விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர் பங்களிப்புகள், விரிவான கட்டுரைகள், துறைசார் கட்டுரைகள் ஆகியவற்றைக் கூட்டும் நோக்கத்தில் ஒரு சிறிய அளவிலான கட்டுரைப் போட்டியை நடத்தலாமா என்று எண்ணுகிறேன். விதிமுறைகள் பின்வருமாறு இருக்கலாம்:

  • போட்டி 12 மாதங்கள் நடக்கும். ஒவ்வொரு மாதமும் ஒரு வெற்றியாளர். ஏற்கனவே பங்களித்து வரும் அனைத்து விக்கிப்பீடியர்களும் பங்கேற்கலாம்.
  • கட்டுரைகள் குறைந்தது 10 kb அளவு இருக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் கட்டுரைகள் எழுதுபவர் வெற்றியாளர்.
  • கட்டுரைகள் தரவுகளை மட்டும் மாற்றி இடும் வார்ப்புருக் கட்டுரைகளாக இருக்கக்கூடாது.
  • ஒரே துறையைச் சேர்ந்த / ஒன்றுக்கு ஒன்று இணைப்பு தர வல்ல கட்டுரைகளாக இருந்தால் கூடுதல் புள்ளிகள்.
  • பரிசுத் தொகை இந்திய ரூபாய். 1000/- அல்லது அதற்கு ஈடான புத்தகங்கள். மாதம் ஒரு புரவலரை பரிசு அளிக்க வைக்கலாம். அல்லது, விக்கிமீடியாவில் நல்கை பெறலாம்.

தெளிவான விதிகள் என்பதால் நடுவர் குழுவுக்கான தேவை இருக்காது. போட்டியை நடத்துவதற்குப் பணிப்பளுவும் இருக்காது. எனவே, இலகுவாக ஒவ்வொரு மாதமும் போட்டியை நடத்தலாம் என்று எதிர்பார்க்கிறேன். இது குறித்து அனைவரின் கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 12:54, 2 பெப்ரவரி 2013 (UTC)

10 கி.பை. என்பது புதியவருக்கு அதிகம். 5 கி.பைக்கு மேல் என்று குறிப்பிடலாம். அதிக கட்டுரைகள் என்பதை விட்டுவிடலாம். யாரும் ஒரு மாதத்திற்கு 20 கட்டுரைகளுக்கு மேல் எழுத மாட்டார்கள். மாற்றாக. தர அளவீட்டை அதிகரிக்கலாம் (இணைப்பு தரவல்ல கட்டுரைகள் என்பதுபோல் படம், ஒலி, ஆதாரங்கள் ஆகியனவற்றிற்கு கூடுதல் புள்ளிகள் வழங்கலாம்). புதியவர்களுக்கு (குறைவான) இலக்கணப் பிழைகள் கருத்தில் கொள்ளப் படக் கூடாது. அப்படி செய்தால் தான் தயக்கமின்றி முன்வருவர். மொழிநடைக்கும் கூடுதல் புள்ளிகள் வழங்கலாம். அனைத்து மாதங்களிலும் பங்கெடுத்துக் கட்டுரைகள் எழுதும் புதியவர்க்கு சிறப்புப் பரிசு தரலாம். பரிசு பெற்றவரை முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்தலாம் - தமிழ்க்குரிசில்
கருத்துக்கு நன்றி, தமிழ்க்குரிசில். இதற்கு முன் நடத்திய போட்டிகள் புதியவர்களுக்கானது. இதில் ஏற்கனவே உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம் என்பதால் 10 kb அதிகமாக இருக்காது என்று நினைத்தேன். 20 கட்டுரைகளுக்கு மேல் எல்லாம் வராது என்று சொல்ல இயலாது. தொடர் பங்களிப்புகளால் திக்கு முக்காட வைக்கக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை இயன்றளவு நிறைய எழுத வைக்கலாம் என்று நினைத்தேன். முந்தைய கட்டுரைப்போட்டியில் ஒருவர் ஓரிரு கட்டுரைகள் மட்டுமே எழுதினர். இதில் நிறைய கட்டுரைகளைப் பெற வழியுண்டா என்ற பேராசை தான் நிறைய கட்டுரைகளை எழுதுபவருக்குப் பரிசு என்று சிந்திக்க வைத்தது. படங்கள், ஆதாரங்கள் போன்றவற்றுக்குக் கூடுதல் புள்ளிகள் தரலாம். நல்ல பரிந்துரை. மொழி நடையைக் கணக்கில் கொள்வது என்றால் நடுவர் குழு வேண்டும். பிறகு வேலைப்பளு கூடும். அதனால், மொழி நடையைக் கவனிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். எப்படியும் பலரும் தரமாக எழுதக்கூடியவர்களே. பொதுவாக, விக்கி நடைக்குப் புறம்பாக கட்டுரைகளை வேண்டுமானால் போட்டியில் இருந்து விலக்கி வைக்கலாம். அப்படி எழுதக்கூடிய புதியவர்களுக்கு வழி காட்டலாம். தொடர் போட்டியிடும் புதியவருக்குப் பரிசு தரலாம் என்பது நல்ல பரிந்துரை. கட்டாயம் பரிசு வென்றோரைப் பற்றி முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்தலாம். அனைவரின் கருத்துகளையும் உள்வாங்கி உரிய முறையில் விதிகளை வகுப்போம். நன்றி--இரவி (பேச்சு) 11:10, 3 பெப்ரவரி 2013 (UTC)

//திக்கு முக்காட வைப்பவர்கள் இருக்கிறார்கள்! அத்தகையோர் கிடைத்தால் மகிழ்ச்சிதான்! ஆம், இலக்கணப் பிழையைக் கருத்தில் கொள்ள வேண்டாம் எனக் கூறியதற்குக் கார்ரணம் நாம் பின்னர் திருத்திக் கொள்ளமாம் என்பதே. இருப்பினும் மொழிநடைக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கினால் நலம் என்றே கூற வந்தேன். பிறர் கருத்துக்குக் காத்திருப்போம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:41, 3 பெப்ரவரி 2013 (UTC)

மணியன்[தொகு]

நல்லத் திட்டம். எனது கருத்துகள்:

  1. பரிசுத்தொகை வேண்டாம் என்பது எனது கருத்து... பாராட்டுதலே (முதலில் சிலராவது நமது பங்களிப்புகளை கவனிக்கிறார்களே என்பதே) இங்கு பங்களிக்கும் பல தன்னார்வலர்களுக்கு பெரும் தூண்டுதலாக இருக்கும் ;) இந்த மாதப் பதிவர் என்று முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலே போதுமானது.
  2. 10 kb என்பது சரியான அளவே. இன்று பலரும் (நான் உட்பட) பல குறுங்கட்டுரைகளை துவக்குகின்றனர். குறைந்தளவு தகவலாவது இடம்பெற வேண்டும்.
  3. தானியங்கித் தமிழாக்கம், காப்புரிமை உள்ள பத்திகளின் வெட்டி ஒட்டல் போன்றவை போட்டியிலிருந்து விலக்கப்பட வேண்டும்.
  4. குறைவான எழுத்துப்பிழைகள், தனித்தமிழ் பயன்பாடு போன்றவற்றிற்கு முடிவெடிக்க tie ஏற்பட்டால் மதிப்பளிக்கலாம்; தற்போதைய நிலவும் தமிழ் விக்கி நடைக்கு மிகவும் விலகிய ஆக்கங்களை தவிர்க்கலாம். (இதனை கவனித்தல் கடினம் என்றால் autoconfirmed பயனர்கள்/சிறிதுகாலம் இங்கு பழகிய பயனர்களுக்கு மட்டும் இதனை நடத்தலாம்)
சற்றே விலகலாக...இந்த வாரக் கூட்டு முயற்சி போல இந்த மாதத் துறை என்று அறிவித்து ஒரே துறையில் கூடுதலானவர்களை பங்களிக்க வைக்கலாம். அத்துறையில் கூடுதல் கட்டுரைகளை எழுதியவருக்கு பாராட்டு/பரிசு அளிக்கலாம். மேலும் கூடுதலான சிவப்பு இணைப்புகளுக்கு கட்டுரைகளை எழுதியவர்களை கௌரவிக்கலாம்.

--மணியன் (பேச்சு) 15:57, 3 பெப்ரவரி 2013 (UTC)

பரிசுத் தொகை[தொகு]

// பரிசுத் தொகை இந்திய ரூபாய். 1000/- அல்லது அதற்கு ஈடான புத்தகங்கள்.// இந்தியாவிற்கு வெளியில் ஒருவர் வெல்வாராயின் 1000/- த்தின் சில மடங்குகள் அனுப்புவதற்காக செலவு செய்ய வேண்டிவரும். (ஊடகப் போட்டி கணக்கு விபரத்தில் பார்த்ததாக நினைவு) பரிசுத் தொகைக்கு ஈடான புத்தகங்கள் வழங்குவது சிறப்பாக இருக்குமென நினைக்கிறேன். இந்தியாவிற்கு வெளியில் எனின் சாதாரண அஞ்சலில் அனுப்புவது, தாமதமாயினும் செலவை மீதப்படுத்தும். --Anton (பேச்சு) 14:41, 3 பெப்ரவரி 2013 (UTC)

Anton சொல்வது உண்மைதான். எனது புத்தகத்தை சில வெளிநாட்டு நண்பர்களுக்கு அனுப்ப அதிகப் பணம் செலவானது. இந்திய ரூபாயில் 60 ரூபாய் மதிப்புள்ள புத்தகத்தை இந்திய அரசின் அஞ்சலகம் வழியாக சாதாரணமான வான்வழி அஞ்சலில் அனுப்ப 150 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை செலவானது. (நாடுகள் வாரியாகவும், எடை அளவிலும் இச்செலவுத் தொகை வேறுபடுகிறது). இதே புத்தகத்தை தனியார் நிறுவனம் (கூரியர் தபாலில்) மூலம் அனுப்ப முயன்றால் இந்தச் செலவுத்தொகை இரு மடங்கு செலவாகும். அரசு அஞ்சலகம் மூலம் அனுப்பப்படும் தபால்கள் எட்டு நாட்கள் முதல் 15 நாட்களுக்குள் சென்றடையும். தனியார் நிறுவனம் (கூரியர் தபால்) மூலம் அனுப்பப்படும் தபால்கள் மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் சென்றடைந்துவிடும். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:23, 3 பெப்ரவரி 2013 (UTC)
வெளிநாடு வாழ் விக்கியன்பர்களுக்கு மின்புத்தகமாக தந்துவிடலாம். மிகவும் எளியதாக இருக்கும். விகடன் போன்ற பெருபதிப்பகங்கள் தற்போது அவ்வசதியை இணையத்தில் தருகின்றன என்பதையும் பதிவுசெய்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:18, 13 மே 2013 (UTC)[பதிலளி]

இறுதிச் சுற்றுப் பரிந்துரை[தொகு]

இப்போட்டித் தொடர் குறித்து ஏற்கனவே வந்துள்ள கருத்துகளை ஊன்றிப் படித்த பிறகு பின்வரும் பரிந்துரையை முன்வைக்கிறேன்.

ஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய முக்கிய கட்டுரைகளின் அடிப்படையிலான தர வரிசையில் தமிழ் விக்கிப்பீடியா 48ஆவது இடத்தில் இருக்கிறது. இருக்க வேண்டிய 1000 முக்கிய கட்டுரைகளில் 800+ கட்டுரைகள் குறுங்கட்டுரைகள். விக்கியிடை இணைப்புகள், கட்டுரையில் தென்படாத குறிப்புகளைத் தவிர்த்து பத்தாயிரம் எழுத்துகளுக்குக் குறைவான கட்டுரைகளைக் குறுங்கட்டுரைகள் என்கிறார்கள். இது துல்லியமாக எத்தனை பைட்டு அளவு வரும் என்று சொல்ல முடியாவிட்டாலும் 15360 பைட்டைத் தாண்டும் கட்டுரைகள் இந்தக் குறுங்கட்டுரை வரையறையைத் தாண்டி விடும் என்று எதிர்பார்க்கலாம்.

எனவே, விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் பக்கத்தில் உள்ள குறுங்கட்டுரைகளை இனங்கண்டு அவற்றை 15360 பைட்டுகளைத் தாண்ட வைக்கும் போட்டியை அறிவிக்கலாம். ஒவ்வொரு மாதமும் கூடுதல் எண்ணிக்கையில் குறுங்கட்டுரைகளை விரிவாக்குபவர் வெற்றியாளர். கட்டுரையை விரிவாக்கும் முன் அது எத்தனை பைட்டு இருந்தது, ஒருவர் எத்தனை பைட்டு சேர்த்தார் என்பது பிரச்சினையில்லை. ஆனால், வெளியிணைப்புகள், உசாத்துணைகள் போன்று எளிதில் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து ஒட்டி வெட்டக்கூடிய குறிப்புகள் யாவும் 15360 பைட்டு தாண்டிய பிறகே இட வேண்டும். அதற்கு முன்பு செய்யும் பங்களிப்பு யாவும் உரை சேர்த்தலாக இருக்க வேண்டும். 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் பங்களிப்பாளர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.இதனைக் கண்காணித்து முடிவு எடுப்பது இலகுவாக இருக்கும். இதன் மூலம் குறுங்கட்டுரைகளை விரிவாக்குவது, முக்கிய கட்டுரைகளை விரிவாக்குவது, விக்கிப்பீடியா தர வரிசையில் முந்துவது என்று பல மாங்காய்களை ஒரே கல்லில் அடிக்கலாம் :)

மணியனின் கருத்தைப் படித்த பிறகு பணப்பரிசு கூட அவ்வளவு முக்கியமில்லை என்று தோன்றுகிறது. இதைப் பற்றியும் பங்களிப்பாளர்களின் கருத்துகளை வரவேற்கிறேன். எழுதும் ஒவ்வொரு கட்டுரையின் உழைப்பும் உண்மையில் பல நூறு ரூபாய் பணம் பெறுமதியுள்ளது. எனவே, இங்கு பணம் என்பது ஒரு அடையாளத்துக்காகவும் போட்டியைச் சுவாரசியமாக ஆக்கவும் மட்டுமே. அதைப் பெற்றுக் கொள்ள விரும்பாதவர்கள் பிற தமிழ் விக்கிப்பீடியா முயற்சிகளுக்கு அதை நன்கொடையாகத் தந்து விடலாம் :)

இந்தப் பரிந்துரை ஏற்றுக் கொள்ளக்கூடியது என்றால் சூன் மாதம் முதல் போட்டியைத் தொடங்கி விடலாம் :) --இரவி (பேச்சு) 10:09, 11 மே 2013 (UTC)[பதிலளி]

ஜெகதீஸ்வரன் யோசனைகள்[தொகு]

மிகவும் அருமையான திட்டம். இதன் மூலம் புதிய உத்வேகம் பயனர்களுக்கு கிடைக்கும். புதிய பயனர்கள், தொடர் பங்களிப்பார்கள் என இருவரையும் கவனத்தில் கொள்ளுதல் சிறந்தது.

1) பணப்பரிசு என்பதை விட புத்தகப்பரிசு சிறந்து. பரிசு புத்தகத்தினை வெற்றிபெறுபவரிடம் ஆலோசித்து அவருக்கு வேண்டிய புத்தகத்தினை வழங்குதல். தபால் போன்ற செலவீனங்களைத் தவிர்க்க, அச்சுப்புத்தகத்தினை தவிர்த்து, மின்புத்தகங்களை தருதல். இது வெளிநாடு வாழ் அன்பர்களுக்கும் ஏதுவாக இருக்கும். பரிசே வேண்டாம் என்று முடிவு செய்யும் வெற்றியாளர்களின் புத்தகத்தினை அருகிலுள்ள பள்ளி நூலகத்திற்கோ, பொது நூலகத்திற்கோ விக்கிப்பீடியாவின் இத்திட்டம் பெயரில் வெற்றிபெற்றவர் தருவதாக கொடுத்துவிடலாம்.

2) கட்டுரையின் அளவீட்டினை புதிய பயனர்களை கருத்தில் கொண்டு அமைக்கவும், தொடர் பங்களிப்பார்கள் எளிதில் இந்த அளவீட்டினை அடைந்து விடுவார்கள் எனும் போது, இரு அளவீடு முறைகளை பின்பற்றலாம் என்று நினைக்கிறேன்.

3) விக்கிப்பீடியாவில் தேவைப்படும் முக்கிய கட்டுரைகள் பட்டியலை முதன்மையாக கொண்டு புதிய கட்டுரைகளை தொடங்கினால் நிறைய முக்கிய கட்டுரைகள் குறுங்கட்டுரைகளாக கிடைப்பெறும். மணியன் அவர்களின் கூற்றுபடி மாதம் ஒரு/இரு துறை சார் கட்டுரைகளை உருவாக்கும் படி கேட்டுக் கொள்ளலாம்.

நன்றி,.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:37, 13 மே 2013 (UTC)[பதிலளி]

மணியன்[தொகு]

இரவி, முதற்கண் உங்கள் பரிந்துரை ஏற்கத்தக்கது.

  1. நீங்கள் கொடுத்துள்ள பட்டியல்படி ஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய முக்கிய கட்டுரைகளில் இரண்டுதான் தமிழில் இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தி :)
  2. நீண்ட கட்டுரைகள் 49 தான் உள்ளன, இதற்கு *9 எடை கொடுக்கப்படும்போது ஒவ்வொரு முயற்சிக்கும் 5 எடை கூடுதலாகக் கிடைக்கும். இவற்றை இந்தவார கூட்டு முயற்சி இயக்கமாக நடத்தலாம்.
  3. குறுங்கட்டுரைகளை விரிவாக்குவதை தொடர்போட்டியாக நடத்தலாம். ஒரு பிரச்சினை என்னவென்றால் இக்கட்டுரையை எடுத்துக் கொள்பவர் இதனை முன்னரே அறிவிக்க வேண்டும்; மற்றவர்களும் அம்மாதக் கடைசிவரை விலகி இருக்க வேண்டும். இல்லையென்றால் யார் எத்தனை பைட் என்று ஃபைட் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் :)
  4. இந்தப் பட்டியலில் உள்ள கட்டுரைகள் இற்றைப்படுத்தப்பட்டுக்கொண்டே இருபதால் இல்லாத கட்டுரைகளில் புதுப்பயனர்கள் குறுங்கட்டுரை எழுத தூண்டலாம்.
பரிசுத்தொகை பற்றி ஏற்கெனவே கருத்தளித்து விட்டேன். இருப்பினும் கொடுப்பேன் என்று அடம் பிடித்தால் முதலில் வாங்கிக் கொள்வேன் :)--மணியன் (பேச்சு) 06:43, 13 மே 2013 (UTC)[பதிலளி]

அராபத்[தொகு]

மிக நல்ல திட்டம்!!

  • விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகளில் உள்ள பட்டியலை சிறிது மாற்றி, நமக்கு தமிழகத்துக்கு ஏற்றார்போல ஒரு புதிய பட்டியலை தயார் செய்யலாம்.
  • அடுத்ததாக மணியன் சொல்லியபடி, மாதத் தொடக்கத்திலேயே பயணர்கள் தமக்கான கட்டுரைகளை தேர்ந்தெடுக்கும் படி செய்ய வேண்டும். இதில் பிற பயணர்களின் பங்களிப்பு கூடாது.
  • புத்தகங்களை பரிசாக கொடுக்கலாம். சில இணைய புத்தக கடைகள் இந்திய ரூபாய் 250/- க்கும் மேல் வாங்குபவர்களுக்கு இலவச அஞ்சல் சேவையை தருகின்றன (இந்திய அளவில் மட்டும்). அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

--அராபத் (பேச்சு) 07:16, 13 மே 2013 (UTC)[பதிலளி]

அன்ரன்[தொகு]

  • இந்தியாவிற்கு வெளியே மின்புத்தகங்களை வழங்குதல் நன்று. பரிசு தேவையற்றவிடத்து பதக்கம் வழங்கிப் பாராட்டலாம்.
  • வெற்றியாளர்களை முன் பக்கத்தில் (அல்லது மேலே) அறிவிக்கலாம்.
  • கட்டுரையில் "போட்டிக்குட்பட்ட கட்டுரை, ஆகவே பிறர் தவிர்த்தல் நலம்" போன்ற வசனங்களை இடம்பெறச் செய்யலாம். முடிந்ததும் பேச்சுப் பக்கத்தில் "நிறைவு" வார்ப்புரு இடலாம்.
  • வெற்றி பெற்ற கட்டுரைக்கும் வெற்றியாளருக்கும் வார்ப்புரு அறிவிப்பு இடலாம்.
  • விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய முக்கிய கட்டுரைகள் போட்டிக்கான கட்டுரை இலக்காக இருக்கட்டும்.

--Anton (பேச்சு) 12:33, 13 மே 2013 (UTC)[பதிலளி]

இரவியின் மறுமொழி[தொகு]

செகதீசுவரன், மணியன், அன்ரன், அராப்பத் - அனைவரின் கருத்துக்கும் நன்றி.

  • மின்புத்தகங்களை அளிக்கலாம் என்பது மிக நல்ல தீர்வு. எனவே, பரிசுத் தொகை / அச்சு நூல் / மின்னூல் ஆகியவற்றில் வெற்றியாளர் விரும்புவதை (அவர் இருக்கும் இடம் பொருத்து) அளிக்கலாம்.
  • இந்த இந்த கட்டுரைகளை இந்த மாதம் விரிவாக்க இருப்பதாக ஒவ்வொரு பயனரும் ஒரு பொதுவான பக்கத்தில் பட்டியல் தரலாம். போட்டியில் குழப்பத்தைத் தவிர்க்க என்பதை விட இரட்டிப்பு வேலையைத் தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்யலாம். குறிப்பிட்ட கட்டுரையில் குறுகிய கால இடைவெளியில் தொடர்ந்து பங்களிக்கும் போது, தொகுத்தல் முரண்பாடுகளைத் தவிர்க்க, வழமையாக பயன்படுத்தும் "வேலை நடந்து கொண்டிருக்கிறது" வார்ப்புருக்களைப் பயன்படுத்தலாம். மற்றபடி, போட்டியை முன்னிட்டு வேறு யாரும் ஒரு குறிப்பிட்ட கட்டுரையைத் தொகுக்கக்கூடாது என்பது அடிப்படை விக்கி தத்துவத்துக்கு முரணாக இருக்கும் என்பதால் அதனைத் தவிர்ப்பது நன்று. 15360ஆவது பைட்டை யார் சேர்க்கிறாரோ அவர் வெற்றியாளர் என்பது குழப்பதுக்கு இடமில்லாத விதியாக இருக்கும். மற்றபடி ஒரு சில கட்டுரைகளில் குழப்பம் வந்தாலும், விளையாட்டாக எடுத்துக் கொள்ளலாமே :) அவ்வளவு தீவிரமான போட்டி வேண்டுமா :) ஒவ்வொரு கட்டுரையை விரிவாக்கும் போதும் ஒட்டு மொத்தமாக பதிவேற்றி விட்டால் இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கலாம். (பி. கு. - @மணியன் - பைட், ஃபைட் சிலேடையை ரசித்தேன் :) )
  • முதலில், இந்தப் பட்டியலில் இருக்கிற 800+ கட்டுரைகளை விரிவாக்கி விட்டால், அடுத்து எந்தத் தலைப்புகளில் எழுதலாம் என்பது பற்றிச் சிந்திக்கலாம்.
  • கூட்டு முயற்சிக்கட்டுரைகளில் சில தலைப்புகளைப் பெருங்கட்டுரைகளாக வளர்த்தெடுப்பது நல்ல பரிந்துரை. மாதம் ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் இவ்வாறு செய்யலாம்.
  • இது வரை வைத்த போட்டிகள் எல்லாம் புதியவர்களை மட்டும் ஈர்க்க. இந்தப் போட்டியின் நோக்கமே ஏற்கனவே இருக்கிற பங்களிப்பாளர்களை மேலும் பங்களிக்கத் தூண்டுவது தான். எனவே, புதியவர்களை முன்னிட்டுப் பெரிய விதி மாற்றங்கள் வேண்டாம் என்று கருதுகிறேன். தவிர, நன்கு பங்களிக்கக்கூடிய பங்களிப்பாளர்கள் ஓரிரு மாதங்களிலேயே தேர்ந்த விக்கிப்பீடியர்களாக மாறுவதையும் காணலாம். எனவே, புதியவர்களுக்குப் பெரிய வசதிக் குறைவாக இருக்காது என்று நம்புகிறேன்.
  • 12 மாதம் தொடர் போட்டியில் அதிக முறை வெற்றி பெறுபவர்களுக்குத் தனிப்பரிசு சிறப்பாக இருக்கும் (இந்திய ரூபாய் 3000மும் வாகையாளர் பட்டமும் :) ).

சஞ்சீவி சிவகுமார்[தொகு]

அருமையான திட்டம். வாழ்த்துக்கள்..

  • மின்நூல்/ அச்சு நூல்/பரிசுத்தொகை இதில் வெற்றியாளர் விருப்புக்கேற்ப அளிக்கலாம்.
  • அச்சு நூல் தான் தொட்டுமகிழ பொருத்தமாயின் (இந்தியாவுக்கு வெளியில்) உள்ள விக்கிப்பீடியர்கள் மூலம் அந்தந்த நாட்டில் உள்ளூரில் நூல்களைப் பெற்று பரிசளிக்கலாம். த.வி பத்தாண்டு நிகழ்வுகளின் சிறப்பு பட்டறைகளை நடத்தும் நோக்குடன் இதை முடிந்தவரை இணைக்கலாம். இலங்கைக்கு இது சாத்தியமாகும் என நினைக்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:10, 30 மே 2013 (UTC)[பதிலளி]

வெற்றியாளர்களின் பெயர்களை இணைக்க வேண்டுகோள்[தொகு]

முதல் மாதத்தின் வெற்றியாளரான தென்காசியாருக்கு வாழ்த்துகள். இக்கட்டுரையின் இறுதியில் பரிசு என்பதற்கு அடுத்து வெற்றிப்பெற்றவர்களின் பெயர்களை மாதத்துடன் இணைத்து விடலாமே!. அத்துடன் முடிவுகள் பக்கத்தினையும் அருகிலேயே இணைப்பு கொடுக்கலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:39, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று. இது போன்ற விசயங்களை நீங்களே செய்து விடலாம் :). மாற்றுக் கருத்து வருமா என்று எண்ணக்கூடியவற்றுக்கு மட்டும் பேச்சுப் பக்கத்தில் உரையாடிவிட்டுச் செய்யலாம்.--இரவி (பேச்சு) 07:07, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]
நன்றி நண்பரே!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:33, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]

முக்கிய கட்டுரைகள் தர வரிசை - தெளிவு தேவை[தொகு]

கடந்த மாதம் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை விரிவாக்கிய பிறகு முக்கிய கட்டுரைகள் அடிப்படையிலான தரவரிசையில் முன்னேறுவோம் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அதே இடத்தில் இருக்கிறோம். வெறும் 0.42 புள்ளிகள் மட்டும் கூடியிருக்கிறோம். ஒரு வேளை 15360 பைட்டு போதுமான அளவாக இல்லையா? அவர்கள் கணக்கிடுவது போல் 10,000 characters வர தமிழில் எத்தனை எழுத்துகள் எழுத வேண்டும் அல்லது தோராயமாக எத்தனை பைட்டுகளைத் தாண்ட வேண்டும்? இல்லை, முக்கிய கட்டுரைகள் பட்டியலே தற்போது மேல் விக்கியில் உள்ள பட்டியலுடன் ஒத்துப் போகாமல் உள்ளதா? இல்லை, அவர்கள் தரத்தை அளவிடும் நிரலில் பிரச்சினையா?--இரவி (பேச்சு) 13:26, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

தரத்தை அளவிடும் நிரலில் பிரச்சினை உள்ளதுபோல் உள்ளது. எ.கா: போர் கட்டுரை வெறும் 4,699 பைட்டுகள் மட்டுமே ஆனால் இக்கட்டுரை "Long Articles" பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ளது. அவ்வாறே பலவும். --Anton (பேச்சு) 13:49, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]
http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias_by_sample_of_articles/Long_Articles#ta_.E0.AE.A4.E0.AE.AE.E0.AE.BF.E0.AE.B4.E0.AF.8D இங்கு] நீங்கள் சுட்டுவது போல் war என்னும் கட்டுரையைக் காண இயலவில்லையே, அன்டன்?--இரவி (பேச்சு) 17:35, 6 சூலை 2013 (UTC)[பதிலளி]
http://meta.wikimedia.org/wiki/Talk:List_of_Wikipedias_by_sample_of_articles#How_many_kilo_bytes_in_Tamil_equal_10000_characters.3F இங்கு] இது குறித்து விளக்கியுள்ளார்கள். கணினியில் ஒரு உரைக் கோப்பை வைத்துச் சோதித்துப் பார்த்ததில் உயிரெழுத்துகளும் அகர வரிசை உயிர்மெய் எழுத்துகளும் தோராயமாக மூன்று பைட்டு அளவு வருகின்றன. மற்ற எழுத்துகள் எல்லாம் ஆறு பைட்டுகள் வருகின்றன. எழுத்துகளை எண்ணச் சொன்னால் புள்ளி, கொம்பு, கொக்கி முதலியவற்றைத் தனி எழுத்தாக கணக்கு காண்கிறது. ஆங்கிலத்தில் அனைத்து எழுத்துகளுமே ஒரு பைட்டு அளவு தான் என்பதை நோக்கும் போது ஒருங்குறியாக்கதில் கோட்டை விட்டதை நினைத்து வருந்த வேண்டியிருக்கிறது. :( எனவே, இத்தனை பைட்டுகள் தாண்டினால் இத்தனை எழுத்துகள் என்பதைத் துல்லியமாகச் சொல்ல இயலாது என்று நினைக்கிறேன். 50000 பைட்டு அளவைத் தாண்டினால் மேல் விக்கியில் ஒரு கட்டுரையாக கணக்கு வைப்பார்கள் என்று கருதலாம். மற்றவை எல்லாம் குறுங்கட்டுரைகளாக ஆக வாய்ப்புண்டு. ஆனால், போட்டிக்கான வரையறையாக 50000 பைட்டுகளை வைத்தால் போட்டியாளர்களின் உற்சாகம் குன்றலாம் என்று நினைக்கிறேன். இப்போது உள்ளது போல் 15360 பைட்டுகளைத் தாண்டினால் போதும். ஆனால், நீளமான கட்டுரைகளுக்கு என்று தனிப்பரிசு தரலாம் என்று நினைக்கிறேன். கருத்துகளை வரவேற்கிறேன்.--இரவி (பேச்சு) 17:35, 6 சூலை 2013 (UTC)[பதிலளி]
தாங்கள் கூறியது போல 50000 பைட் என்பது உற்சாகம் குறைய வைக்ககூடியதே. எனினும் முக்கிய கட்டுரைகள் அனைத்தும் 15360 பைட் அளவினை தாண்டிய பின்பு அதே கட்டுரைகளை மேலும் விரிவு செய்ய கூடிய அளவில் போட்டியின் விதிமுறையை மாற்றியமைக்கலாம். இது அதிக காலத்தினை எடுக்கும் என்றாலும் எளிமையான தீர்வாக அமையும். நன்றி!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:57, 6 சூலை 2013 (UTC)[பதிலளி]
"எழுத்துகளை எண்ணச் சொன்னால் புள்ளி, கொம்பு, கொக்கி முதலியவற்றைத் தனி எழுத்தாக கணக்கு காண்கிறது." ஏன் இப்பிடி வருகிறது என்றால் எம் முன்னோர்கள் ஒருகுறியில் சொதப்பிய சொதப்பினால். ஒரு ஒருங்குறிக்கு ஒரு தமிழ் எழுத்து என்று இருந்தால் இந்த மாதிரிச் சிக்கல்களைத் தவிர்த்து இருக்கலாம். இப் என்ன செய்வது, நொந்து கொள்வதைத் தவிர. எல்லாவற்றையும் கடினமாகச் செய்யத் தமிழர்களுக்குப் பிடிக்கும் போல. (இது இந்த இழையுடன் தொடபற்றது.)--Natkeeran (பேச்சு) 19:03, 6 சூலை 2013 (UTC)[பதிலளி]

இரவி, எங்கேயா மாறிப் பார்த்துவிட்டேன்போல் இருக்கிறது. விளக்கியதற்கு நன்றி. எப்படியோ 15360 பைட்டுகளைத் தாண்டத்தான் வேண்டும்.

//நீளமான கட்டுரைகளுக்கு என்று தனிப்பரிசு தரலாம் என்று நினைக்கிறேன்.// 👍 விருப்பம் :45,865 பைட்டுகளுடன் இருந்த இரண்டாம் உலகப் போர் கட்டுரை நீளமான கட்டுரைகளில் இல்லை. தற்போது 52,867 பைட்டுகள் வரை உயர்த்தியுள்ளேன். ஆகவே அடுத்த மாதம் கட்டுரை நீளமான கட்டுரைகளில் இடம்பெற வேண்டும் அல்லவா? முக்கிய கட்டுரைகளில் நீளமான கட்டுரைகளைப் பார்ப்பது போன்ற ஏனைய நடுத்தர, குறும் கட்டுரைகளைப் பார்க்க முடியுமா?
குறிப்பு: முக்கிய கட்டுரைகள் 1000 இல் 1 த.வி.யில் குறைவாகவுள்ளது. en:Giovanni Pierluigi da Palestrina கட்டுரையினை யாராவது உருவாக்க முடியுமா? --Anton (பேச்சு) 03:13, 7 சூலை 2013 (UTC) துவக்கி Y ஆயிற்று --மணியன் (பேச்சு) 06:02, 7 சூலை 2013 (UTC) 👍 விருப்பம் --Anton (பேச்சு) 07:27, 7 சூலை 2013 (UTC)[பதிலளி]

15360 பைட்டுக்கே இந்த மாதம் உற்சாகம் குன்றியதாக உணர்கிறேன். இருப்பினும் தனிநபர் போட்டியாக இல்லாமல் குழுமப் போட்டியாக நடத்தினால் எந்தளவு ஏற்பிருக்கும் என தெரியவில்லை. இரண்டு மூன்று பேர் இணைந்து முன்பதிவு செய்து முதலில் வந்தால் அந்தக் குழுவிற்கு பரிசளிப்பது என்றவாறு போட்டி அமைக்கலாம். இது ஒரு கட்டுரைக்கான கூடுதல் தொகுப்புக்கள் என்ற வகையிலும் தரத்தை உயர்த்தும். மேல்விக்கியில் இதுவும் கவனிக்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்ளவும். ஒரே நபர் 50000 பைட் எழுதினால் அதுவும் தரம் குறைந்ததாகக் கருதப்படலாம்.--மணியன் (பேச்சு) 06:02, 7 சூலை 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --Anton (பேச்சு) 07:27, 7 சூலை 2013 (UTC)[பதிலளி]

அதிக பைட்டுகளுக்கான கட்டுரைகள்[தொகு]

அனைத்து விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய கட்டுரைகளில் சில போட்டிக்கு முன்னரே 15360 பைட்டை தாண்டியதால் அதை கட்டுரைப் போட்டியில் சேர்க்கவில்லை. சில 16000 பைட்டுகள் மட்டும் உள்ளன. அவற்றை அதிக பைட்டுகளுக்கான கட்டுரைப் பட்டியலில் கணக்குக் காட்டி விரிவுப்படுத்தலாமா?

அப்படிச் செய்தால் ஏற்கனவே 16000 பைட்டுகளை பல நபர்கள் விரிவுப்படுத்தி இருப்பர். மணியன் கூறியது போல் ஒரே நபர் விரிவுப்படுத்தல் சிக்கல் வராது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:30, 3 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் போட்டியை இரு பகுதிகளாகப் பிரித்து நடத்தலாம். அல்லது மூன்று பகுதிகளாக ?
  1. கட்டுரைத் தலைப்புகளுக்கானப் பட்டியலை விரிவுபடுத்தி அதில் இல்லாத கட்டுரைகளை குறுங்கட்டுரைகளாக ஆக்குவோருக்கு (குறைந்தளவாக 5000 பைட்டுகள்);
  2. குறுங்கட்டுரைகளை 15360 பைட்டுகளுக்கு விரிவுபடுத்துதல்;
  3. ஏற்கெனவே 15360 பைட்டுகள் உள்ளவற்றை 50k அளவிற்கு விரிவுபடுத்துபவர்களுக்கு--இதில் குழுக்களையும் அனுமதிக்கலாம்.

--மணியன் (பேச்சு) 11:20, 3 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

கடந்த இரு மாதங்களாக, ஆர்வமூட்டும் தலைப்புகளில் போதிய கட்டுரைகள் இல்லை என்ற குறை காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 பக்கத்தில் இருந்தும் குறுங்கட்டுரைகளை விரிவாக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். ஏற்கனவே 15360 பைட்டு தாண்டிய கட்டுரைகளை கட்டுரை எண்ணிக்கையில் கணக்கு காட்டாமல், நெடுங்கட்டுரைப் போட்டிக்கு என்று தனித்து முடிவுகள் பக்கத்தில் குறிக்குமாறு செய்யலாம். விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 பக்கத்தில் இருந்தும் கூட நிறைய கட்டுரைகளை உருவாக்கி விட்டோம் என்பதால் புதிய கட்டுரைகளை 5000 பைட்டு அளவுக்கு ஆக்குவது ஒத்து வருமா என்று தெரியவில்லை. அதே போல் குழுவாகச் செயல்படுவோரில் யாருக்குப் பரிசு வழங்குவது? அதே வேளை பள்ளி, பணியிடங்களில் green house, yellow house என்பது போட்டி போட்டு கொண்டு செயல்படும் ஊக்கத்தையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. முடிந்த அளவு போட்டி விதிகளை இலகுவாக வைக்கலாம் என்று நினைக்கிறேன். --இரவி (பேச்சு) 17:25, 23 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

முதன்மைக் கட்டுரைகளில் உள்ள உள்ளடக்கங்களை வெட்டி ஒட்டலாமா?[தொகு]

இதை நான் முந்தைய இரண்டு மாதங்களில் உள்ள கட்டுரைகளிலும் செய்திருக்கிறேன். அப்படிச் செய்யலாமா என விளக்கம் தரவும். ஒருவேளை கூடாது என்றால் இதற்கு முன் எனக்கு கிடைத்த 2 மாத பரிசுகளையும் மறுபரிசீலனை செய்யவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:15, 6 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

அறிமுகப் பகுதிக்காக முதன்மைக் கட்டுரைகளில் உள்ள உள்ளடக்கங்களை வெட்டி ஒட்டுவதில் தவறில்லை. ஆனால் முதன்மைக் கட்டுரைகளில் உள்ள உள்ளடக்கங்களை வெட்டி ஒட்டியே தனிக் கட்டுரை உருவாக்கினால் தவறு. குறித்த கட்டுரையில் அவ்வாறன தொகுத்தலை நீக்கினேன். (கூகுள் பார்வையில் வெட்டி ஒட்டல் தவறு. தேடுபொறியில் கட்டுரையை பின்னுக்குத் தள்ளிவிடும்)--Anton (பேச்சு) 13:27, 6 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

எனக்குப் புரியவில்லை. நான் செய்தது சரியா? தவறா? அறிமுகப்பகுதி என்றால் எதைச் சொல்கிறீர்கள்? எ.கா. நான் இரசிய புரட்சி கட்டுரையில் வரும் சுடாலின் பற்றிய குறிப்புகளை வெட்டி ஒட்டினேன். இம்முறை சரிதானா? அல்லது தவறா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:50, 6 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பிற ஆங்கிலமொழி இணையதளங்களில் இருந்து மொழிபெயர்ப்பு செய்து எழுதினால் தகுதிநீக்கம்செய்யப்படுமா? Muthuraman99 (பேச்சு) 14:02, 6 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

தகுதி என்பது எல்லாம் இங்கு பெரிய வார்த்தை. நாம் ஏதேனும் தளத்தில் உள்ளதை எடுத்தால் அத்தளத்தில் உள்ளவர்கள் அதற்கு உரிமை கோருவார்கள். சிக்கல் வரும். அதனால் இங்கு அது தவிர்க்கப்படுகிறது. அவ்வளவு தான். மொழிபெயர்ப்பு அப்படி பார்க்கப்படுவதில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:22, 6 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

முந்தைய மாதங்களின் கட்டுரைகளை நன்னோக்கு கருதி நோண்டப்போவதில்லை :) அதற்கு மாற்றாக, நீங்களே அந்தக் கட்டுரைகளை இன்னும் விரிவாக்கி விட்டால் நன்றாக இருக்கும். பிற கட்டுரைகளில் இருந்து பொருத்தமான பகுதிகளைப் புதிய பகுதியில் சேர்ப்பது வழக்கமான பணி. ஆனால், போட்டியைக் கருத்தில் கொண்டு 15360 பைட் எண்ணிக்கையைத் தாண்டிய பிறகு அதனைச் செய்தால் வரவேற்கத்தக்கதாக இருக்கும். --இரவி (பேச்சு) 17:20, 23 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

மிக விரிவான கட்டுரை தொடர்பாக ஒரு கேள்வி[தொகு]

அனைத்து விக்கிப்பீடியாவிலும் உள்ள கட்டுரைகளின் முழுப்பட்டியலை இதில் கொண்டுவந்தால் என்ன? சில கட்டுரைகள் தற்போது 16,000 பைட்டுகள் இருந்தாலும் அவற்றை என்னால் 1,80,000 பைட்டுகளுக்கு மாற்ற முடியும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:24, 31 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

"அனைத்து விக்கிப்பீடியாவிலும் உள்ள கட்டுரைகளின் முழுப்பட்டியல்" - இதற்கான இணைப்பைத் தர முடியுமா?--இரவி (பேச்சு) 22:29, 31 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள்

கட்டுரைப் போட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் மேலுள்ள பட்டியலில் இருந்து சில நீக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது. அதாவது அவை எல்லாம் ஏற்கனவே 15360 பைட்டுகளை தாண்டி இருந்தன அல்லவா. அதில் சில 16,000 பைட்டுகள் மட்டும் கொண்டுள்ளன. அதனால் விரிவான கட்டுரை பட்டியலில் எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் அனைத்தையும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:41, 31 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 பக்கத்திலேயே நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துக் கட்டுரைகளும் இடம் பெறுகின்றன. ஏதேனும் விட்டுப் போயிருந்தால் தலைப்புகள் பட்டியலில் சேர்த்து விட்டுப் போட்டியில் தொடருங்கள்.--இரவி (பேச்சு) 08:41, 2 செப்டம்பர் 2013 (UTC)

உசாத்துணைகள்[தொகு]

//15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். // பொதுவாக உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்றவை சேர்க்கப்படாமல் விடப்படுகின்றன. இதனால் ஆதாரமற்ற கட்டுரைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்புள்ளதால் உசாத்துணைகள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்க முடியாதா? --Anton (பேச்சு) 05:49, 1 செப்டம்பர் 2013 (UTC)

15360 பைட்டு தாண்டியவுடன் போட்டியாளர்கள் தாமாகவே அவற்றைச் சேர்த்து விடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன். இனி இதனையும் ஒரு விதியாக்கி விடுவோம். போட்டிக்கு வந்திருந்த சில கட்டுரைகளில் பதிப்புரிமை மீறலைக் கண்டு நீக்கியிருந்தீர்கள். இனி போட்டி நடைபெறும் மாதத்திலேயே இவற்றைக் கண்டு களைய முனைவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:41, 2 செப்டம்பர் 2013 (UTC)
சில கட்டுரைகளில், 15000 பைட்டுகளை எட்டும் முன்பே ஆதாரங்களைச் சேர்த்திருக்கிறேன். 15,000 பைட்டுகளை எட்டியவுடன், ஆதாரங்களின் அளவிற்கு ஏற்ப கூடுதலாக 3000 முதல் 10,000 பைட்டுகள் வரை விரிவாக்குகிறேன். இது விதிக்கு உட்பட்டதுதானே! ஏற்பீர்களா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:26, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

சமூக வலைத்தளங்களில் பரப்புரை[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் சமூக வலைத்தளக் கணக்குகளைத் தற்போது யார் இற்றைப்படுத்தி வருகின்றனர்? கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்புகளை அவ்வப்போது இட்டு வந்தால் நன்றாக இருக்கும். மொத்தப் பரிசு 30,000, வாகையர் பரிசுகள் உள்ளன என்பதைக் குறிக்கலாம். --இரவி (பேச்சு) 22:46, 11 செப்டம்பர் 2013 (UTC)

எதிர்கால நிகழ்வுகளையும், பரப்புரைகளையும் சமூக தளங்களில் மேற்கொள்ள விக்கிப்பீடியா:சமூக ஊடகப் பராமரிப்பு பகுதியை பயன்படுத்திக் கொள்ளவும் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:21, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஒருங்கிணைப்பாளர் மாற்றம்[தொகு]

சென்ற மாதப் போட்டியின் முடிவுகளை அறிவிப்பதுடன் அடுத்தடுத்த மாதங்களில் போட்டியை வழிநடத்திச் செல்ல தென்காசி சுப்பிரமணியன் முன்வந்திருக்கிறார். தேவைப்பட்டால் இன்னும் பலரின் உதவியையும் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். போட்டியின் முடிவுகள் யாவும் வெளிப்படையாகவும் புறவயமாகவும் இருப்பதால் யார் ஒருங்கிணைப்பாளர் என்பது ஒரு பொருட்டு இல்லை. அவரும் போட்டியில் பங்கெடுப்பதும் ஒரு பொருட்டு இல்லை. கடந்த நான்கு மாதங்களில் போட்டி விதிகளில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பது நல்ல விளைவுகளைத் தந்துள்ளது. எனவே, இனி போட்டியின் வடிவத்தில் பெரிய மாறுதல் தேவைப்படாது என்று எண்ணுகிறேன். நடுவர்கள் இல்லாமல் முடிவுகள் அறிவிக்கவும் போட்டி நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்து கொண்டு இன்னும் உந்துதல் பெற்றும் பங்களிக்க முடியுமா என்று எண்ணியதன் விளைவாகவே இந்தப் போட்டியை ஒரு பரிசோதனை முயற்சியாக வடிவமைத்தேன். இது போன்ற ஒரு போட்டிக்கு வரவேற்பு இருக்குமா என்று எனக்கே முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால், புதிதாக வந்து பங்கேற்கும் பல பயனர்களின் உற்சாகம் போட்டி சரியான திசையில் செல்வதையே குறிக்கிறது. தொடர்ந்து போட்டியில் பங்கேற்க இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். நானும் இயலும் போது களத்தில் குதிக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:06, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம், இரவி அவர்களே போட்டிக்கு பதிய விதிமுறை ஒன்றை முன்மொழிகிறேன், எழுதிமுடித்தவுடன் முடிவுகளில் சேர்த்தல் , காரணமாய்த்தான். புதிதாக விக்கிக்கு வருவோர் கட்டுரைப்போட்டிக்கு வந்தால் சிறிது சிறிதாகவே எழுதுவர். போட்டி முடிவுகள் பக்கத்தில் யார் முந்துகிறார் என்று தெரிந்துவிடும் என்று உள்ளது. ஒருவ்வர் சுமார் எட்டு கட்டுரை எழுதி மற்றவர்கள் மூன்று கட்டுரையில் நிற்க மற்றவர் முந்த வாய்ப்பில்லை என நினைப்பார். எழுதிமுடித்தவுடன் முடிவுகளில் சேர்காமல் இறதியில் மற்றவர்கள் சேர்க்கும் போது இவர்களை முந்த முடியாதென்ற மனப்பாங்கு தோன்றும். பின் கட்டுரைப்போட்டிப் பக்கம் வரமாட்டார். அதைவிடுத்து முதலே முடிவுகளில் இட்டால் இவரைப்பிடிக்கவேண்டும் என்ற நோக்கில் பல கட்டுரை எழுதுவார். மனதில் தோன்றியதைக் கூறினேன். பரிசீலிக்கவும். நன்றி.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:31, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நீங்க சொல்ல வருவது புரிகிறது. கடந்த மாதப் போட்டியில் சிலர்(?) முன்பே கட்டுரையை எழுதி முடித்து விட்டு கடைசி சில நாட்களில் முடிவுகள் பட்டியலில் இற்றைப்படுத்தினார்கள் என்று எண்ணுகிறேன். இவ்வாறு செய்வதால் போட்டி நிலவரத்தைப் பார்த்து அதற்கேற்ப எத்தனை கட்டுரைகள் எழுதலாம் என்று எண்ணுபவர்கள் வாய்ப்பைத் தவறவிடுவார்கள். ஆனால், அதற்கு முந்தைய மாதம் நந்தின் கடைசி நாளில் சுழற்றி அடித்தது போல் இது கூட போட்டியில் வெல்வதற்கான ஒரு தந்திரமோ என்னவோ? :) இப்படி உத்திகள் வகுத்து போட்டியில் பங்கேற்பது பார்க்கச் சுவையாக இருக்கிறது. எனவே, இதை ஒரு விதியாக எல்லாம் வலியுறுத்தி போட்டியை இறுக்கமாக மாற்ற வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரும் எவ்வளவு முடியுமா அவ்வளவு எழுதிக் கொண்டே இருப்பது தான் வெல்வதற்கான ஒரே வழி. It's all in the game. Welcome to the show :) --இரவி (பேச்சு) 09:38, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதவன் கூறிய யோசையால் போட்டியை கண்கானிப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். ஒவ்வொருவர் பங்களிப்புகளிலும் உள்சென்று எது கட்டுரைப் போட்டிக்கானது என்று கவனிக்க வேண்டிவரும். அதனால் ஒரு கட்டுரை எழுதிமுடித்தவுடன் அதை போட்டிக்கான பக்கத்தில் சேர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்பது என் கருத்து.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:28, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் தென்காசியாரின் கருத்திற்கு வழிமொழிகின்றேன்.--ரத்தின சபாபதி (பேச்சு) 19:58, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விதியாகப் பின்பற்றப்பட வேண்டியவை மட்டும் விதியாக வைக்கப்பட வேண்டும். ஒருவர் உண்மையிலேயே முடிவுகள் பக்கத்தில் சேர்க்க மறந்து விட்டுப் பிறகு சேர்க்கிறார் என்றால் அக்கட்டுரையைக் கணக்கில் கொள்ளாமல் நீக்கப் போகிறோமா? எழுதியவுடன் முடிவுகள் பக்கத்தில் சேர்க்க வேண்டும் என்பதை ஒரு வழிகாட்டாக, வேண்டுகோளாக, நினைவூட்டலாக மட்டும் வேண்டுமானால் வைக்கலாம்.--இரவி (பேச்சு) 18:47, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


ஆம் :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 01:05, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:40, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மறந்து விடுவாரா? பங்களிப்புகள் பக்கத்திற்கு சென்று பார்த்தாலே தெரிந்து விடுமே. இதில் மறப்பதற்கு என்ன இருக்கிறது. போட்டியில் பங்கேற்பவர் தன் பெயரை அக்கட்டுரை போட்டியில் இடுவதை கட்டாயம் ஆக்க வேண்டும். இல்லை என்றால் யார் யார் கட்டுரைப் போட்டியில் எழுதுகிறார் என்றே தெரியாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:47, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மேலே குறிப்பிட்டபடி, எழுதியவுடன் முடிவுகள் பக்கத்தில் சேர்க்க வேண்டும் என்பதை ஒரு வழிகாட்டாக, வேண்டுகோளாக, நினைவூட்டலாக மட்டும் வேண்டுமானால் பயனர் பேச்சுப் பக்கத்தில் வைக்கலாம். முக்கிய கட்டுரைகளை விரிவாக்க வேண்டும் என்பது தான் போட்டியின் நோக்கம் (spirit of the contest). அதற்கு பாதிப்பு ஏற்படுத்தாத எதனையும் ஒரு விதியாக வலியுறுத்த வேண்டாமே? எப்படி இருந்தாலும் அவராகவே முடிவுகள் பக்கத்தில் சேர்க்கும் கட்டுரைகள் தான் கணக்கில் கொள்ளப்படும். அதை இறுதி நாள் செய்தால் என்ன முதலிலேயே செய்தால் என்ன? எப்படியும் நிருவாகிகளின் வேலைப்பளு ஒன்றே. இதுவே ஒரு அஞ்சல் வழிப் போட்டி என்றால் கடைசி நாளில் ஒருவர் அனுப்பி வைக்கும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளைக் கூட கணக்கில் கொண்டேயாக வேண்டும். ஏன் முதலில் இருந்தே அனுப்பவில்லை என்று கேட்கமுடியாது.--இரவி (பேச்சு) 19:17, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

முதற் பக்கத்தில் வெற்றியாளர் குறித்த தகவலும் அவரின் படிமமும்...[தொகு]

கட்டுரைப் போட்டியில் ஒவ்வொரு மாதமும் 3 வெற்றியாளர்களை நாம் அறிவிக்கிறோம். அடுத்த மாதத்தின் 30 நாட்களை 10 - 10 - 10 எனப் பிரித்து 3 வெற்றியாளர்களையும் ஒருவர்பின் ஒருவராக முதற் பக்கத்தில் பெருமைப்படுத்தலாம். இதன் மூலம், மூவரையும் சிறப்பிக்கலாம். இந்தப் பரிந்துரை அன்டனின் பேச்சுப் பக்கத்தில் நடந்த ஒரு உரையாடலின் (பயனர் பேச்சு:Anton#கட்டுரைப் போட்டியை நிர்வகிக்க வேண்டுகோள்) பகுதியாகும்; ஆவணப்படுத்தலின் நோக்கில் இங்கும் பதிக்கின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:32, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஹி ஹி. இம்மாதம் இரவிக்கு கூடலின் கலைப்பு. என் தமக்கைக்கு குழந்தை பிறந்தது, மிகவும் தாமதமாக அண்டனை கட்டுரைப்போட்டி நிர்வகித்தலுக்கு வரவழைத்தது போன்ற காரணத்தால் 9,9,9 என்றே வைக்கலாம். அடுத்த மாதம் 10,10,10 வைக்கலாம்.

காட்சிப்படுத்தலை இவ்வளவு இறுக்கமாகப் பின்பற்றத் தேவையில்லை. ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள், முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தியவர்களுக்கான நேரத்தைக் குறைத்து புதிதாக வெல்பவர்களுக்கான காட்சிப்படுத்தல் நேரத்தைக் கூட்டவும் செய்யலாம்.--இரவி (பேச்சு) 03:51, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

புள்ளி முறை[தொகு]

ஆண்டு முழுமைக்கும் சேர்த்து இரண்டு வாகையர் பட்டங்கள்

  • 12 மாதங்களையும் சேர்த்து ஒரு வாகையர் பட்டம். பரிசுத் தொகை இந்திய ரூபாய் 3000/-
  • 12 மாதங்களையும் சேர்த்து மிகுதியான முறை மிகவும் விரிவான கட்டுரை உருவாக்குபவருக்கான சிறப்பு பரிசு வெல்பவருக்கு ஒரு வாகையர் பட்டம். பரிசுத் தொகை இந்திய ரூபாய் 3000/-

இத்துடன் புள்ளி முறையூடாக ஒரவருக்கு பரிசளிக்க முடியாதா? புள்ளி முறை பின்வருமாறு அமையலாம்:

  • 1ம் இடம் - 3 புள்ளிகள்
  • 2ம் இடம் - 2 புள்ளிகள்
  • சிறப்புப்பரிசு - 1 புள்ளி

ஒருவர் 3 தடவைகள் மாத்திரம் முதலிடம் பெற்று 12 மாதங்களுக்கான ஒரு வாகையாளராகலாம். புள்ளியடிப்படையில் 9 புள்ளிகள். இன்னுமொருவர் 1 தடவை முதலிடமும், 5 தடவைகள் இரண்டாமிடமும், 1 தடவை சிறப்புப்பரிசு பெற்றால் அவருக்கு 14 புள்ளிகள் கிடைக்கும். மாதாந்தப் பரிசைவிட வேறெதுவும் கிடைக்காது. ஆனால், அதிகம் உழைத்துள்ளார். அதேவேளை 12 மாதங்களையும் சேர்த்து வாகையர் ஆகுபவர் புள்ளி முறை மூலமான பரிசையும் பொறலாம். அந்நேரத்தில் விலக்கு உருவாக்கி இரண்டாமவருக்குக் கொடுக்கலாம். 2013 தொடர் கட்டுரைப் போட்டிப் பக்கத்தின் போட்டியாளர் நிலவரம் தொகுக்கம்போது இவ்வெண்ணம் உருவாகியது. இது ஓர் எண்ணக்கரு மட்டுமே. தேவையானால் அமுல்படுத்தலாம் அல்லது விட்டுவிடலாம். --Anton (பேச்சு) 01:58, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:29, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஏற்கனவே நான்கு மாதங்களாக வந்த கருத்துகளை அடுத்து நிறைய விதிகளை மாற்றி உள்ளோம். தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருப்பது சரியாகப் படவில்லை. ஆட்டத்தின் விதிகள் எளிமையாக இருப்பது நன்று. எல்லா ஆட்டங்களிலும் முதற்பரிசு தான் வெற்றி. மற்றவை ஆறுதலுக்கே. ஏற்கனவே, முதற்பரிசுக்குக் குறி வைப்பதை விடுத்து இரண்டாம் பரிசாவது பெறுவோமே என்ற செயல்பாட்டைக் காண முடிகிறது. வரும் மாதங்களில் அதையும் விடுத்து ஒன்றிரண்டு விரிவான கட்டுரைகள் மட்டும் எழுதும் செயற்பாடு வரலாம். இதே போல் புள்ளி முறை வருவதால் பயன், இடர் இரண்டும் வரலாம். கூடுதல் பரிசுகளுக்கான நிதி ஆதாரங்களையும் தேட வேண்டிய தேவை உள்ளது.--இரவி (பேச்சு) 03:50, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


அதிக கட்டுரைகள்[தொகு]

12 மாதங்களில் அதிக கட்டுரைகளைத் தொகுத்தவருக்கும் பரிசு அளிப்பது பற்றியும் யோசிக்கலாம். --Anton (பேச்சு) 02:37, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இதனை முன்னிட்டே வாகையர் பரிசு சேர்க்கப்பட்டது. 12 மாதங்களிலும் தொடர் செயற்பாடு இருப்பது நன்று. --இரவி (பேச்சு) 03:50, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஐயம் - முடித்தவைச் சுட்டல் & தலைப்பைத் தேர்தல் - குறித்து[தொகு]

கேள்வி 1- தொகுக்க விழையும் கட்டுரைகளை முன்பதிவு செய்வதன் நோக்கம் தெளிவு. ஆயின், முடித்த கட்டுரைகளை ”முடிந்தவை” பட்டியலில் (நானாக) குறிப்பிட்டால்தான் போட்டியில் பங்கெடுக்க இயலுமா? நான் என்பாட்டிற்கு கட்டுரைகளை விரிவாக்கிக்கொண்டு வந்தால் அப்பணி தானாக கவனிக்கப்பட்டு நான் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படுவேனா?

கேள்வி 2- போட்டிக்கான தலைப்புகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் இருந்துதான் எடுக்க வேண்டுமா? அதில் இல்லாத தலைப்பொன்றை தேர்ந்துகொண்டு பக்கத்தை உருவாக்கி பணியாற்றலாம் தானே? (இதைச் செய்யலாம் என்றே எண்ணுகிறேன், அடிப்படை நோக்கம் விக்கிக்குப் பங்களிப்பதுதானே!) ஆனால், அவ்வாறு செய்தால்... (முதல் கேள்வி இதற்கும்) போட்டி பங்கேற்பு தானாக நிகழுமா?

(ஒவ்வொரு பட்டியலாக இற்றைப்படுத்துவது காலவிரையமாக தோன்றுகிறது! எனினும், போட்டியின் ஒருங்கிணைப்பாளரும் இவ்வாறு மனித ஆற்றல் வாயிலாகத்தான் இதனைச் செய்யவேண்டும் என்றால், அவருக்குப் பதில் நாமே நம் பங்களிப்புகளை இற்றைப்படுத்துவது சாலச் சிறந்தது! அன்றி, அவருக்கு உதவ சிறப்புக் கருவிகள் இருக்குமாயின் நான் என் நேரத்தை மிச்சம்பிடித்துக்கொள்வேன், அதற்கே இக்கேள்விகள்!) நன்றி. --காவிநன் (பேச்சு) 05:02, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தங்களின் 2ஆம் கேள்விக்குரிய பதில் இங்கு முன்னுரையில் உள்ளது. //தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக் கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கம்.//--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:23, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நீங்கள்தான் ”முடிந்தவை” பட்டியலில் சேர்க்க வேண்டும். நீங்கள் ஒவ்வொன்றாகத் தொகுத்து முடிந்ததும் முடிந்தவை பட்டியலில் சேர்த்துவிடுங்கள். இறுதி 3 நாட்களுக்குள் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சேர்ப்பது வேலைப்பளுவை அதிகரித்துவிடும். --Anton·٠•●♥Talk♥●•٠· 06:20, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இடை இற்றை சிக்கல்[தொகு]

ஒருவர் கட்டுரைப் போட்டியில் கட்டுரையை விரிவாக்கும் பொழுது , இடையில் வேறு ஒருவர் கட்டுரையை வரிவாக்கி இலக்கை அடைந்தால் அக்கட்டுரை யார் கணக்கில் சேர்க்கப்படும்? நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:12, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

யார் 15360 பைட்டுகளை முதலில் சேர்க்கிறாரோ அவர்களின் கணக்கில். இதன் காரணம் என்ன என்றால் ஒருவர் பல கட்டுரைகளில் வேலை நடந்து கொண்டிருக்கிறது என வார்ப்புரு போட்டுவிட்டு மற்றவர்களை தடுப்பதற்கு கூட வாய்ப்புண்டு. அது போல் பல கட்டுரைகளையும் ஒரே நேரத்தில் தொகுத்தும் இதைப் போல் செய்ய இயலும். ஆனால் பெரும்பாலும் இப்படி நடக்க வாய்ப்பில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:41, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

முன்பதிவு செய்வதன் மூலம் இச் சிக்கலைத் தவிர்க்க முடியும். --Natkeeran (பேச்சு) 14:17, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
தென்காசியாரே அந்த கட்டுரையை நான் விரிவாக்கி கொண்டிருந்தேன்.வார்புரு இட்டு செல்லவில்லை.நான் விரிவாக்கும் நேரத்திலேயே அவர் பதிவு செய்ததால் என் பகுதி பதியபடாமல் திரும்பிவிட்டது.இது போல் இரண்டு கட்டுரைகளை அவர் செய்துவிட்டார்.அதுவும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இவை நடந்தன எனும் பட்சத்தில் நான் எப்படி பொய் கூறுகிறேன் என்று ஆகும்? மற்றவரை நான் தடுக்கிறேன் என்று எப்படி ஆகும்? வார்ப்புரு இட்டு இரண்டு மூன்று நாட்கள் ஆகியிருந்தால்கூட உங்கள் கூற்று மெய்யாகலாம்.இது போல் நான் விரிவாக்கும் கட்டுரை அனைத்திலும் அவர் மாற்றங்கள் செய்தால் என் உழைப்பு திருடப்படுகிறது அல்லவா? என் நேரங்கள் வீணாகிறது அல்லவா? நந்தினிகந்தசாமி (பேச்சு) 14:23, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இந்த பிணக்குகள் நடக்கும் வேலையில் நான் இரண்டு கட்டுரைகளை எழுதியிருப்பேன்.இப்பொழுது யார் தடுக்கப்படுகின்றார்? யார் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்?நந்தினிகந்தசாமி (பேச்சு) 14:31, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நந்தினி நான் உங்களைச் சொல்லவில்லை. ஏன் அந்த விதி உருவாக்கப்பட்டது என்பதற்கு காரணம் சொன்னேன். நீங்கள் பொய் சொன்னதாகவோ தவறாக நடப்பதாகவோ நான் எங்கும் சொல்லவில்லை. தவிர இந்த விதி நீங்கள் விக்கிப்பீடியாவுக்கு வரும் முன்பே கட்டுரைப் போட்டியில் இருந்தது. அதனால் உங்களைச் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நக்கீரன் முன்பதிவில் இருக்கும் கட்டுரை பயனர் புரிதல் பற்றியது. ஒருவர் ஒரு கட்டுரையை முன்பதிந்தால் அதை அவர் தான் விரிவாக்க வேண்டும் என்பதல்ல. யார் வேண்டுமானாலும் விரிவாக்கலாம். ஆனாலும் பயனர்கள் அதை பார்த்து வேறு கட்டுரைகளை விரிவாக்குவார்கள் என்ற காரணத்தால் அது கொடுக்கப்பட்டது. மற்றபடி முன்பதிந்தவர் தான் கட்டுரையை விரிவாக்க வேண்டும் என்று எந்த கட்டாய விதியும் கிடையாது.

இது தொடர்பான உரையாடல்கள் ஏற்கனவே நடந்துள்ளதால் ஒருவரை குற்றம் சொல்வதாக யாரும் நினைக்க வேண்டாம். கட்டுரைப்போட்டிகளின் அனைத்துப் பேச்சுப்பக்கங்களையும் பார்த்தால் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:41, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

அப்போது அந்த இரண்டு கட்டுரைகளுக்கும் என்னதான் தீர்வு? நான் விரிவாக்கிய கட்டுரைகளை அவர்கணக்கில் சேர்க்க வேண்டும் என்பது தான் விதியா? அப்போது நான் எதற்கு தனியாக கட்டுரைகளை விரிவாக்க வேண்டும்? ஸ்ரீ கர்சன் பெயரிலேயே நான் விரிவாக்கி விடுகிறேனே...... நான் கேட்பது விளக்கமல்ல, தீர்வு. நந்தினிகந்தசாமி (பேச்சு) 14:48, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரை போட்டி நடத்தும் நிர்வாகிகள் இதற்கு தீர்வு அளிக்குமாறு அருள்கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் நந்தினிகந்தசாமி (பேச்சு) 14:51, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நந்தினி நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது அடுத்த கட்டுரைகளை விரிவாக்குங்கள். சிக்கல் உள்ள இரண்டு கட்டுரைகளைப் பற்றி நாம் பிறகு உரையாடிக்கொள்ளலாம். தற்போது கட்டுரைப் போட்டியில் கவனம் செலுத்தவும். நீங்கள் கேட்ட இக்கேள்வி எல்லாம் முன்பு என்னால் இரவியிடம் கேட்கப்பட்டது. ஆனால் இதுபோல் நடக்காது என நினைத்தோம். தற்போது நடந்துவிட்டதால் தீர்வு நிச்சயம் உருவாக்கப்படும். நீங்கள் இதுபற்றி சிந்தனை செய்யாமல் கட்டுரைப் போட்டியில் கவனம் செலுத்தவும்.

தற்போது கட்டுரைப்போட்டி நிர்வாகம் அண்டனும் நானும் பார்த்துக்கொள்கிறோம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:56, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நந்தினிகந்தசாமி, தங்கள் நேரத்தை வீணாக்குவதற்கு மன்னிக்கவும். ஒரு கட்டுரையினை தொகுப்பதற்கு முன், {{தொகுக்கப்படுகிறது}} வார்புரு இணைத்து, சேமித்துவிட்டு பின்பு தொகுக்க துவங்குங்கள். மேலும் ஒரு நேரத்தில் 10 கட்டுரைகள் வரை முன்பதிவு செய்யலாம். (இது நீங்கள் கேட்ட தீர்வு அல்ல எனினும், இனி இதுபோல நிகழாதிருக்க இது வழிவகுக்கும். தீர்வு போட்டி நிர்வாகிகளின் கைகளில்)--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:17, 28 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் நந்தினிகந்தசாமி, நீங்கள் குறிப்பிட்ட கட்டுரைகளைக் குறிப்பிட முடியுமா? --Anton·٠•●♥Talk♥●•٠· 06:49, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
கடுங்கரி,தொலைநோக்கி ஆகிய கட்டுரைகள் Anton .நந்தினிகந்தசாமி (பேச்சு) 16:32, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

அண்டன் வேறு வழியில்லை. ஒருவர் இற்றைப்படுத்தும் போது இன்னொருவர் இற்றைப்படுத்தக்கூடாது என எவ்விதியும் இல்லை. அதனால் இந்த 2 கட்டுரைகள் ஸ்ரீகர்சன் கணக்கிலேயே வரவேண்டும். இருந்தாலும் பயனர்:AntonO, பயனர்:Ravidreams கருத்துகளும் வேண்டும். இல்லை என்றால் ஏற்கனவே புயலால் தாக்கப்பட்டவன் பூகம்பத்தால் தாக்கப்படுவேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:44, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தொலைநோக்கி கட்டுரையில் ஏறத்தாழ 4 கிலோ பைட்டுகளை சிறீகர்சன் சேர்த்திருக்கிறார். இதை அவருடைய கணக்கில் கொள்ளலாம். கடுங்கரி கட்டுரையில் அவருடைய பங்களிப்பு குறைவே. இருந்தாலும், பிற விதிகளை இறுக்கமாக செயற்படுத்துவது போலவே, 15360 பைட்டைக் கடப்பவரே வெற்றியாளர் என்று விதியை மதித்து சிறீகர்சனுக்கு அக்கட்டுரையினை கணக்கு வைப்பது முறை. நந்தினியின் முறையீட்டை ஏற்று அவர் தன்னுடைய செயற்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ள நன்னோக்கையும் கருத்தில் கொள்ள வேண்டும். அடுத்த முறை இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கலாம். பயனர்கள் தங்கள் மணல்பெட்டிகளில் கட்டுரையை விரிவாக்கி முடித்து விட்டு கட்டுரைப் பெயர் வெளிக்கு நகர்த்துவது இது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கும். இருந்தாலும், நேரடியாக கட்டுரைப் பெயர்வெளியிலேயே எழுதுவதே தொகுப்பு மாற்றங்களைக் கவனிக்க நல்ல வழியாக இருக்கும். --இரவி (பேச்சு) 08:17, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

கடுங்கரியில் ஸ்ரீ கர்சன் சேர்த்தவையும் ஆங்கிலத்திலேயே சேர்த்தார்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:28, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நந்தினி, சுட்டிக் காட்டியதற்கு நன்றி. வரலாற்றுப் பக்கத்தில் பைட்டு அளவைப் பார்த்த நான், என்ன சேர்த்தார் என்று பார்க்கத் தவறி விட்டேன். இப்படி ஆங்கில உரையை வெட்டி ஒட்டுவது செல்லாது. இந்தத் தொகுப்பைக் கணக்கில் கொள்ளாமல், கட்டுரையை நந்தினியின் கணக்கில் சேர்க்கலாம். இது போன்ற விசயங்களை வருங்காலப் போட்டி விதிகளில் தெளிவுபடுத்த வேண்டும். தொலைநோக்கி கட்டுரையில் அவர் செய்துள்ள மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலேயே உள்ளன. --இரவி (பேச்சு) 08:38, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஏற்றுக் கொள்கிறேன் அண்ணா, பேசிக்கிட்டே இருந்தா எப்படி? எப்போதான் முடிவை அறிவிப்பீர்கள்:).ஆவலாக உள்ளேன். சீக்கிரம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:44, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

இல்லை பாட்டியம்மா. தற்போதுள்ள நேரப்பாற்றாக்குறையால் முடிவுகள் வரத் தாமதமாகும். கட்டுரைகள் விதிமுறைக்குட்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறதா என நான் ஸ்ரீகர்சனுக்கு மற்றும் தான் பார்த்துள்ளேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:11, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

), சரி , செய்யுங்கள் நாரதரே.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:41, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

அப்படியே அழைக்க வேண்டுகிறேன். அண்ணா, கிண்ணா என்றெல்லாம் அழைத்தால் நேரா நான் பாட்டியம்மா என்று அழைப்பேன். எங்குமே எல்லோரிடமும் அப்படித்தான். அதனால் ஜாக்கிரதையாக இருக்கவும். சொல்லிப்புட்டேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:53, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டிக்கான பதக்கம் - மாதிரி[தொகு]

கட்டுரைப் போட்டிக்கான பதக்கம் இனி பின்வரும் வடிவில் அமையும்.

முதலிடம்
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
திசம்பர் 2013 கட்டுரைப் போட்டியில் கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் வென்றமைக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --Anton·٠•●♥Talk♥●•٠· 16:19, 6 சனவரி 2014 (UTC)[பதிலளி]
இரண்டாம் இடம்
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
திசம்பர் 2013 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --Anton·٠•●♥Talk♥●•٠· 16:19, 6 சனவரி 2014 (UTC)[பதிலளி]
சிறப்புப் பரிசு
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
திசம்பர் 2013 கட்டுரைப் போட்டியில்விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு வென்றமை இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --Anton·٠•●♥Talk♥●•٠· 16:19, 6 சனவரி 2014 (UTC)[பதிலளி]

--Anton·٠•●♥Talk♥●•٠· 16:19, 6 சனவரி 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:46, 21 சனவரி 2014 (UTC)[பதிலளி]

முடிவுகள்[தொகு]

இன்று நான்காம் திகதி. விரைவாக முடிவுகளை இற்றைப்படுத்தினால் நன்று. நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:09, 4 மார்ச் 2014 (UTC)

சும்மா லுலுலுலு[தொகு]

விக்கிப்பீடியா 2013 தொடர் கட்டுரைப் போட்டி. இதில் 2013 தொடர் கட்டுரைப் போட்டி என்று தான் உள்ளது. பின்னர் எப்படி 2014ல் நடந்த ஐந்து மாதப்போட்டிகளுக்கும் பரிசுகள் கொடுக்கலாம்? அதை உடன் நீக்க வேண்டும். :)

வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:41, 10 சூன் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் வழிமொழிகின்றேன் தென்காசி அண்ணா! நீங்களும் அன்டன் அவர்களும் இணைந்து இந்த மாபெரும் சிக்கலுக்கு உரிய தீர்வைக் காணுங்கள்! நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை என்பதைப் பறைசாற்றும் வகையில் 2013 இல் இருந்த வேகம் 2014 இல் பயனர்களிடம் காணப்படவில்லை! வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்:) போட்டியில் காட்டிய வேகத்தை தோடர்ந்தும் காட்டி விக்கிப்பீடியாவில் ஒரு கலக்குகலக்குங்கள்!!!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:33, 11 சூன் 2014 (UTC)[பதிலளி]
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த ஆண்டைத் தான் தங்கள் அடையாளமாக கூறுவார்கள். அது போல போட்டி தொடங்கிய ஆண்டை இங்கு குறிக்கிறோம். பத்தாண்டு கொண்டாட்டத்தைக் குறிக்கும் முகமாக ஆண்டு முழுதும் போட்டி என்று திட்டமிட்டோம். முதல் சில மாதங்களில் விதிகள், வழிமுறைகளைச் செம்மைப்படுத்த இந்த அவகாசம் உதவியது. ஆனால், பிற்பகுதியில் பல்வேறு காரணங்களால் போதிய பங்கேற்பு இல்லை. எப்படியாயினும், இது போல் திறந்த முறையில், நடுவர்கள் தேவையின்றி, தொடர் போட்டி நடத்தும் ஒரு வடிவத்தை வரையறுக்க முடிந்ததில் எனக்கு நிறைவே. இனி வரும் காலங்களில் கூடிய பரிசுத் தொகையுடன் மூன்று அல்லது ஐந்து மாதத் தொடர் போட்டியாக நடத்துவது இன்னும் சிறப்பான பங்கேற்பைப் பெற்றுத் தரும் என்று எண்ணுகிறேன். --இரவி (பேச்சு) 17:25, 15 சூன் 2014 (UTC)[பதிலளி]
முதல் முயற்சி என்றளவில் இந்தப் போட்டி தனது நோக்கத்தை நிறைவேற்றுவதில் வெற்றி கண்டுள்ளது. என்னாலும் பிற்பகுதியில் போதிய அளவில் பங்கேற்க இயலாது போனது. இதனை ஒருங்கிணைத்த, விதிமுறைகளை ஒழுங்குபடுத்தி கண்காணித்த, முடிவுகளை அறிவித்து வந்த அனைத்து விக்கிப்பீடியர்களுக்கும் (முக்கியமாக இரவி, தென்காசியார், அன்டன்) இதில் உற்சாகத்துடன் பங்கேற்ற நந்தினி, பார்வதிசிறீ, குறும்பன், ஸ்ரீகர்சன் போன்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் எனது நன்றிகள். நெடுங்காலம் நடந்ததால் சற்றே தளர்ச்சி ஏற்பட்டது; குறுங்காலப் போட்டிகள் நல்லப் பயனைத் தரும் என நானும் நம்புகிறேன். --மணியன் (பேச்சு) 03:59, 16 சூன் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் குறுங்காலப் போட்டிகளில் தான் சுவாரசியமும் அதிகமாக இருக்கும். அனைத்துப் பயனர்களும் முண்டியடித்துக் கொண்டு போட்டியில் பங்கு பெறுவார்கள் எண்ணுகின்றேன். நீண்ட காலப் போட்டிகள் என்றால் அனைவரும் நீணட திட்டமிடலோடு செயற்படுவார்கள் ஆனால் குறுகிய காலம் என்றால் இந்தா நான் முந்துறன் நீ முந்துறன் என்று உற்சாகமாகச் பங்குபற்றுவார்கள்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 05:41, 22 சூன் 2014 (UTC)[பதிலளி]

கட்டுரை எண்ணிக்கை முரண்பாடு[தொகு]

விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்படுத்திய கட்டுரைகள் (மொத்தம் 572), விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி#போட்டியின் முடிவுகள் (மொத்தம் 569) ஆகிய இரண்டிலும் உள்ள கட்டுரை எண்ணிக்கை முரண்படுகிறது. குறிப்பாக, ஆகத்து, அக்டோபர், பெப்ருவரி ஆகிய மூன்று மாதங்களில் தலா ஒரு கட்டுரை கூடுதலாக வருகிறது. நான் ஏதாவது தவறாக கணக்கில் எடுத்துள்ளேனா என்று பார்த்துச் சொல்ல முடியுமா? நன்றி. கவனிக்க: அன்டன், சிறீகர்சன்--இரவி (பேச்சு) 07:13, 12 சூலை 2014 (UTC)[பதிலளி]

@இரவி அவர்களே, ஒரு மாதம் விரிவாக்கப்பட்ட கட்டுரை 15360 பைட்டுகளிற்குக் குறைந்த பின்னர் மீளவும் இன்னொரு மாதம் விரிவாக்கப்பட்டதால் இவ்வாறு நிகழ்ந்திருக்கக்கூடும். விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்படுத்திய கட்டுரைகள் பக்கத்தில் இரு முறை இடம்பெற்ற கட்டுரைகளை இனங்கண்டு நீக்கினால் எண்ணிக்கை சரியாகக்கூடும்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:28, 12 சூலை 2014 (UTC)[பதிலளி]
@இரவி அவர்களே, இவற்றைச் சரிபார்த்து பயனர்:Shrikarsan/2013 கட்டுரைகள் பக்கத்தில் இட்டுள்ளேன். மொத்தமாக 540 கட்டுரைகள் வருகின்றன. இம்மாற்றத்தைப் பார்க்கவும்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:46, 12 சூலை 2014 (UTC)[பதிலளி]
நன்றி, சிறீகர்சன் . நுட்ப வல்லுநர்களுக்கு அளிக்க ஒரு பதக்கம் வடிவமைத்துத் தர முடியுமா? அந்தப் பதக்கத்தை முதலில் உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன் :)--இரவி (பேச்சு) 08:02, 14 சூலை 2014 (UTC)[பதிலளி]
கட்டுரைகள் எண்ணிக்கை 539 வருகின்றது. மெசபொத்தேமியா இருமுறை பட்டியலில் இடம்பெற்றிருந்தது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:27, 16 சூலை 2014 (UTC)[பதிலளி]

பயனர்:Parvathisri 539ஆ 569ஆ?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:44, 16 சூலை 2014 (UTC)[பதிலளி]

தென்காசி அண்ணா 569 தான் ஆனா 539!!!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 04:29, 17 சூலை 2014 (UTC)[பதிலளி]
ஒவ்வொரு மாதமும் எத்தனைப் பங்களிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் என்று பார்த்தால் வேறு கணக்கு. ஆனால், ஒட்டு மொத்தமாக ஆண்டு முழுதும் தனித்துவமான எத்தனைப் போட்டியாள்கள் கலந்து கொண்டார்கள் என்று பார்த்தால் குறைவாகவே வரும். கட்டுரை எண்ணிக்கையும் அவ்வாறே :) 539ஐ இறுதி எண்ணிக்கையாக கொள்வோம். --இரவி (பேச்சு) 05:15, 17 சூலை 2014 (UTC)[பதிலளி]

சனவரி மார்சு 2014 போட்டிகளுக்கான சிறப்புப்பரிசுத் தொகையை என்ன செய்யலாம்?[தொகு]

சனவரி, மார்ச்சுக்கான விரிவான கட்டுரைக்கு சிறப்புப் பரிசுகள் கிடையாது என்பதால் அதை பின்வருமாறு வழங்கலாமா?

எடுத்துக்கட்டுக்கு ஜ்னவரியில் இரண்டாம் பரிசு பெற்ற இருவருக்கும் தலா 250 தராமல் ஒவ்வொருவருக்கும் 500 தரலாம். ஜனவரிக்கு கணக்கு சரியாகிவிடும்.

மார்ச்சில் 4 பேர் இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 125 வழங்காமல் தலா 250 வளங்கினால் இன்னும் சரியாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:51, 16 சூலை 2014 (UTC)[பதிலளி]

ஆம், ஏற்கனவே அப்படித் தான் பரிசுத் தொகையைக் கணக்கிட்டுள்ளேன். கூட்டிக் கழித்துப் பாருங்கள். கணக்கு சரியாக வரும் :)--இரவி (பேச்சு) 05:13, 17 சூலை 2014 (UTC)[பதிலளி]

பரிசு[தொகு]

நன்றி. கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கான பரிசுத்தொகை எனது வங்கிக் கணக்கில் சேர்ந்துள்ளது. இதற்காக போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் திரு.இரவி அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.--ச.ஹோபிநாத் (பேச்சு) 16:46, 21 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

கையெழுத்தை போடுவதற்கான பக்கம் வேறு கோபி. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:50, 21 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும். எனக்கு அந்தப் பக்கத்தை அடைவதற்கான வழி தெரியவில்லை. இரவி அவர்கள் தந்திருந்த இணைப்பு நேரடியாக திட்டத்தின் பக்கத்திற்குத் தான் செல்கின்றது. அதனால்தான் உரையாடல் பக்கத்தில் ஒப்பமிட்டேன். சரியான இணைப்பினை தந்துதவினால் அதில் ஒப்பமிட்டுக் கொள்வேன்.--ச.ஹோபிநாத் (பேச்சு) 16:56, 21 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/பரிசுத் தொகை பெற்றமைக்கான ஒப்பம் https://ta.wikipedia.org/s/3zs7 --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:15, 21 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி. நான் ஒப்பமிட்டுவிட்டேன்.--ச.ஹோபிநாத் (பேச்சு) 02:25, 22 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]