து தகுந்த வார்ப்புருவை இடல். நீக்கல் அணுக்கம் உள்ளவர்கள் அதனை நீக்கவோ,திருத்த செய்யலாம்.
 2. பகுப்புகள் இல்லாக் கட்டுரைகளைக் இனங்கண்டு பகுப்பில்லாத கட்டுரைக்கான வார்ப்புருவை இடல்
 3. தகவல் சட்டம் கொண்டுள்ள கட்டுரைகளில், சட்டத்தில் உள்ள அங்கங்களின் தகவல் அடிப்படையில் பகுப்புக்களை இடல். உதாரணம் Infobox சட்டத்தில் உள்ள பிறந்தநாள் கொண்டு, 'ஆண்டு' பிறப்புகள் பகுப்பைச் சேர்த்தல்
 4. நிர்ணயத்த பைட்டுகளைவிட குறைவான கட்டுரைகளில் குறுங்கட்டுரைக்கான வார்ப்புருவை இடல்
 5. பக்கநெறிபடுத்தல்(உதாரணம்) பக்கங்களுக்கு உள்ளிணைப்பு கொண்ட கட்டுரைகளை இனங்கண்டு, (தானியங்கி மூலம் பயனர் பேச்சுப் பக்கத்தில் செய்தி இட த.வி.யில் அனுமதி இல்லாததால்) தகுந்த வார்ப்புரு இடல். வார்ப்புரு மூலம் பிற பயனர்கள் எழுதிய பயனரின் பேச்சுப் பக்கத்தில் செய்தி இடலாம்.
 6. படிமம் இல்லாத வெற்றுப் படிம முகவரிகள் கொண்ட பக்கங்களை அடையாளம் கண்டு சேகரித்தல். பின்னர் அப்படிமங்களைத் தானியங்கியோ, பயனரோ பொதுவகத்தில் அல்லது த.வி.யில் பதிவேற்றலாம்.

இவை தணிக்கைப் பணிகளில் சில மட்டுமே. தொடர்த் தணிக்கையைத் தமிழ்விக்கிப்பீடியா அனுமதிக்கும் பட்சத்தில் திட்டப் பக்கம் தொடங்கி முறையாகத் தணிக்கைகளை ஒழுங்கு செய்யலாம். ஏற்கனவே இப்பணிகளைச் செய்யும் தானியங்கிகள் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தலாம் அல்லது NeechalBOT கணக்கின் மூலமும் தொடர்த்தணிக்கை செய்யலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 01:41, 7 நவம்பர் 2013 (UTC)

 1. 👍 விருப்பம்--Anton·٠•●♥Talk♥●•٠· 01:44, 7 நவம்பர் 2013 (UTC)
 2. 👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 02:18, 7 நவம்பர் 2013 (UTC)
 3. நல்லது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:25, 7 நவம்பர் 2013 (UTC)
 4. 👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:47, 7 நவம்பர் 2013 (UTC)
 5. 👍 விருப்பம்--அஸ்வின் (பேச்சு) 09:42, 7 நவம்பர் 2013 (UTC)
 6. 👍 விருப்பம்--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:46, 7 நவம்பர் 2013 (UTC)
ஆலோசனை
 • நல்லதொரு முயற்சி நீச்சல்காரரே. குறுங்கட்டுரை வார்ப்புரு இடும் பொழுது அதன் வகையினைப் பொறுத்து உரிய குறுங்கட்டுரை வார்ப்புருவை இடுதல் இயலுமா?. உதாரணமாக இந்து சமய குறுங்கட்டுரை ஒன்றில் குறுங்கட்டுரை இந்து சமயம் என்ற வார்ப்புருவை இணைக்க வேண்டும். கட்டுரை சரியாக வகைப்படுத்தாபொழுது பொதுவான குறுங்கட்டுரை வார்ப்புருவை இணைத்துவிடலாம். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:57, 7 நவம்பர் 2013 (UTC)
ஆம் ஏற்கனவே அக்கட்டுரையில் சமயம் தொடர்பான பகுப்பு இருந்தால் அதன் மூலம் பகுப்பு சார்ந்து வார்ப்புரு இடலாம். அல்லது "சைவம்", "சிவபெருமான்", "இந்து" போன்ற குறிச்சொல் கொண்டு தானியங்கியே ஓரளவிற்கு அபத்தம் நிகழாக வண்ணம் கணிக்கவைக்கவும் முடியும் --நீச்சல்காரன் (பேச்சு) 06:05, 7 நவம்பர் 2013 (UTC)
பகுப்புகள் இல்லாத கட்டுரைகளுக்குத் தனியே வார்ப்புரு தேவையற்றது. அவற்றை இலகுவாக சிறப்புப்பக்கத்தில் கண்டுபிடிக்கலாம். மேலதிக வார்ப்புரு இட்டால் சிறப்புப்பக்கத்தில் இருந்து இருந்து அவை மறைந்து விடும்.--Kanags \உரையாடுக 10:19, 7 நவம்பர் 2013 (UTC)
Kanags, இச்சிறப்புப்பக்கத்தில் உள்ள முதல் கட்டுரை அமர்த்தியா சென்னில் நான்கு பகுப்புகள் உள்ளனவே? இதேபோல ஐஓஎஸ், கதிரொளிர்வு முதலிய பல கட்டுரைகளில் பகுப்பு இருந்தும் ஏன் இங்கு பட்டியலிடப்படுகின்றது? மேலும் ஆங்கிலத்தில் en:Template:Uncategorized என்னும் வார்ப்புரு போல ஒன்று இங்கும் இருந்தால் நலமாக இருக்கும் என் தோன்றுகின்றது. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:38, 7 நவம்பர் 2013 (UTC)

நல்ல முயற்சி. தணிக்கை என்பதற்குப் பதில் பராமரிப்பு என்பது போல் வேறு பெயர் இட்டு முறையான திட்டமாகச் செய்யலாம். விக்கிப்பீடியா துப்புரவு பக்கத்தில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் தேங்கியுள்ளன. இந்நிலையில் இன்னும் பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் பராமரிப்பு தொடர்பான தானியங்கி வார்ப்புருக்களை இடுவதால் பயனில்லை. துப்புரவு தொடர்பான முனைப்பான செயல் திட்டம், பங்களிப்பாளர் அணி இல்லா நிலையில் இன்னும் பல ஆண்டுகளுக்கு அவ்வார்ப்புருக்கள் கவனிக்கப்படாமல் கட்டுரைகள் முழுக்க அறிவிப்புகளாகவும் சிகப்பு இணைப்புகளாகவும் இருக்கும் நிலை வரக்கூடாது. குறுங்கட்டுரைகளைப் பகுப்புகளில் இட்டால் எப்படியும் 30,000 கட்டுரைகள் அப்பகுப்பில் வரும். இத்தனைக் கட்டுரைகளை ஒரு பகுப்பில் அடக்குவதை விட நேரம் கிடைக்கும் போது நாமே கண்ணில் படும் குறுங்கட்டுரைகளை விரிவாக்கி விடுவது மேல். சில மாதங்களுக்கு முன்பு குறுங்கட்டுரைகள் பற்றிய நிலவரத்தை அண்மைய மாற்றங்களில் தெரியப்படுத்தினோம். பல முறை இவற்றை விரிவாக்குவது பற்றி பேசப்பட்டுள்ளது. எனினும், தொடர் கட்டுரைப் போட்டியில் பரிசு அறிவித்தும் கூட முக்கிய குறுங்கட்டுரைகளைக் கூட நம்மால் இன்னும் விரிவாக்க முடியவில்லை.எனவே, மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் புள்ளி 3, புள்ளி 6 போல நேரடியாக பிரச்சினைகளைச் சீர் செய்யும், பங்களிப்புகளைத் தரும் தானியக்கத் தொகுப்புகளை மட்டும் செய்தால் நன்றாக இருக்கும். வார்ப்புரு இடல் போன்ற மற்ற செயற்பாடுகள் பங்களிப்பாளர் வளம் கூடிய ஆங்கில விக்கிப்பீடியாவுக்கே பொருத்தமாக இருக்கும். இத்திட்டம் செயற்படும் போது குறிப்பிட்ட ஒவ்வொரு பணியையும் திட்டப்பக்கத்தில் அறிவித்து சமூகத்தின் இணக்க முடிவை அறிந்து, சில சோதனை ஓட்டங்கள் செய்து, அதன் பிறகு தொடர வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 05:21, 8 நவம்பர் 2013 (UTC)

ஜெயரத்தினா, அமர்த்தியா சென் கட்டுரையில் அனாமதேயப் பயனர் செய்த மாற்றத்தினால் அது பகுப்புகளற்ற பட்டியலில் சிறிது காலம் இடம்பெற்றது. இப்பட்டியல் உடனடியாக இற்றைப்படுத்தப்படுவதில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். பகுப்புகளற்ற கட்டுரைகளைக் கண்டுபிடிப்பதற்கு சிறப்புப்பக்கத்தில் உள்ள பட்டியலை விட வேறு ஏதேனும் வழி உள்ளதா? உங்கள் தானியங்கி எவ்வாறு கண்டுபிடிக்கிறது?--Kanags \உரையாடுக 00:45, 9 நவம்பர் 2013 (UTC)
Kanags, இத்திட்டத்தின் நோக்கம் பழைய கட்டுரைகளைவிட புதிய கட்டுரைகள்தான் இதன் இலக்கு. எல்லாப் புதிய கட்டுரையும் அண்மைய மாற்றங்கள் வினாவல்(query) கொண்டு எடுத்து இந்தப் பணியைப் புரிகிறது. இதன் மூலம் குறைந்தபட்சம் பகுப்பில்லாமல் வரும் புதிய கட்டுரைகளைக் குறைக்கலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 03:00, 9 நவம்பர் 2013 (UTC)
நீச்சல்காரன், அப்படியானால் எனக்கும் உடன்பாடே.--Kanags \உரையாடுக 05:32, 9 நவம்பர் 2013 (UTC)
Kanags, பகுப்புகளற்ற கட்டுரைகளைக் கண்டுபிடிப்பதற்கு இதுவரை தானியங்கி வழியாக நான் முயன்றதில்லை. ஆனால் PHP அல்லது விக்கிதானுலவி கொண்டு செய்யமுடியும் என்றே நினைக்கின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:29, 9 நவம்பர் 2013 (UTC)
தொடர்ப் பாராமரிப்புப் பணிக்கான ஒத்திகைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவை விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. சில வாரங்கள் வரை சோதனைக்காக இயக்கிவிட்டுப் பின்னர் விவாதித்துச் செயல்படுத்தலாம். மேற்படி விவாதங்களைத் திட்டத்தின் பேச்சுப் பக்கத்தில் தொடரலாம். திட்டப்பக்கத்தை உங்கள் கவனப் பட்டியலில் சேர்த்துக் கொள்க --நீச்சல்காரன் (பேச்சு) 06:55, 20 நவம்பர் 2013 (UTC)

தகவல் சட்ட தரவுமீட்பான்[தொகு]

நற்கீரனின் முயற்சியால் இணையத் தமிழ் நூற்பட்டியல் செயற்திட்டத்திற்காக ஒரு தரவுமீட்பான் செய்யப்பட்டுள்ளது. இதில் வேண்டிய பக்கங்களையும் எடுக்க வேண்டிய தகவல் சட்டத்தின்(Infobox) பெயரும் கொடுத்து ஏவிவிட்டால், கொஞ்ச நேரத்தில் அதன் தகவல்கள் எடுக்கப்பட்டு கூகிள் விரிதாள் வடிவில் உங்களுக்குக் கிடைக்கும். இது நூலகம் திட்டம் உட்பட அனைத்து மொழி விக்கிப்பீடியாவிலும் பயன்படுத்தக்கூடியது. இது நேரடியாக விக்கிப்பீடியாவிற்கு பயனளிப்பதைவிட விக்கிப்பீடியாவால் பிற திட்டங்களுக்குப் பலன் அளிக்கிறது. தேவைப்படும் திட்டங்களுக்கு இதைப் பயன்படுத்திக் கொள்க --நீச்சல்காரன் (பேச்சு) 02:50, 9 நவம்பர் 2013 (UTC)

நீச்சல்காரனுக்கு மிக்க நன்றிகள். நீண்ட நாட்கள் வேண்டி இருந்த ஒரு நிரலை மிகக் குறுகிய நாட்களில் சிறப்பாகச் செய்து தந்துள்ளார். இதனால் பல பயன்கள் உள்ளன என்று கருதுகிறேன்.
 • இந்தச் செயலியின் முதல் நோக்கு விக்கியிலும் நூலகத்திலும் உள்ள நூற்கள் பற்றிய தகவல்களை எல்லோரும் பயன்படுத்தக் கூடிய ஒரு வடிவத்தில் வழங்குவதாகும். நூலகத்தின் பிற மென்பொருட்களுக்கு நகர்வதற்கு (migration) செய்ய இது உதவும். மேலும் தமிழ் நூல்கள் பற்றிய தகவல்களை ஒருங்கே சேகரிக்க உதவும். இது தொடர்பாக ஈடுபாடு உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்.
 • இரண்டாவது, விக்கிப்பீடியா:திறந்த தமிழ்த் தரவுகள் போன்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி, அந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள், நூல்கள், மாநாடுகள், கலை நிகழ்வுகள் (எ.கா பகுப்பு:2012 தமிழ் படைப்புகள்) போன்ற தகவல்களையும், மேலும் பல தகவல் தொகுப்புக்களையும் csv அல்லது xml வடிவங்களில் வழங்க முடியும். இது தமிழில் திறந்த தரவுகள் தொடர்பான ஓர் முன்னோடி முயற்சியாக அமையும். இந்த வடிவத்தில் உள்ள தகவல்களை வலைச் செயலிகள், நடமாடும் கருவிச் செயலிகள் போன்றவற்றில் பயன்படுத்த முடியும்.
 • ஒரு தகவல் சட்டத்தில் இருந்து இன்னுமொன்றுக்கு மாற, தகவல் சட்ட தகவல்களைச் சரிபார்க்கவும் இச் செயலி உதவக் கூடும். --Natkeeran (பேச்சு) 15:29, 9 நவம்பர் 2013 (UTC)
நன்றி. நீச்சலாரே! உங்களின் இப்படைப்பால், பெருமளவு பணிநேரம் குறையும். கவிஞன் உள்ளம் (நூல்) போன்ற பல ஆயிரம் கட்டுரைகள் உருவாகப் போகிறது. மேலும் இதில் சில மாற்றங்களை வேண்டுகிறேன். பிறகு அதற்குரிய பக்கத்தில் விரிவாக எழுதுகிறேன். சந்திப்போம். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 06:05, 17 நவம்பர் 2013 (UTC)

வலைவாசல்களை மேம்படுத்தவும் உருவாக்கவும் வேண்டுகோள்[தொகு]

அனைவருக்கும் வணக்கம். தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் 56,973 கட்டுரைகள் உள்ளன. மிகவிரைவில் 60,000 கட்டுரைகள் என்ற இலக்கானது சாத்தியப்படும் தருவாயில் இருக்கிறது. எனவே கட்டுரைகளை வகைப்படுத்தி எளிமையாக காட்சிபடுத்தும் வலைவாசல்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது முதற்பக்க வலைவாசலாக காட்சிபடுத்த ஒரு வலைவாசலே தயாரக இருப்பதால், ஏற்கனவே உள்ள வலைவாசல்களை மேம்படுத்தவும், புதிய வலைவாசல்களை உருவாக்கவும் நண்பர்கள் இணைய வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:02, 9 நவம்பர் 2013 (UTC)

நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்[தொகு]

புதிதாக நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதலுக்கான கோரிக்கை ஒன்று இங்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு இது பற்றி உரையாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 12:22, 13 நவம்பர் 2013 (UTC)

தயவுசெய்து இதனைப் பின் வாங்கவும். பயனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிக்கலும் தீர்வு முறை தற்போது செயற்பட்டுக் கொண்டு இருக்கிறது. நீங்கள் முன்வைத்தக் குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலானவை ஏற்கனவே முன்வைக்கப்பட்டவைதான். புதிய குற்றச்சாட்டுக்களை விக்கிப்பீடியா:பிணக்குத் தீர்வுமுறை (வரைவு) ஏற்ப முன்னெடுப்பது பொருத்தம். தற்போதைய உங்கள் நகர்வு, ஏற்கனவே உள்ள சூழலை மேலும் இறுக்கமாக்கும். --Natkeeran (பேச்சு) 20:17, 13 நவம்பர் 2013 (UTC)
உங்கள் கோரிக்கையை மறுப்பதற்கு வருந்துகிறேன் நக்கீரன். த.வி.யை விட்டு விலகுமாறு நீங்கள் கேட்டிருந்தால்கூட அதை ஏற்றிருப்பேன், ஆனால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை உடன் அமுல்படுத்த தேவையில்லை. ஏற்கெனவே உள்ள கோரிக்கையை முடித்துவிட்டு இதைப்பற்றி கருத்திற் கொள்ளலாம் அல்லது, ஏற்கெனவே உள்ள கோரிக்கையை சரியாக நிறைவுறும்பட்சத்தில், இதனை நான் பின் வாங்கிவிடுவேன். இதுவரை நடைபெற்ற விடயங்கள் மன அழுத்தத்தைத்தான் பலபேருக்கு வழங்கியுள்ளது. நான் பல முறை நல்லிணக்கம் பற்றி எடுத்துரைத்தும் தேனியார் உட்பட யாரும் அதைப் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. "செய் அல்லது செத்து மடி" என்ற முடிவைத்தவிர வேறு வழியில் எனக்கு நாட்டமில்லை. --Anton·٠•●♥Talk♥●•٠· 00:54, 14 நவம்பர் 2013 (UTC)

பெயரிடல் மரபுக் கொள்கை[தொகு]

எதற்கு எடுத்தாலும் ஆங்கில விக்கிப்பீடியா நிர்வாகக் கொள்கைகளைச் சுட்டிக்காட்டி இங்கு விவாதம் புரியும் நாம் அந்த விக்கிப்பீடியாவின் ஒரு கொள்கையின் சாரத்தைப் புறக்கணித்துவிட்டோம்/கவனிக்கவில்லை என நினைக்கிறேன். அனைவருக்கும் புரியும் படியும், சுருக்கமாகவும் தெளிவாகவும், பரவலாக அறியப்பட்ட சொல்லாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. இதுபோக இடத்திற்கு ஏற்றது போல சமூகம் விவாதித்து முடிவு எடுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் குழப்பம் வாய்ந்த இடங்களில் எழுதியவரின் தலைப்பிற்கு அல்லது விவாதப் பொருள் அமைவிடம் சார்ந்த கருத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேற்கொண்ட அடிப்படை விதியைத் தமிழ் விக்கி பெயரிடல் மரபுக் கொள்கையிலும் சேர்க்கப் பரிந்துரைக்கிறேன். மாற்றுக் கருத்திருந்தால் ஓட்டுமுறையையும் பயன்படுத்தலாம்.

நன்மைகள்[தொகு]

 1. விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கையைக் கடைபிடித்தல்.
 2. இதன் மூலம் தேவையற்ற மொழிசார்ந்த சச்சரவுகள் தீரும்.
 3. அதை நோக்கி ஆக்கப்பூர்வமாகப் பேச்சுப் பக்கங்களில் விவாதிக்கலாம்.
 4. தலைப்புக்கள் சார்ந்து பயனர்களின் சுய ஆய்வுகள் தவிர்க்கப்படும்.
 5. புதிதாகத் தமிழ் விக்கிப்பீடியாவிற்குப் படிக்க வருபவருக்குப் புரிதல் சிக்கல் குறையும்.
 6. இறுதியாக, தமிழ் மக்கள் அனைவருக்கும் பயன்படும்.

கேள்விகளும் பரிந்துரைகளும்[தொகு]

 1. பரவலாக அறியப்பட்ட சொல் என்றால் பிறமொழி கலந்துவிடுமே? யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகவே சரியான தமிழ்ச்சொல் இருந்தால் அவற்றிற்கு முன்னுரிமை, பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வந்த சொல்லுக்கு அடுத்த முன்னுரிமை, அதுவும் இல்லாதபோது மொழிபெயர்ப்புக்கு அடுத்தமுன்னுரிமை. அடைப்புக்குறிக்குள் பிற தலைப்புகளைக் கொடுப்பதில் சிக்கல் இல்லை.
 2. தற்போதைய தன்னாட்சித் தமிழிலே இருக்கட்டும் பரவலாக அறியப்பட்ட சொல்லுக்கு வழிமாற்றி போதாதா? வழிமாற்றிகள் அப்பக்கத்திற்கு மட்டும்தான் வழிகாட்டும். உருபுகளோ, வினைகளோ சேர்த்தால் யாருக்கும் வழிகாட்டாது. அதே நேரத்தில் முதன்மைத் தலைப்பாகக் கொண்டு கட்டுரையிருந்தால் அதன் வாக்கியங்களில் அத்தலைப்பு நன்றாகப் பயன்படுத்தப்பட்டு தேடுதளங்களில் உதவும். உதாரணம்:ரயில் என்றால் மட்டுமே தொடருந்து பக்கத்திற்கு வழி கிடைக்கும், ரயில்கள் என்றோ ரயில்களை என்றோ தேடினால் கிடைக்காது. ஆகவே இந்தியத் தலைப்புகளுக்கு ரயில் என்றும் பிற நாடுகளுக்கு அதன் உத்தியோகப்பூர்வ பெயர்களிலும் இடலாம்.(Strong national ties to a topic)
 3. சரியான மொழி இலக்கண நடையைப் பயன்படுத்த வேண்டாமா? தாராளமாக அடைப்புக்குறிக்குள் தனித்தமிழ் வழக்கு: இந்திய வழக்கு, என்று சொல்லலாமே. விக்கிப்பீடியாவொரு மொழிநடைக் கையேடு அல்ல.
 4. அனைவருக்கும் தெரியுமே, இதைக் கொள்கையில் சேர்ப்பதால் என்ன லாபம்? இதுவொரு அடித்தளமே. எங்கெல்லாம் தலைப்புகள் பற்றிய விவாதம் நடக்கிறதோ அங்கெல்லாம் ஒழுங்கு படுத்த இக்கொள்கை வடிவம் பெறவேண்டும். இதன் பின்னர் இதன் அடிப்படையில் மொழிநடை வழிகாட்டல்கள் திருத்திக் கொள்ளலாம். பலரும் அறிந்திருந்தாலும் இக்கொள்கைக்குப் பொருந்தாத விவாதங்களும் நடைபெறுகின்றன.

இதுவரை எழுத்தப்பட்ட கட்டுரைகளை மாற்றுவது மனத்தடங்கள் வரலாம் அதனால் இனிமேல் வரும் கட்டுரையிலாவது இம்முறை அமல்படுத்த வேண்டும். தனிப்பட முறையில் விக்கி நடையைப் பிற இடங்களில் பயன்படுத்த மிகுந்த சிரமமாகவுள்ளது.--நீச்சல்காரன் (பேச்சு) 04:56, 17 நவம்பர் 2013 (UTC)

தகவலுழவன்[தொகு]

  1. இதுகுறித்து முதல் முயற்சியை, நான் சிலவருடங்களுக்கு முன், இராசத்தான் கட்டுரையின் உரையாடற்பகுதியில் தொடங்கினேன். பிறகு இப்பகுப்பில் உள்ள உரையாடல்களைக் கண்டேன். பின்னர், இறுதியாக ஃபபேசியே கட்டுரையின் உரையாடற்பகுதியில் ஈடுபட்டேன். கலந்துரையாடல் சர்ச்சையாக பல இடங்களில் மாறி, அனைவரது காலத்தையும் உரையாடற்பகுதிக்கே செலவிடும் படி செய்தது எனக்கு வருத்தமே.
  2. ஏனெனில், புதிய சொற்களை அல்லது மேம்பட்ட சொற்களை கட்டுரையின் உள்ளே விவரிக்கும் போதே அது நிலைபெறும். தலைப்பிடுதலால் அது நிலை பெறாது என்பதே உண்மை.
  3. இன்றைய சூழலில், இவ்விக்கிசமூகம், வழிமாற்றாகக் கூட ஒரு சொல்லை ஏற்கவில்லை. கட்டுரையின் உள்ளே மொழியை கடந்த நுட்பங்கள் தான், கட்டுரையை மேம்படுத்துகின்றன. அது போல வழிமாற்று இருந்தால், பல சொற்களின் வழியே, நாம் எளிதில் பொதுமக்களை அடையலாம் என்பதே உண்மை.
  4. அந்நிலையை உருவாக்க முடியாத நிலையில், இனி கட்டுரையாக்கத்திலும், தொழிற்நுட்ப முயற்சியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். 4வரி உரையாடினால், 4வரிகட்டுரையாக்கத்தில் ஈடுபட வேண்டும் என்று எனக்கு நானே எல்லையை வகுத்துக் கொண்டு, எனது குறுகிய நேரத்தினை கட்டுரையாக்கத்திற்காக செலவழிக்கிறேன்.
  5. நம் தமிழ் விக்கிப்பீடியாவை எந்தெந்த அலகுகளால் அளக்கிறார்கள் என்று அனைவரும் உணரவேண்டும். அதற்காக உழைப்பவர் பேணப்பட வேண்டும். அதற்கான தொழிற்நுட்ப கருவிகள், விவரங்கள் என்னென்ன? இதுவரை அதிகம் உழைத்தவர் யார்? என்ற விவரங்கள் விளக்கப்பட்டால், பல அறிஞர்கள் இங்கு குவிந்து தமது படைப்புகளை எழுதுவர். இந்த தேவைகள் இருந்தால், நமது நிலை இரட்டிப்பாக ஓரிரு வருடங்கள் போதும். வணக்கம்,--≈ உழவன் ( கூறுக ) 05:57, 17 நவம்பர் 2013 (UTC)

நற்கீரன்[தொகு]

 • தலைப்பு தமிழில் இருக்க வேண்டும்.
 • தலைப்பு தமிழ் மொழிநடைக்கு/இலக்கணத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
 • பிற மொழிப் பெயர்ச் சொற்கள் ஒலிப்பெயர்ப்பு/எழுத்துப்பெயர்ப்புச் செய்யப்படலாம்.
 • கலைச்சொற்கள் தெளிவாகத் தெரியாத இடத்தில் வழக்கத்தில் உள்ள பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம்.

--Natkeeran (பேச்சு) 14:27, 19 நவம்பர் 2013 (UTC)

உடன்படுகிறேன். மறுப்பில்லாத போது விக்கிக் கொள்கையை மாற்றிவிடுகிறேன். "தமிழ் மொழிநடைக்கு/இலக்கணத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும்" என்பது சரியே ஆனால் அச்சொல் வழக்கில் இல்லாவிட்டால் வழக்கத்திலுள்ள/பரவலாக அறியப்பட்ட சொல்லைப் பயன்படுத்தவேண்டுகிறேன். விக்கிப்பீடியா ஒரு மொழிநடைக் கையேடு அல்ல என்பதைப் பின்பற்றவேண்டும்--நீச்சல்காரன் (பேச்சு) 04:55, 20 நவம்பர் 2013 (UTC)

இந்தக் கொள்கை உரையாடலை இங்கு தொடர வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 16:53, 20 நவம்பர் 2013 (UTC)--இரவி (பேச்சு) 16:53, 20 நவம்பர் 2013 (UTC)

Common.css மற்றும் Common.js இற்றை படுத்த அனுமதியும் ஆலோசனையும் வேண்டும்[தொகு]

Common.css மற்றும் Common.js ஆகிவற்றை ஆங்கில விக்கியில் உள்ளது போல இற்றை படுத்தலாமா? இதனை செய்யும் போது எவற்றை கவணிக்க வேண்டும்? Common.cssஇல் நான் புறிந்து கொண்ட வரை எழுத்துரு, விக்கி சின்னம் மற்றும் messagebox.site-notice ஆகிய மூன்றும் சேர்க்கப்படுள்ளது.. இம்மாற்றங்களை சேர்தது மாற்றி வடிவமைத்துள்ள css இங்கு உள்ளது: பயனர்:Jayarathina/common.css

Common.jsஇல் என்ன மாற்றப்படுள்ளது என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை. தெரிந்தவர்கள் உதவவும். ஆங்கில விக்கியின் js மாற்றாமல் இங்கு உள்ளது: பயனர்:Jayarathina/vector.js

இதனை செய்வதால் ஆங்கில விக்கியில் இருந்து வார்ப்புருக்களை மொழி பெயர்க்கும் போது நமக்கு ஏற்படு சிக்கல் தீரும். தற்போது ஆங்கில விக்கியிலிருந்து ஒரு வார்ப்புருவினை வெட்டி ஒட்டினால் நமக்கு அது இவ்வாறு தெரிகின்றது, இம்மாற்றங்களை செய்தால் இவ்வாறு தெரியும். இதனால் இப்போது இருக்கும் எந்த வார்ப்புருவுக்கும் சிகல் ஏதும் வராது என எண்ணுகின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:17, 17 நவம்பர் 2013 (UTC)

👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 10:21, 17 நவம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 04:56, 18 நவம்பர் 2013 (UTC)
நான் இதை இற்றைப்படுத்துகின்றேன். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு அதை சரி செய்ய இயலவில்லை எனில் மீளமைத்து விடலாம். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:19, 18 நவம்பர் 2013 (UTC)
Yes check.svgY ஆயிற்று ஏதேனும் சிக்கல் இருப்பின் என்னை தொடர்பு கொள்ளவும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:26, 18 நவம்பர் 2013 (UTC)
ஜெயரத்தினா, தொகுப்புப் பெட்டியின் அடியில் வரும் சுருக்கு வழிகள்/வார்ப்புருக்களைக் காண முடியவில்லையே ? உங்களது மாற்றத்தால் நிகழ்ந்ததா ?--மணியன் (பேச்சு) 23:43, 18 நவம்பர் 2013 (UTC)
மணியன், இது எதனால் என தெரியவில்லை. நான் செய்த மாற்றத்தால் இது நிகழ்ந்திருக்கும் என தோன்ற வில்லை. addblock கொண்டு செய்த மாற்றங்களை முடக்கி, முன்னிருந்த கோப்புகளை இயக்கினாலும் அது தெரியவில்லை. இருந்தால் இது javascript இல் தான் இருக்க வேண்டும், ஆனால் முன்னிருந்த javascript-ஐ ஒவ்வொரு வரியாக படித்தும் அதில் இதுபற்றி எக்குறிப்பும் இல்லை. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:28, 19 நவம்பர் 2013 (UTC)
மாதரசன் மாற்றங்களை செய்வதற்கு முன்பேயே அடிக்கடி இது மாதிரி வந்தது. வலபக்க மேல்மூலையில் வரும், find and replace கருவியில் ஏதோ பணி நடக்கிறது என்று எண்ணுகிறேன். அதன் கட்டுப்பாடு எங்குள்ளது. ஏனெனில், முதலில் அந்த வசதிதான் வருவதும் போவதுமாக இருந்தது.--≈ உழவன் ( கூறுக ) 09:54, 19 நவம்பர் 2013 (UTC)
மேலும் சிக்கல்: பயனரின் கவனிப்புப் பட்டியலில் உள்ள கட்டுரைகள் அண்மைய மாற்றங்களில் தடித்த எழுத்துகளில் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 09:59, 19 நவம்பர் 2013 (UTC)
எனக்கும்தான். --- மயூரநாதன் (பேச்சு) 10:23, 19 நவம்பர் 2013 (UTC)
Kanags, மயூரநாதன், சரி செய்து விட்டேன். cache நீக்கி விட்டு முயற்சிக்கவும். (ஆங்கில விக்கியில் இது gadget ஆக நிருவப்பட்டுள்ளதால் இது கவணத்தில் வரவில்லை) தயவு செய்து வேறு இயல்புகள் ஏதேனும் காணாமல் போயிருந்தால் தெரிவிக்கவும், சரி செய்ய முயல்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:39, 19 நவம்பர் 2013 (UTC)
விளக்கத்திற்கு நன்றி தகவலுழவன், இப்போதுதான் சிறிது நிம்மதியாக உள்ளது. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:48, 19 நவம்பர் 2013 (UTC)
இதுவரை சரி வரவில்லை. அத்துடன் தொகுப்புப்பெட்டிக்கு என்ன நடந்தது என்பதையும் கண்டறிந்து சொல்லுங்கள்.--Kanags \உரையாடுக 20:48, 20 நவம்பர் 2013 (UTC)
கடந்த இரண்டு நாட்களாக அண்மைய மாற்றங்களைத் திறக்கும் போது Warning:Unresponsive Script என்ற பெட்டி வருகிறது.--Kanags \உரையாடுக 23:54, 20 நவம்பர் 2013 (UTC)
சிரமத்துக்கு தயவு செய்து மன்னிக்கவும். நீங்கள் இது பற்றி தானே கூறுகின்றீர்கள்? அல்லது நான் ஏதும் தவறாக புறிந்துள்ளேனா? நீங்கள் எந்த உலாவி மற்றும் இயங்கு தளம் பயன் படுத்துகிறீர்கள்? புகுபதிகை செய்யாமல் அண்மைய மாற்றங்களைத் திறக்கும் போதும் Warning:Unresponsive Script வருகின்றதா? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 01:45, 21 நவம்பர் 2013 (UTC)

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── ஆம், அண்மைய மாற்றங்களில் பயனர் விருப்பங்கள் தடித்த எழுத்தில் இன்னும் வரவில்லை. Warning:Unresponsive Script எனது கணிணியில் தான் கோளாறு என நினைக்கிறேன். அண்மைக்காலமாக கணினி பொதுவாக மிக மிக மெதுவாகவே ஓடுகிறது:).--Kanags \உரையாடுக 04:33, 21 நவம்பர் 2013 (UTC)

அண்மைய மாற்றங்களில் பயனர் விருப்பங்கள் என்றால் என்ன? உங்கள் கடைசி வருகைக்குப் பின்னர் மாற்றங்கள் செய்யப்பட்ட பக்கங்கள் தானே? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:44, 21 நவம்பர் 2013 (UTC)
இப்போது புரிந்தது. மாற்றியிருகின்றேன். நான் முதலில் தவறாக புரிந்திருந்தேன், தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. இப்போது சரியாக உள்ளதா என பார்க்கவும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:02, 21 நவம்பர் 2013 (UTC)
இப்போது தெரிகிறது. நன்றி.--Kanags \உரையாடுக 06:10, 21 நவம்பர் 2013 (UTC)
இங்குக் குறிப்பிடப்படும் தொகுப்புப் பெட்டியின் அடியில் வரும் சுருக்கு வழிகள் ஜெயரத்தினா செய்த மாற்றத்தினால் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் சரியான காரணத்தை ஆராயமுடியவில்லை. இருந்தாலும் அணுக்கமுள்ளவர்கள் MediaWiki:Gadget-charinsert.js என்ற ஆங்கில விக்கியில் உள்ள கோப்பை நேரடியாகத் தமிழ் மீடியாவிக்கி வெளியில் மாற்றினாலோ, அல்லது பயனரில் Common.js ல் போட்டுக் கொண்டாலோ இப்பிரச்சனையைத் தற்போதைக்குத் தீர்த்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.--நீச்சல்காரன் (பேச்சு)
தகவலுழவன் மீடியாவிக்கி:Edittools இல் செய்த ஒரு சிறிய திருத்தத்தினால் இப்போது இது சரியாகி விட்டது. இது ஏன் இவ்வாறு பிழைத்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:45, 25 நவம்பர் 2013 (UTC)

Call for comments on draft trademark policy[தொகு]

மூலத்தை(த்) தொகு *எழுத்துப்பிழை திருத்தம்*[தொகு]

அண்மையில் இடைமுகத்தில் View Source என்பதன் தமிழாக்கமாக மூலத்தை தொகு என்று வருகிறது. ஒவ்வொரு பக்கத்திலும் தெரியும் இச்சொற்றொடரில் பிழை இருப்பது உறுத்துகிறது. மூலத்தைத் தொகு என்று தகர ஒற்று மிகுந்து வருதலே சரியானது. இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐயை அடுத்து வரும் கசதப-வில் கண்ணை மூடிக் கொண்டு ஒற்றினைச் சேர்த்து விடலாம்! திருத்த முடிந்தவர்கள் திருத்திவிடவும். எனக்கு எங்கே செல்வது என்றும் சரியான அணுக்கம் இருக்கிறதா எனவும் தெரியவில்லை (translatewiki?) --இரா. செல்வராசு (பேச்சு) 02:50, 21 நவம்பர் 2013 (UTC)

மூன்று இடங்களில் ([1] [2] [3]) திருத்தியுள்ளேன். ஆனாலும், இது இற்றைபடுத்தப்பட பல வாரங்கள் ஆகும். :( நீங்களும் translatewikiஇல் பயனர் கணக்கொன்றை தொடங்கி தொகுக்கலாம். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:04, 21 நவம்பர் 2013 (UTC)

அக்டோபர் 2013 புள்ளிவிவரங்கள்[தொகு]

அக்டோபர் 2013 புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. பல மைல்கற்களை ஒட்டு மொத்தமாகத் தாண்டியுள்ளோம் !

 • மொத்த பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 1000ஐத் தாண்டியுள்ளது. (இதற்கு முன் இதை எட்டிய ஒரே இந்திய மொழி மலையாளம். இப்போது நம்மை விட 47 பங்களிப்பாளர்கள் கூடுதலாக கொண்டுள்ளனர்)
 • ஒவ்வொரு மாதமும் 5 தொகுப்புகள் செய்யும் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கை - 118. முதல் முறையாக 100 என்ற பங்களிப்பாளர்கள் மைல்கல்லைத் தாண்டியிருக்கிறோம்.
 • ஒரே மாதத்தில் புதிதாக 27 விக்கிப்பீடியர்களைச் சேர்த்திருக்கிறோம். சூன் 2010 கட்டுரைப் போட்டியின் போது 29 பேர் சேர்ந்தார்கள். அதற்கு அடுத்து இது பத்தாண்டுகளில் ஆகக் கூடிய சேர்க்கை.
 • 100+ தொகுப்புகள் செய்த பங்களிப்பாளர்கள் 25 பேர். இது பத்தாண்டுகளில் ஆகக் கூடியது.
 • நாளும் 32 புதிய கட்டுரைகள் சேர்த்திருக்கிறோம். சனவரி 2012க்குப் பிறகு மீண்டும் இந்நிலையை எட்டி இருக்கிறோம்.

👍 விருப்பம்--அஸ்வின் (பேச்சு) 11:49, 25 நவம்பர் 2013 (UTC) 👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 00:24, 27 நவம்பர் 2013 (UTC)

தமிழ் விக்கியில் வேண்டியப் பக்கங்களும் படங்களும்[தொகு]

இங்கு பார்க்க. இப்பக்கம் தினமும் இற்றைப்படுத்தபடுகிறது. தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் 6250+ கட்டுரைகள் தேவைப்படுகின்றன. இங்கு உள்ள இணைப்புகள் ஒவ்வொன்றிற்கும் குறைந்தபட்சம் 10 இணைப்புகள் உள்ளன. அதாவது குறைந்தது 1 இலட்சம் சிவப்பு இணைப்புகள் நமது விக்கியில் உள்ளன. இவற்றை உருவாக்குதல் அல்லது சரிபடுத்துதல் தேவை என்று கருதுகின்றேன். இதுபற்றியக் கருத்துக்களை ஆலோசனைகளை வழங்குமாறு சக விக்கிப்பீடியர்களைக் கேட்டுக்கொள்கிறேன். --அஸ்வின் (பேச்சு) 11:49, 25 நவம்பர் 2013 (UTC)

 1. விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள்
 2. விக்கிப்பீடியா:கோரப்படும் படங்கள்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:03, 25 நவம்பர் 2013 (UTC)
Aswn சுட்டிய இணைப்பு பயனுள்ளதே இருப்பினும் விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள் கவனிக்க வேண்டும்
 • கட்டுரைகளில் நீண்டகாலம் உள்ள சிவப்பு இணைப்புகளை துப்புரவு செய்ய வேண்டும் எ கா - பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் --ஸ்ரீதர் (பேச்சு) 13:30, 25 நவம்பர் 2013 (UTC)
தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். ஆனால் இக்கட்டுரைகள் கோரப்படும் கட்டுரைகள் அன்று தேவைப்படுவை. பயனர்கள் இக்கட்டுரை வேண்டும் என்று சிவப்பு இணைப்பாயினும் உருவாக்கினால் அவை தேவைப்படுபவை அல்லவா? மேலும் விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள் பக்கத்தில் ஏற்கனவே பல கட்டுரைகள் கோரப்பட்டு நிறைவேற்றப்படாமலுள்ளன. --அஸ்வின் (பேச்சு) 09:42, 26 நவம்பர் 2013 (UTC)
wmflabs, நல்ல சுட்டிதான் ஆனால் வார்ப்புருக்கள் நீங்கலாகப் பார்த்தால் இப்பட்டியலில் இருப்பவை சொற்பமாகத் தெரிகிறது. உண்மையான தேவைகளை வெளிப்படுத்தவில்லை என நினைக்கிறேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 13:28, 26 நவம்பர் 2013 (UTC)
ஆனால் இவ்வாறாக பார்க்கவும்! அவ்வார்ப்புரு 10 பக்கங்களுக்கு(பல 50) மேல் இணைக்கப்பட்டால் அதில் சிவப்பிணைப்புகள் இருந்தால் அவை தேவை தானே! --அஸ்வின் (பேச்சு) 14:52, 26 நவம்பர் 2013 (UTC)

பயனரின் கருத்து[தொகு]

ஐயா நான் விக்கிபீடியாவில் எனது கட்டுரையை எழுத ஆசைப்படுகிறேன் எனவே தயவு செய்து உதவி செய்யுங்கள். தமிழ் முதுகலைத்தமிழ் படித்து வருகின்றேன் கல்வி தொடர்பாக ஒரு ஆய்வு கட்டுரை எழுத விரும்புகிறேன்.... −முன்நிற்கும் கருத்து Ilanthamizhan.s (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நீங்கள் உங்களது பேச்சுப் பக்கத்தில் உள்ள செய்தியில் பல வழிகாட்டல்களைக் காணலாம். ஆய்வுக் கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் எழுதமுடியாது, ஆனால் உங்கள் ஆய்வுக் கட்டுரையை பொது உரிமத்தில் வழங்கி விக்கிமூலம் என்ற சகோதரத் தளத்தில் வெளியிடலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 02:07, 27 நவம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி[தொகு]

ஒருவர் கட்டுரைப் போட்டியில் கட்டுரையை விரிவாக்கும் பொழுது , இடையில் வேறு ஒருவர் கட்டுரையை வரிவாக்கி இலக்கை அடைந்தால் அக்கட்டுரை யார் கணக்கில் சேர்க்கப்படும்? நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:12, 27 நவம்பர் 2013 (UTC)

விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி#இடை இற்றை சிக்கல் பக்கத்துக்கு நகர்த்தப்படுகிறது. மேலதிக உரையாடல் அங்கு தொடரும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:59, 27 நவம்பர் 2013 (UTC)