பயனர் பேச்சு:Ilanthamizhan.s

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Ilanthamizhan.s, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 17:59, 26 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஐயா நான் விக்கிபீடியாவில் எனது கட்டுரையை எழுத ஆசைப்படுகிறேன் எனவே தயவு செய்து உதவி செய்யுங்கள். தமிழ் முதுகலைத்தமிழ் படித்து வருகின்றேன் கல்வி தொடர்பாக ஒரு ஆய்வு கட்டுரை எழுத விரும்புகிறேன்.... −முன்நிற்கும் கருத்து Ilanthamizhan.s (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நீங்கள் உங்களது பேச்சுப் பக்கத்தில் உள்ள செய்தியில் பல வழிகாட்டல்களைக் காணலாம். ஆய்வுக் கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் எழுதமுடியாது, ஆனால் உங்கள் ஆய்வுக் கட்டுரையை பொது உரிமத்தில் வழங்கி விக்கிமூலம் என்ற சகோதரத் தளத்தில் வெளியிடலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 02:07, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

மாட்டுஓணி[தொகு]

மாட்டு ஓணி என்ற கிராமம் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

"மாட்டுஓணி- எனப்பெயர் வரக்காரணம் "


மாடு +ஓணி= மாட்டுஓணி


"மாடு " என்றால் செல்வம், பசு எனப்பொருள் .

பார்க்க: 'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு

 மாடல்ல மற்றயவை”-திருக்குறள்” 

"ஓணி" என்றால் இருபுறமும் மரங்கள் சூழ்ந்த பாதை எனப்பொருள். எனவே


மாட்டு ஓணி என்றால் "மாடுகள் செல்லும் பாதை" அல்லது "செல்வபாதை" என்பது தெளிவாகிறது.


"மக்கள்நிலை"


இவ்வூரில் மக்கள் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு தான் குடியேறினர். அதற்கு முன்பு இவ்வூர் பசுமைச்சமவெளியாக இருந்தது. இவ்வூரில் வாழும் மக்கள் சுமார் 500 பேர்.



"மொழிஅறிவு"


இங்கு வாழும் மக்கள் அனைவரும் தமிழர்களே ஆவார்கள். ஆனாலும் கன்னடம்,தெலுங்கு, உருது ஆகிய மொழிகளையும் அறிந்து வைத்துள்ளனர்


"மாட்டுஓணி வரலாறு"



மாட்டு ஓணி என்ற ஊரில் ஒரு காலத்தில் இயற்கை எழில் கொஞ்சியது, எங்கு பார்த்தாலும் பசுமை எங்குபார்த்தாலும் புல்வெளி ஆண்டு முழுவதும் காட்டாறும், நீரோடைகளும் ஊர் முழுவதும் ஓடியது . இதனால் அருகில் உள்ள பறவைக்காடு செழிப்பாக வளர்ந்தது. மாட்டுஓணி ஊரைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் தங்கள் காலநடைகளை(மாடுகள், ஆடுகள்,எருமைகள்) இவ்வூரின் வழியாக மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வார்கள் . இவ்வாறு செல்லும் கால்நடைகளில் எண்ணிக்கை ஏராளம்.


மக்களின் தொழில்


இவ்வூரில் வாழும் மக்களின் முக்கியத் தொழில் கால்நடை பராமரிப்பு மற்றும் உழவுத்தொழில் ஆகும்.




" கால்நடைகளும்-காடும்"



மாதம் மும்மாரி மழை பெய்ததால் பறவைக்காடு மிகவும் செழிப்பாக வளர்ந்து கால்நடைகளுக்கு புற்களையும்,பசுந்தழைகளையும் வழங்கியது. இதனை உண்ட கால்நடைகள் நன்றி மறவாது தனது கழிவுகளை காட்டிற்குள் இட்டது . இக்கழிவுகள் மழை நீரில் கரைந்து காடெங்கும் பரவி உரமாக மாறியது. இயற்கை உரத்தினை ஏற்றுக்கொண்டு காடு மீண்டும் வளர்ந்து பசுமையான புல்வெளிகளை கால்நடைகளுக்கு பரிசாக வழங்கியது. இந்தச் சுழற்சி ஆண்டு முழுவதும் நடைப்பெற்றதால் கால்நடைகளை பராமரிப்பவர்கள் கவலையின்றி வாழ்ந்தார்கள்.

புதிய கட்டுரை எழுத[தொகு]

மாட்டுஓணி எனும் தலைப்பில் நீங்கள் கட்டுரை எழுத விழைகிறீர்கள் என எண்ணுகிறேன். புதிய கட்டுரை எழுதுவது எப்படி என இங்கே சொடுக்கித் தெரிந்து கொள்ளுங்கள். தாங்கள் ஏற்கனவே எழுதிய கட்டுரை ஆலமரத்தடியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 15:09, 27 ஏப்ரல் 2014 (UTC)

June 2019[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:18, 11 சூன் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ilanthamizhan.s&oldid=2815711" இலிருந்து மீள்விக்கப்பட்டது